மதுரை மட்டன் குழம்பு

மதுரை மட்டன் குழம்பு

தேதி: October 22, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

மட்டன் - 3/4 கிலோ
குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:
தேங்காய் - 1/2 மூடி (சிறு துண்டுகளாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் - 8
கசகசா -1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க:
பட்டை இலை - 1
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
கல்பாசி - சிறிது
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2 ( பெரியது)
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

குக்கரில் மட்டன் ஒரு தேக்கரண்டி குழம்பு பொடி, மிளகாய் தூள், அரை உப்பு சேர்த்து 3 விசில் வைக்கவும்.
குக்கரில் மட்டன்
வெறும் வாணலியில் சோம்பு போட்டு நிறம் மாறியதும் கசகசா சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
தாளித்தல்
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காய் ,வெங்காயம் சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வதக்கவும்.
வதக்குதல்
வறுத்த தேங்காய், கசகசா, சோம்பு கலவையை ஒன்றாக மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதை குக்கரில் சேர்க்கவும்.
அரைத்த விழுது
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு வகைகளை தாளிக்கவும். இதனுடன் வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் மீதி குழம்பு பொடியை சேர்த்து கிளறவும்.
தக்காளி வதக்கல்
அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் குக்கரில் சேர்த்து உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
கொதிக்க விடல்
சுவையான மதுரை மட்டன் குழம்பு ரெடி. சாதம், இட்லி என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.
மதுரை மட்டன் குழம்பு


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்