அன்னாபிஷேகம்

சென்ற 24ம் தேதி ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாள்.

பொதுவாகவே தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில் விஷேசம்தான்.

ஐப்பசி மாத பௌர்ணமியில் தமிழ் நாட்டின் எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும்

சமைத்த அன்னத்தை அபிஷேகம் செய்து, புடலங்காய் போன்ற காய்களை மாலை போல அணிவித்து, மற்ற காய்கறிகளையும் வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

மதுரையில் ஆதி சொக்கநாதர் கோவில் (இது மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது) அன்னாபிஷேக அலங்காரம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும்.

இப்போதெல்லாம் பக்தர்கள் கோவிலில் தேவாரம், திருவாசகம், சிவ புராணம், சிவ பஞ்சாட்சர ஸ்லோகம், அன்னபூர்ணாஷ்டகம் இவற்றை குழுவாக அமர்ந்து படிக்கிறார்கள். அற்புதமாக இருக்கிறது.

கோளறு பதிகத்தை சிவ சன்னிதியிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்து, படிக்கலாம்.

எல்லோரும் சிவனருள் பெற வேண்டுகிறோம்.

Average: 5 (1 vote)

Comments

மீதி எல்லாவற்றையும் விட்டு இது தான் என் கருத்தைக் கவர்ந்தது. :-) அது காரட் மாலை போல இருக்குமோ! அல்லது முழுப் புடலங்காயை மாலையாக்கியிருப்பார்களா? அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது சீதா.

‍- இமா க்றிஸ்

நான் அன்னாபிஷேகம் பார்த்தது இல்லை சீதாம்மா. உங்கள் பதிவு பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. அடுத்தவருடம் இறைவன் அருளால்பார்க்க வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்போது அனைத்து கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. நாங்களும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் கண்டு மகிழ்கிறோம்

Be simple be sample