அந்த இரெண்டு நிமிடங்கள்...

உண்மை சம்பவம். எப்ப நினைச்சாலும் கண்ணு கலங்கிடும்.

காலை மணி சரியா 7.40 அலாரம் அடிச்சது. டைம் ஆச்சு சீக்கரம் கிளம்புங்கன்னு பசங்கள அவசர படுத்தினேன். வழக்கம்போல விளையாடிகிட்டே அண்ணனும் தம்பியும் போட்டிபோட்டுகிட்டு லிப்ட் பட்டனை அழுத்தினாங்க. லிப்ட் கதவு திறந்து பசங்க உள்ள போகும் போது வெளிய ஒருத்தர் வந்தார்.

புதுசா இருந்தார். குனிந்த தலை நிமிரவே இல்லை. அந்த தளத்தில அவரை நான் பார்த்ததே இல்லை. என்னை கடந்து எனக்கு வலபக்கம் இருக்கும் வீடுகளை நோக்கி போனார். ஆனால் அப்பவும் நிமிரவே இல்லை. ஏதோ தப்பா இருக்கேன்னு தோனுச்சு, எனக்கு நேரா இருந்த வீட்டுக்கு முன்னாடி போய் நின்னு பாக்கெட் ல கைவிட்டார்.

உடனே எனக்கு புரிஞ்சு போச்சு. அதுக்கு மேல என்னால அங்க நிக்க முடியல. ஆனா என்னுடைய வியூகம் சரிதானான்னு தெரிஞ்ச்சுக்க வீட்டுக்குள்ள போகாம இருந்தேன். அய்யோ நான் நினைச்சது சரிதான். திரும்பி வந்தார் , ஆனால் இப்பவும் குனிந்த தலை நிமிரவே இல்லை. அதுக்கு மேல நிக்கவே முடியல வேகமா வீட்டுக்குள்ள போனேன். எவ்வளவு முயற்சி பன்னியும் சிரிப்பை என்னால் நிறுத்தவே முடியல.

எத்தனாவது மாடில இருக்கார்ன்னு தெரியல. ஆனா எங்க வரோம் போறோம்ன்னே தெரியாமல் பாக்கெட்ல கைவிட்டு சாவி எடுத்து கதவ திறக்க முயற்சி செய்தார்.

கதவ திறக்க முடியலன்னு நிமிர்ந்து பார்த்துட்டு திரும்பவும் குனிந்த தலை நிமிராமல் மாடி படி ஏறினார். அந்த இரெண்டு நிமிடமும் மொபைல் மட்டும் தான் பார்த்தார் பாவம் சரியா வீடு போய் சேர்ந்தார இல்லையான்னு தெரியல.

என்னை தான்டி போகும் போதே புரிஞ்சது. என்னால சிரிப்பை நிறுத்த முடியல. கண்கலங்க , வயிறு வலிக்க சிரிச்ச அந்த நிமடங்களை என்ன சொல்ல...

1
Average: 1 (1 vote)

Comments

பயமுறுத்திட்டு காமிடி அக்கிட்டிங்களே,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

;))) ஜனவரில ஒரு பயணம் போனோம். எங்களுக்கு முன்னால போன ஆள் எங்க ரூம் முன்னால நின்று சாவியைப் போட்டு குடை குடைன்னு குடைஞ்சு திறக்க ட்ரை பண்ணிட்டு இருந்தார். நாங்க, 'அது எங்க ரூம்,' என்றதும் அசடு வழிஞ்சுது.

சும்மாவே மனுஷர் அப்படித் தான் இருப்போம். அவர் ஃபோன்ல ஏதாவது முக்கியமான கம்யூனிகேஷன்ல இருந்திருக்கலாம். இருங்க, ஒரு நாளைக்கு நீங்களும் யார்ட்டயாச்சும் மாட்டுவீங்க. ;)

ஹும்! இதை வைச்சு ஒரு பதிவு தேத்திட்டீங்க! கெட்டிக்காரி! ;)

‍- இமா க்றிஸ்

ஹா ஹா ரேணு சிரிச்சு சிரிச்சு எனக்கும் கண்ணு கலங்கிடுச்சு. ஏன்னா நானும் ஒருவாட்டி 9வது மாடிக்கு பதிலாக 8வது மாடியில் இறங்கி வீட்டைக் காணோம்னு தேடினேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இங்க இன்னும் அந்த நிலைமைக்கு வரலை. அவர் திறந்திருக்கிற வீட்டுல போய் உட்கார்ந்து காபி கேட்டிருந்தா, அந்த வீட்டு அம்மா சீரியல் பார்த்தே போட்டு கொடுத்துருப்பாங்க ;) .

Be simple be sample