பல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே

ஹாய் பிரண்ட்ஸ்....

என் பையனுக்கு ஒன்னரை வயது இருக்கும் போது கீழே விழுந்து பாதிபல் உடைந்துபோனது, அப்பொழுது டாக்டரிடம் சென்று காட்டியபோது செப்டிக் ஆகாமல் இருக்க இன்ஜக்சன் மட்டும் போட்டு விட்டார், விழுந்து முளைக்கிற பல் தானே என்று நாங்களும் சாதாரணமாக விட்டுவிட்டோம், இப்பொழுது என் பையனுக்கு 4 வயது ஆகிறது, பல் வெளியே தள்ளி கலர் மாறுகிறது, என் பையன் தூங்கும் போது கீழ் உதட்டை மேல் பல்லினுள் விட்டபடி தான் தூங்குவான், இதனால் தான் பல் தள்ளுகிறதா, அப்றம் பல் கலராக மாறுகிறது இதனால் நேற்று நாங்கள் மீண்டும் மருத்துவரிடம் சென்று கலந்தோசித்தோம், அவர் சொன்னார் பையனுக்கு கலர் மாறிருக்கிற பல்லை சரி செய்துவிடலாம் ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார், எங்களுக்கு இதை பற்றி எதுவும் தெரியவில்லை, இந்த சிகிச்சையின் பெயர் என்னனு உங்க யாருக்காவது தெரியுமா தோழிகளே, அப்றம் என் பையன் கீழ் உதட்டை கடித்தபடி தூங்குவதால் வளர வளர கீழ் தாடை வளர்ச்சி ஆகாமல் நின்றுவிடும் என்றும் கூறினார், பல் விழுந்து முளைக்கும் வரை பல் மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டே இருக்கணும் என்றும் கூறினார், இதை பற்றின உங்கள் பதிலை சொல்லுங்கள் தோழிகளே

தயவு செய்து யாராவது பதில் தாருங்கள்

தோழி கவலைப்படாதீர்கள்...
பல்லில் வலி ஏதேனும் இருப்பதாக சொல்கிறானா ? அப்படி இல்லையென்றால் விழும் வரை காத்திருப்பது நல்லதுன்னு தோணுது . சும்மா சொல்லவில்லை இரண்டு விஷயங்களை நான் கண்டுள்ளேன் .
முதல் , என் மாமா மகன் இப்படிதான் படி தட்டி விழுந்து பல் பாதி உடைந்து துருத்திக்கொண்டு இருந்தது . பல மாதங்கள் கழித்து ஊர் சென்ற நான் அவன் பல் நிறம் மாறி இருப்பதை கண்டு கேட்டேன் . விழும் பல் தானே விழுந்து முளைக்கும்போது சரியாகிவிடும் என மருத்துவர் சொன்னதாக சொன்னார் . நானும் உங்களை போலதான் யோசித்தேன் . எந்து பல் ஆகிவிடுமோ என்று . ஆனால் இப்போது அவனுக்கு பல் விழுந்து முளைத்தும் விட்டது நார்மலாக உள்ளான் . பல் , தாடையில் எந்த வித்யாசமும் இல்லை .

இரண்டு , என் தங்கைக்கு விழுந்து முளைத்த பல் பந்தலில் முட்டி உடைந்து விட்டது . எங்கள் மருத்துவர் பல் எடுக்க வேண்டாம் மீதி பல்லை ஒட்டிவிடலாம்னு சொன்னார் . அவளுக்கு மீதி பல்லும் கட்டி வருடங்கள் கடந்தும் நன்றாகவே உள்ளது . நீங்கள் கூறியதுபோல கலர் மட்டும் சமீபத்தில் மாறியது . அதனை வெண்மை ஆக்கிவிட்டோம் (அவசியம் என்றதால்) .

உங்கள் பையனுக்கு இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் அந்த பல் விழுந்து விடும் தோழி . அவ்வப்போது கீழ் உதடு காயப்படும் ஒத்துக்கொள்கிறேன் . நீங்கள் குழந்தையிடம் சொல்லி அதனை கடிக்காமல் இருக்க பழக்கப்படுத்துங்கள் . இது தானாக சரியாகிவிடும் . சின்ன வயதில் சிறிய அளவிலான பிரச்சனைக்கு பெரிய ட்ரீட்மெண்ட்ஸ் அவசியமில்லை என்பது என் கருத்து . நீங்கள் யோசிங்க....

///ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார், ///எத்தனை பல் பிரச்சனை?

Teeth whitening:

இது இரண்டு வகையில் செய்யப்படுகின்றன . பற்களில் மட்டும் செய்யப்படுவது முதல் வகை . இதில் ஹைட்ரஜன் பெராக்சைடு மூலப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது .

இரண்டாம் வகை பல் வேர்களில் இருந்து செய்யப்படும் சிகிச்சை.

எப்படி செய்தாலும் இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல . 6 - 12 மாதங்கள் வரை மீண்டும் சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம் . பிறகு வெண்மை நிறம் மங்கும்போது கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும் .

தோழி இது ஒப்பனை போன்று . பல் என்பது எலுப்பின் வடிவம் . அதன் நிறம் இளம் மஞ்சள் . இதனை மாற்றி தன் பொருட்களை வியாபாரம் செய்யவே கம்பெனிகள் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா என கேட்க துவங்கி இன்னைக்கு புதினா , வரை கொண்டுவந்து இருக்கிறார்கள் .

பிள்ளை தெரியாமல் செய்த பிழை , வலி இல்லையெனில் நிறத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள் தோழி . பொறுத்தது பொறுத்தீர்கள் இன்னும் ஒரு வருடம் சென்றால் தானாக பல் விழுந்து பிரச்சனை விலகிவிடும் .

பல் வெளியே தள்ளி கலர் மாறுகிறது - அந்தப் பல் இறந்து போய்விட்டது. அதனால் தான் முன்னே தள்ளுவதும் என்று நினைக்கிறேன். பாற்பல் விழுந்த பின் அடுத்தது முளைக்கும். ஆனால் இப்போது விழுந்து விட்டால் ஏழு வயது வரை இடைவெளி இருக்கலாம்.

கீழ் உதட்டை மேல் பல்லினுள் விட்டபடி தூங்குவதாலும் இருக்கலாம். இருந்தாலும் உள்ளே பல் வேர் விடுபட்டு இருந்தால் தான் இப்படி ஆகும் என்று நினைக்கிறேன். பல் முழுமையாக உயிரோடு இருந்தால் இப்படி இருந்திராது; அந்தப் பல்லின் நிறமும் மாறி இராது.

அந்த ஒரு பல் மட்டும் நிறம் மாறுவதன் காரணம் அது உடலோடு தொடர்பை இழந்திருக்கலாம். மீதிப் பற்கள் வெண்மையாக இருக்கும் வரை யோசிக்க வேண்டியது இல்லை.

கலர் மாறியிருக்கிற பல் இன்னும் ஐந்து ஆறு வருடங்களில் விழப் போகிறது. வைட்னிங் சிகிச்சை செய்து ஆகப் போவது என்ன? செலவு, அலைச்சல் + குழந்தையை வருத்தி அழ வைப்பது!! திரும்ப முளைக்கும் பல் இந்தச் சிகிச்சை இல்லாவிட்டாலும் மீதிப் பற்களின் நிறத்தில் வரும்.

'ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார்,' அப்படியானால் எல்லாப் பற்களும் பழுப்பாக இருக்கிறது என்கிறீர்களா? புரியவில்லை.

கீழ் தாடை - அது எப்படி வளர்ச்சி ஆகாமல் நிற்கும்! அப்படி இராது என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரம் தூங்குகிறார். க்ளாம்ப் போட்டு நிரந்தரமாகப் பூட்டி வைத்தால் வேண்டுமானால் வளர்ச்சி நிற்கலாம். அவர், பற்கள் சரிந்து வளரும் என்றிருந்தால் நம்ப வேண்டும். இது!!

நீங்கள் வேறு நல்ல பல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

கவனிக்க வேண்டியவை...
உதடு காயம் ஆகலாம்.
உள்ளே பல் உடைந்த இடத்தில் உராய்வினால் தொற்று ஏற்படலாம்.
பல் விழும் சமயம் முற்றாக வெளியே வராமல் மீதி உள்ளே இருக்கலாம். உள்ளே இருந்தால் அப்போது கண்டுகொள்ளலாம். இப்போதே இதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.
இப்போதே பல் விழுந்தால் அந்த இடைவெளி பல் விழுந்து முளைக்கும் வயது ஆகும் வரை இருக்கும். இது முளைக்கும் முன் பக்கத்துப் பல் விழுந்து முளைக்க ஆரம்பித்தால் நேரே வளராமல் சற்று விலகி வளரலாம். இதைப் பற்றி மருத்துவரிடம் தேவை வரும் சமயம் விசாரிக்கலாம்.

பல் விழுந்து முளைக்கும் வரை பல் மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டே இருப்பது... உண்மையில் மிக நல்ல விடயம். நான் மேலே சொன்ன கவனிக்க வேண்டியவற்றை எல்லாம் அவராகவே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் கவனித்து யோசனை சொல்லுவார். ஆனால் அதற்கும்... உங்கள் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் வேறு பல் மருத்துவரைத் தான் நாடுவேன்.

‍- இமா க்றிஸ்

பல்லில் வலி இருக்குறது என்றெல்லாம் சொல்லவில்லை மா, கலர் மாறுகிறது அசிங்கமாக இருக்கிறது என்று தான் நாங்கள் மருத்துவரிடம் சென்றோம், ஆனால் பிரஷ் பண்ண விட மாட்டேன்கிறான், கையில பிரஷை எடுத்தாலே ஒரே அழுகை தான்,... அப்றம் மற்ற குழந்தைகள் எல்லாம் அவனை கிண்டல் செய்கிறார்கள் பல்லு தள்ளிவருவதால் இதனால் தான் முதற்கொண்டு மருத்துவரிடம் சென்றோம்...

இரண்டு பல் கலராக மாறி இருக்கு, நேற்று மீண்டும் மருத்துவரிடம் சென்றோம், அவர் சொன்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம்னு முடிவெடுத்து சென்றோம், ஆனால் முன் உள்ள தள்ளியிருக்கின்ற ஒரு பல்லை எடுத்துவிட்டு தான் இந்த ட்ரீட்மெண்ட் செய்யணும் என்றார், நீங்க சொன்னது போல பல்லை எடுத்து பையனை வருந்தவைக்க மனசுவரல அதனால் வீட்டுக்கு வந்துவிட்டோம், அந்த மருத்துவரும் பையன் அழறான், நீங்க வாயை கடிக்கும் பழக்கத்தை முதலில் மாற்ற முயற்சி செய்ங்கனு சொன்னாங்க, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல்லை செக் பண்ணிட்டு இருக்க சொன்னாங்க, ஆமா சிஸ் நானும் பல் விழும் வரை அமைதியாகவே இருக்கலான்னு முடிவு பண்ணிட்டேன், உங்க பதிலுக்கு நன்றி சிஸ் :-)

ஆமா மேம் மருத்துவரும் இரண்டு பல் இறந்துவிட்டதாக தான் சொன்னார்,.. இரண்டு பற்கள் கலராக மாறி இருக்கிறது மேம், infection ஆகிருக்கு என்றும் சொன்னார், பல் கடிக்கும் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்க என்றும் சொன்னார், பையனுக்கு பல் உடைந்து போன சிறு வயதில் கூட பல் வெளியே தல்லவில்லை, அவன் பல்லை கடித்தபடி இருப்பதால் தான் பல் வெளியே வந்துவிட்டது என்று வீட்டில் அணைவரும் சொன்னார்கள், தூங்கும் சமயம் நாங்களும் பையனுக்கு கடித்திருக்கும் பல்லை வெளியே எடுத்து எடுத்து விடுவோம், ஆனால் சில நொடியிலேயே அவன் மீண்டும் கடிக்க ஆரம்பிச்சிடுவான், மேலும் மேலும் எடுத்து விட்டால் தூக்கத்திலிருந்து விளித்து அழ ஆரம்பிச்சிடுவான், இப்போ வரைக்கும் இந்த பழக்கத்தை மாற்ற முடியல, எப்படி மாற்ற போறோமோ என்று தான் கவலையாக உள்ளது, நாங்களும் வேறு ஒரு மறுத்துவரிடமும் காட்டலாம்னு தான் நினைக்கிறோம் மேம், உங்க பதிலுக்கு நன்றி மேம்

பாடசாலையில் பிள்ளைகள் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நிச்சயம் ஏதாவது செய்தாகத் தான் வேண்டும். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது மேலோட்டமான பதில். உங்கள் குழந்தையின் நலன் தான் முக்கியம்.

;)) ஆளுக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்றீங்க. ;) என்னைப் ப்ளீஸ் பண்ணணும் என்கிற அவசியம் இல்லை. யோசிக்காதீங்க. ;)

‍- இமா க்றிஸ்

ஆமா மேம் பிள்ளைகள் கிண்டல் செய்வதால் தான் நான் மருத்துவரிடம் சென்றேன், ஆனால் அவர் ஆறுமாதத்திற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், பையன் ரொம்ப பயப்படுறான் அதனாலும் தான் அவர் அப்படி செய்தார், நான் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்தேன், இங்கு தான் மருத்துவரிடம் சென்றோம், இன்று ஊருக்கு கிளம்புறோம், ஊருக்கு போனபிறகு வேறொரு மருத்துவரிடம் காண்பிக்கலாம்னு இருக்கோம், பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று,..

:-) இருவரும் எனக்காக பதில் சொலிருக்கிறீங்க, அதற்கு ஏற்ற மாதிரி நானும் பதில் சொல்லணும் இல்லையா, அதற்காக தான் மேம்,.. இனி ப்ளீஸ் என்றெல்லாம் சொல்லி கேட்க மாட்டேன் :-)

மேலும் சில பதிவுகள்