தேங்காய் பர்ஃபி

தேங்காய் பர்ஃபி

தேதி: November 2, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 25 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மெல்லியதாக துருவிய தேங்காய் துருவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் / பச்சை கற்பூரம்
நெய் - சிறிது
முந்திரி - தேவைக்கு (விரும்பினால்)


 

தேங்காய் துருவலின் வெண்மையான பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரதை அடுப்பில் வைத்து சர்க்கரையும், தேங்காய் துருவலையும் கொட்டி சிறுதீயில் வேக வைக்கவும்.
தேங்காய் துருவல்
மெதுவாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான கலவையாகும்.
தேங்காய் சீனி
அதன்பின்னர் நீர்த்து சில நிமிடங்களில் ஓரங்களில் நுரைக்க துவங்கும். கைவிடாமல் மிதமான தீயில் கிளறி விடவும். சிறிது நேரத்தில் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
தேங்காய் பாகு
இப்போது ஏலக்காய் சேர்க்கவும். தேங்காயின் வெண்மை நிறம் மாறாமல் இருக்க வேண்டும். இப்போது முந்திரி சேர்க்க விரும்பினால் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
தேங்காய்
நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். லேசாக சூடு இருக்கும் போதே துண்டுகளாக்க கத்தியால் கோடிடவும். ஆறிய பின்பு துண்டுகளாக்கவும்.
தேங்காய் பர்ஃபி
சுவையான சுலபமான தேங்காய் பர்ஃபி தயார்.
தேங்காய் பர்ஃபி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்