ரிப்பன் பக்கோடா

ரிப்பன் பக்கோடா

தேதி: November 2, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கடலை பருப்பு - ஒரு கிலோ
பச்சரிசி - கால் கிலோ
உப்பு - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய சுண்டைக்காய் அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வாணலியில் கடலை பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடலை பருப்புடன் அரிசியை சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலை பருப்பு
அரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு கப் எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
கடலை மாவு
இந்த கலவையில் ஊற வைத்த பெருங்காயத் தண்ணீரை ஊற்றி விட்டு மேலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்து தளர்வாக பிசைந்துக் கொள்ளவும்.
பக்கோடா மாவு
உரலில் ஓலை பக்கோடாவிற்கு பிழிய பயன்படுத்தும் அச்சை போட்டு மாவை நிரப்பிக் கொள்ளவும்.
முறுக்கு உரல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிழிந்து விடவும். மற்றொரு பக்கம் திருப்பி விட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும்.
ஓலை பகோடா
சுவையான மொறுமொறு ரிப்பன் பக்கோடா ரெடி.
ரிப்பன் பக்கோடா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு, ( கண்டு பிடித்துவிட்டேன் நீங்கள் தான் அன்னி )

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

பார்க்கவே அழகா இருக்கு.. ஆனா எனக்கு இந்த மாதிரி வரணுமே !! :)

- பிரேமா

ரொம்ப நன்றி

நன்றிங்க செய்து பாருங்க கண்டிப்பா நல்லா வரும்.