கார பூந்தி

கார பூந்தி

தேதி: November 3, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கடலைமாவு - 3/4 கப்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
உப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 3 பல்
முந்திரி - 6
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - கால் தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு மாவை கரைக்கவும்.
கடலை மாவு கரைசல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டி அல்லது சாரணியை எண்ணெயின் மேல் பிடித்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து அதில் ஊற்றி தேய்த்து விடவும்.
பூந்தி தோய்த்தல்
பூந்தி பொரிந்து எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் சாரணியை வைத்து எண்ணெயை வடிகட்டி எடுக்கவும். இதேப் போல் கரைந்து வைத்திருக்கும் மாவை பூந்திகளாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பூந்தி பொரித்தல்
பூண்டை தட்டி வைக்கவும். முந்திரியை சிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, முந்திரி, பூண்டு போட்டு லேசாக வதக்கவும். அதனுடன் மிளகு தூள் தூவி பிரட்டவும்.
மிளகு தூள் பிரட்டல்
பொரித்து வைத்திருக்கும் பூந்தியுடன் வறுத்தவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். சுவையான மொறு மொறு கார பூந்தி தயார்.
கார பூந்தி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தீபாவளி கலக்கலா இருந்திருக்கு. :-)

‍- இமா க்றிஸ்