வெந்தயம் ஓமம் கருஞ்சீரகம்

நான் சிறுவயதிலிருந்தே குண்டாக இருப்பேன். படிப்படியாக அதிகரித்து 90.5 கிலோ வரை கூடிவிட்டேன். உடல் எடை குறைய என்ன செய்தாலும் அதை உருப்படியாக செய்வதில்லை.. எனவே எனக்கு எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியாக நான் இதை பின்பற்ற தொடங்கினேன். தொடங்கிய மூன்று நாட்களில் வித்தியாசம் தெரிந்தது. நம்பிக்கையுடன் தொடர்ந்ததில் ஒரு வாரத்தில் நன்றாக வித்தியாசம் தெரிந்தது. தற்போது ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் நான்கு கிலோ வரை குறைந்து இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறைந்தது 90 நாட்கள் இந்த முறையை பின்பற்றினால் பத்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது. விரும்பிய அளவிற்கு எடையை குறைத்த பின்னரும் வாழ்நாள் முழுக்க இதனை உட்கொள்ளலாம்.. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்று சொல்கிறார்கள். வேண்டிய அளவு எடை குறைந்தவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் என்பதை ஒரு டீஸ்பூன் ஆக மாற்றி தினமும் உட்கொள்ளலாம் என்று இருக்கிறேன். இது உடல் எடை, வயிற்றுக்கோளாறு முதல் கேன்சர் வரை பல்வேறு நோய்களை தீர்ப்பதாகவும் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே நீங்களும் பின்பற்றி பலனை காணுங்கள். நன்றி ..

வெந்தயம் - 250g
ஓமம் - 100g
கருஞ்சீரகம் - 50g

லேசாக வறுத்து பொடி பண்ணி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவில் படுக்க செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் (1 டேபிள்ஸ்பூன்) இந்த பொடியை கலந்து குடியுங்கள். பச்சை தண்ணீரில் குடித்தாலும் சரிதான். கொஞ்சம் கசக்கும். சகித்துக் கொள்ளுங்கள்.

முதலில் தொப்பை குறைந்து பின்னர் முதுகு கை தொடை ஆகிய பகுதிகள் குறைவதை காண முடிகிறது..

இதைவிட எளிதான பாதுகாப்பான சிக்கனமான மருந்தை கண்டு பிடிக்கவே முடியாது.

முடிந்தால் காலை எழுந்தவுடன் 40 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்..

சத்தான உணவுகளை உண்ணுங்கள்.

நன்றாக உறங்குங்கள்.

மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இருங்கள்.

வெறும் 90 நாட்கள் இதை பின்பற்றி என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் ....

சுபத்ரா ....பாலூட்டும் தாய்மார்கள் பின்பற்றலாமா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

குறிப்பிற்கேற்ற தலைப்பு இருந்தால் தேடுபவர்களுக்கும் சுலபமாக இருந்திருக்கும். முடிந்தால் எடிட் செய்து விடுங்கள்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்