மன வேதனை குறைய வலி கூறுங்கள் தோழிஸ்

தோழிகளே! கணவன் மனைவிக்குள்
பிரச்சனை வருவது இயல்பே.

புரிதல் இல்லை, விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை என்றால் இல்லற வாழ்க்கையில் சந்தோசம் என்பது எப்படி இருக்கும்?

என்னுடைய கணவரை நான் புரிந்த கொண்ட அளவிற்கு அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை.

மாமியார் மருமகள் பிரச்சனையே எங்கள் வீட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல் ஆகி விட்டது.

மாமியார்க்கு நான் என்ன செய்தாலும் பிடிக்கவில்லை.
(சமையல் செய்வதில், வீட்டினை சுத்தமாக வைப்பதில்)
அவர்களை நான் தாயாக தான் நினைத்து அனுசரித்து செல்கிறேன்.
மாமியார் செயல்பாடானது இப்போது எனக்கு பிடிக்கவில்லை.

காரணம் கணவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவாங்க.அவர் இல்லாத நாட்களில் அன்பாக நடந்து கொள்வார் மாமியார். இருக்கும் நேரத்தில் கணவணிடம் உன் மனைவி செய்வது எனக்குப்பிடிக்கவில்லை சாப்பாடு நல்லாவே இல்லை அது சரி இல்லை இதுசரியில்லை என்று சொல்லி விட்டு பிரச்சினையை உருவாக்கி விட்டு சென்று விடுவார்கள்.

பின்பு என்ன நடக்கும் கணவர் என்னிடம் வந்து சண்டை போடுவார்.
சண்டை எல்லை மீறும். நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ள மாட்டார்.
நான் தப்பே செய்யாவிட்டாலும் தவறு என் மீது தான் என்று கூறுவார். அதையும் தாங்கி கொண்டு இரவு முழுவதும் கண்ணங்களை நனைத்து கொண்டு மறுநாள் காலை வேலையினை தொடங்க செல்வேன்.
மாமியார் எதுவும் தெரியாதது போல் என்னிடம் பேச வருவார்கள் நான் பேசமாட்டேன்.குழந்தைகளை கவனித்து கொண்டு நான் சமையல்,மாமியார்க்கு தேவையான வேலைகளையும் செய்து கொடுத்து கொண்டு நாட்களை நகர்த்துகிறேன்.

ஆனாலும் கணவரிடம் கூறை கூறுவதும் மட்டும் அவர்கள் நிறுத்துவதில்லை .

கணவர் அம்மாவின் பேச்சை கேட்டு என்னிடம் பேசாமல் மாதக்கணக்கில் இருப்பார்.

10 வருடம் ஆகி விட்டது. தினமும் பிரச்சனை. வேலைக்கு போனால் போன் கூட பேச மாட்டாங்க.

எனக்கு வாழவே பிடிக்கவில்லை தோழிகளே.

கணவரோ உன்னை கல்யாணம் பண்ணதால நிம்மதி இல்லை.உங்க அம்மா வீட்டுக்கு போ.

நான் நிம்மதியா இருப்பேனு சொல்லுறாரு. நான் என்ன பண்ண தோழிகளே.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?குழந்தைக்கு என்ன வயது என்று கூறுங்கள்?

குழந்தை பற்றி குறிப்பிடாமல் மாற்றம் தேவையா என்று கேள்வி கேட்பது போல பதிவிட்டு இருக்கிறீர்கள்..

என்ன மாற்றம் எதிர்பார்க்கிறீர்கள்?உங்கள் மனதினுள் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.. தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறீர்களா? இல்லை கொஞ்ச காலம் அம்மா வீடு செல்லலாம் என்று நினைக்கிறீர்களா?

பத்து வருடங்கள் இப்படி வாழ்ந்து இருக்கிறீர்கள்.
நீங்கள் நினைக்கும் மாற்றம் உங்கள் குழந்தையின் கல்வியையோ குழந்தையின் மனநிலையையோ எந்தவிதத்திலும் பாதித்து விடக்கூடாது.. இதை நீங்கள் நிச்சயமாக யோசித்து இருப்பீர்கள்.. அதனால் தான் என்னவோ பத்து வருடங்கள் பொறுமையாக வாழ்க்கை நடத்தி இருக்கிறீர்கள்..

குழந்தை மீது கணவர் பிரியமாக நடந்து கொள்கிறார்களா?அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறார்களா?,

உங்களுக்கு எது தேவை என்று கேட்பதை விட நீங்கள் கேட்பதை வாங்கி தந்து உள்ளாரா?

உங்களின் தனிப்பட்ட சுதந்தரம் எந்த அளவுக்கு இருக்கிறது?

கேள்விகளா கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள்.இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் தோழிகள் உங்களுக்கு உதவுவார்கள்..

என்னிடம் இருந்து உங்களுக்கு தாமதமாக பதில் கிடைக்கலாம்..

Neenga solratai kekkum potu neenga evvalavu vetanai la erukkeenga nu teriyutu.kanavan nam tevaikalai poorti seiyaratu, kulantai tevaikalai poorti seiyaratu nnu eruntalum ata anbaga seital tan valvil nimmati erukkum.porumaiyaga eruntu anaitayum sari seyyungal.pennal mudiyatatu etuvum ellai

சந்தோசமாக தான் என் வேலைகளை செய்கிறேன்.

என் மனவேதனை நாளுக்கு நாள்
அதிகரித்து கொண்டு தான் இருக்கு மா.

ஒரே வீட்டுல இருந்துட்டு என்கிட்ட பேச மாட்டாங்க. என்னோட மனநிலை எப்படி இருக்கும் நினைச்சு பாரு மா.

அதையும் தாங்கிட்டு நான் அமைதியா தான் இருப்பேன்.

குழந்தைகளுக்காக நாம பொறுத்து போகணும் ணு நினைச்சி அமைதியா இருப்பேன்.
2 நாள் சந்தோசமா பேசுவாங்க 3 வது நாள் பிரச்சனை ஆரம்பிச்சிடும்.

பிரச்சனை சமாளிக்க முடியாம தான் பதிவு போட்டேன்.

ML

Kavalappadateenga sis.enta mamiyarkale eppadi tan erukkanga.avanga eppo tan marumagalai magalaka pappangalo teriyala.neenga unga mamiyar kitta derect ta unga maganum nanum santosama erukkanum nu neenga ninaikkireengalanu kelunga.

தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டு உள்ளோம்.

புது வீடு கட்டி போக வேலைகளை நடைபெறுகிறது.

பெண்குழந்தைகள் மா. 2ம் வகுப்பு படிக்கிறாள்.

அம்மா வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை .

பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மனவேதனை அதிகரித்து வருகிறது.

நான் பொறுமையாக இருந்து மனம் தான் கஷ்டப்படுகிறது.

என்ன செய்தால் என் பிரச்சனை தீரும்.

ML

கணவர் இருக்கும் போதே நான் இக்கேள்வியை மாமியாரிடம் கேட்டேன்.

கேட்ட பின்பும் கூட எனக்கு தான் மீண்டும் பிரச்சனை அதிகமானது

எங்க அம்மா வ நீ எப்படி எதிர்த்து பேசலாம்னு அதுக்கும் ஒரு சண்டை

என்ன பண்ண மா.

அவங்க இவ்ளோ பிரச்சனை நடந்தாலும் எதுவும் தெரியாதது போல இருக்காங்க

ML

நிங்கள் சொல்வது உண்மை தான்
குழந்தைகாக மட்டுமே நான் பொறுமை காத்து இருக்கிறேன்.

குழந்தைகளிடம் அன்பாக தான் இருக்கிறார்.

ML

Kavalappadateenga .god seekkiram ungalukku oru nalla Vali kattuvar.neenga Taniya poyitta enta pirassanai ellam teertidum tane.atan neenga Taniya tana poga poreenga

Kavalappadateenga .god seekkiram ungalukku oru nalla Vali kattuvar.neenga Taniya poyitta enta pirassanai ellam teertidum tane.atan neenga Taniya tana poga poreenga

மேலும் சில பதிவுகள்