அபார்சன் பற்றிய சந்தேகம்

ஹலோ தோழிகளே

2 நாட்களுக்கு முன் எனக்கு 45 நாட்களில் அபார்சன் ஆகிவிட்டது. நான் முதல் குழந்தை பிறன்த பொழுது வயிறு கட்டவில்லை அதனால் வயிறு ரொம்ப பெரிசாக இருக்கும். அபார்சனுக்கு பிறகு வயிறு கட்டலாமா? குறையுமா? உடற்பயிற்ச்சியிலும் குறையவில்லை என்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்? எவ்வளவு நாட்களுக்கு?எத்தனை நாட்களுக்கு பிறகு intercourse வைத்துக்கொள்ளலாம்? இது எனக்கு முதல் அபார்சன் உதவுங்கள்

எப்போ வேண்டுமானாலும் வயிறு கட்டலாம். குறையுமா அல்லவா என்பது உங்கள் மரபணுக்களையும் பொறுத்தது. நீங்கள் வயிறு இருப்பதாகச் சொல்கிறீர்களே தவிர எடை போட்டிருப்பதாகச் சொல்லவில்லை. அதனால் உணவுகள் பிரச்சினையாக இருக்கக் கூடாது. உடற்பயிற்சியைக் கட்டாயம் தொடருங்கள். எவ்வளவு நாட்களுக்கு என்றால், உங்களுக்குத் திருப்தி கிடைத்த பின்னும் அப்பியாசங்களைத் தொடருவது தான் சரி என்பேன்.

D&C செய்தார்களா? செய்திருந்தால் சொல்லியிருப்பீர்கள். உங்களுக்கு எப்போ இயலுமோ அப்போது உடலுறவு வைத்துக் கொள்ளலாம். பிரச்சினை இல்லை. ஆனால் எத்தனை மாதத்தின் பின் கருத்தரிப்பது நல்லது என்பதை உங்களைப் பார்த்த மருத்துவர் தான் சொல்ல வேண்டும். கட்டாயம் அந்தக் காலம் முடியும் வரை கருத்தடை முறைகள் எதையாவது பயன்படுத்துங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் உணவருந்திய பின் கொதிக்க வைத்த நீரை காபி குடிக்கும் அளவு வெது வெதுப்பாக குடிக்கவேண்டும். ஒரு உடல் பயிற்சி : ஒரு தலகாணியை வயிற்றின் அடியில் இரண்டாக மடித்துவைத்து வயிற்றை அமிழ்த்தி 10 நிமிடம்கள் இருக்க வேண்டும் ( பிரசவத்துக்கு பிறகு வரும் தெப்பைக்கு காரணம் காற்று அடைவதால் , இப்படி செய்து வருவதால் பிரசவத்துக்கு பின் வரும் வயிற்று பிரச்சினை தீரும்)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

மேலும் சில பதிவுகள்