தூங்கும் போது...

நான் தூங்கும் போது வாய் திறந்து தூங்குகிறேன். அசந்து தூங்கும் போது மட்டும் இப்படி உள்ளது. தூங்கி எழும் போது தொண்டை வறண்டு விடுகிறது. அதனால் தொண்டை வலிக்கிறது. எதனால் இப்படி உள்ளது. பல் அமைப்பினால் இப்படி வாய் திறந்த நிலை உள்ளதா? இதை எப்படி சரி செய்வது?

பல் அமைப்பு பிறந்ததிலிருந்தே இருப்பது. பிறந்ததிலிருந்தே இந்தப் பழக்கம் உங்களுக்கு இருப்பதாகச் சொல்லவில்லை நீங்கள். உமிழ்நீர் வடிவதாகவோ குறட்டை இருப்பதாகவோ சொல்லவில்லை. உங்கள் உறங்கும் பழக்கம் என்னவென்பதையும் சொல்லவில்லை.

வாய் திறந்து தூங்க ஒரு காரணம், உங்கள் உடலுக்கு மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்று போதாமல் இருப்பது. மேலே பார்த்து உறங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இந்த நுரையீரலுக்கு சுவாசத்தைச் சற்றுப் பாரமான விடயம் ஆக்கும். உறக்கத்தில் உங்களுக்குப் போதிய அளவு காற்றுக் கிடைக்கவில்லை எனும் போது வாய் தானாகவே திறந்து அதிக காற்றை உள்ளே செல்ல விடும். தொண்டை உலரும். சிலருக்கு நாக்கு மடிந்து உறக்கம் கலைந்துவிடும்.

பொதுவாக எவருக்கும் தடிமல் வந்து மூக்கு அடைத்திருக்கும் சமயம் இப்படி ஆவது உண்டு. மூக்கு அடைத்திருக்க ஒற்றை மூக்கினால் சுவாசிப்பது போதாமல் போகும் போது வாய் தானாகவே திறந்துகொள்ளும். பகலில் விழித்திருப்போம்; எமை அறியாமலே மூச்சை சரிசெய்துகொள்வோம். இரவில் அப்படி இல்லை.

உறங்கும் போது ஒரு பக்கமாகச் சரிந்து உறங்குவீர்களானால் வாய் முழுமையாகத் திறந்து கொள்ளாதிருக்கும்; உலர்வது குறைவாக இருக்கும். அருகே நீர் வைத்துக் கொள்ளுங்கள். விழிப்பு வந்தால் தொண்டையை நனைத்துக் கொள்ளலாம்.

சிலர் உதடுகளைச் சேர்த்து நடுவே சின்னதாக ஒரு 'டேப்' போட்டுக் கொண்டு உறங்குவார்களாம். :-) இணையம் சொல்கிறது. விரும்பினால் முயற்சி செய்யுங்கள்.

அறையைக் காற்றோட்டமாக வைத்திருங்கள். அடைபட்ட அறையில், காற்றில் தூசு நிறைந்துக்கும். நீங்கள் விழித்திராத போது இது மூச்சு விடும் வேலையைச் சிரமமாக்கும்.

பகலில் நினைவு வரும் போது மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை மூக்கு வழியே ஆளமாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் எப்படியும் பதில் தருவீர்கள் என நம்பினேன். நன்றி.
/உமிழ்நீர் வடிவதாகவோ குறட்டை இருப்பதாகவோ சொல்லவில்லை/ இந்த இரண்டும் இல்லை. மேலே பார்த்து உறங்கும் பழக்கம் உள்ளது. மூச்சுப் பயிற்சி செய்து பார்க்கிறேன்.

M Esakki

மேலும் சில பதிவுகள்