மன அழுத்தம் குறைய

தோழிகளே நான் இருப்பது வாடகை வீடு தான் . எங்கள் வீட்டின் அருகில் இருப்பவர்கள் சொந்த வீட்டு உரிமையாளர்களே.

நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. எப்போதாவது பிள்ளைகளை பள்ளியில் விட போகும் முன் பிள்ளைகளிடம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பேசுவர்கள்.
நானும் சில நிமிடம் பேசுவது உண்டு.

இப்படி இருக்கும் பட்சத்தில் என்னிடம் பேசும் போது நல்லவர்கள் போல் பழகுவார்கள் நான் வீட்டிற்குள் வந்தபின் குறை கூறுகிறார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நான் அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால் என்னைப்பற்றி குறை கூறுவதை மட்டும் நிறுத்த வில்லை.

காரணம் என்ன என்பது எனக்கும் புரியவில்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து அடுத்தவர்கள் வீட்டில் நடைப்பதை மிகவும் கேவலமாக விமர்சிப்பார்கள் . கேவலமாக விமர்சனம் செய்த குடும்பத்திடமே பாசமாக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்.

பிரச்சனை என்று வந்தால் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நான் தனித்து நிற்கிறேன்.

இப்படி இருக்கும் அவர்கள் சிலசமயம் தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்கி என்னிடம் பிரச்சனை செய்வார்கள். பேசும் போது மிகவும் கேவலமான வார்த்தைகளை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தை எனக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.

என்கணவரே அவர்களிடம் பேச தவிர்ப்பார்.

கதவை அடைத்து கொண்டு நாங்கள் அமைதி காப்போம்.

எதிர்த்து பேசினால் வார்த்தைளோ மிக மோசமாக வரும் என்பதால் தான்.

நான் இப்படி பட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது தோழி

இவர்கள் கூறும் சொற்களை கேட்டால் 2நாட்கள் சாப்பிட கூட மறுத்துடுவேன். அதையே நினைத்து கொண்டு இருப்பேன்.

என் மனநிலையை நான் எப்படி மாற்ற முயற்சி செய்தாலும் முடியவில்லை.

முன்பும் யாரோ இதே போல ஒரு கேள்வியைக் கேட்டிருந்து பதில் சொன்ன ஞாபகம் வருகிறது.

//நான் இருப்பது வாடகை வீடு தான்.// மீதிப் பேரும் வாடகைக்கு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். உலகம் எம் எல்லோருக்கும் 'வாடகை வீடு' தான். எவருக்கும் எந்த வீடும் நிரந்தரம் இல்லை. திடீரென்று ஓர் நாள் எதிரே எமனின் வாகனம் வந்து முட்டும். வாடகை செட்டில் பண்ணாமலே கிளம்பி விடுவோம். :-)

//நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை.// கொஞ்சமாகப் பேசலாம். காணும் போது சிரித்த முகத்தோடு குசலம் விசாரிப்பதை தவிர்க்க வேண்டாம்.

//வீட்டிற்குள் வந்தபின் குறை கூறுகிறார்கள்.// என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? காமராவில் ரெக்கார்ட் ஆகிறதா! புரியவில்லை. யாராவது சொன்னார்களா? நம்பாதீர்கள். அவற்றில் உண்மை இராது இருக்கலாம். நீங்கள் குழம்புகிறீர்கள் என்பது தெரிந்து யாரோ உங்களைக் குழப்பி ரசிக்கிறார். நீங்கள் கவனியாது விட்டால் மெதுவே இந்தப் பேச்சை உங்களிடம் எடுப்பதைக் குறைத்துக் கொள்வார். நீங்கள் பெரிதுபடுத்தினால், சொன்னவர்களுக்கு வெற்றி. தொடருவார்கள். பிரச்சினைகள் உருவாகும், மெதுவே பெருக்கும். நிம்மதி குலையும்.

//இப்படி இருக்கும் பட்சத்தில் நான் அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.// எப்படி இருக்கும் பட்சம்!! உங்களுக்குத் 'தெரிந்தவை' உண்மையில் நிகழ்ந்தனவா என்பது 'உங்களுக்கு' தெரியாது. பேசுவதை நிறுத்துவதால் மற்றவர்கள் 'பேச்சுத் தலைப்பாக' நீங்கள் மாறுவீர்கள். பேசிக் கொண்டே இருந்தால் என்றாவது உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

//என்னைப்பற்றி குறை கூறுவதை மட்டும் நிறுத்த வில்லை.// உங்கள் கணவரிடம் சொல்லியிருந்தால் நம்புங்கள். கமராவில் பதிவாகி இருந்தால் நம்புங்கள். மற்றவர்கள் குறை கூறியதாக உங்களிடம் 'குறை கூறியவர்' தான் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய ஆள். மீதிப் பேரை விட பயங்கரமான ஆள் இவர் தான். :-) இவரைத் தவிர்த்து மீதி ஆட்களோடு இலகுவாகப் பழகலாம்.

//காரணம்// நீங்கள் தான். உங்கள் மனது. இந்த ஒரு விடயத்தை மனதில் எடுக்கும் நேரத்தை வேறு உபயோகமான விடயங்களைப் பற்றிச் சிந்திக்கச் செலவிடுங்கள். இதைச் சிந்திப்பது எந்த வகையிலும் பயன் கொடாது.

//அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து// இதைக் கண்ணால் பார்த்திருப்பீர்கள். தூர இருந்து கூடத் தெரியும். //அடுத்தவர்கள் வீட்டில் நடைப்பதை// அது அவர்களுக்குத் தெரியாது. வீட்டிற்கு சுவர்கள், கதவு எல்லாம் உண்டே! வீட்டுக்கு வெளியே நடப்பது தானே தெரிய வரும்!! //மிகவும் கேவலமாக விமர்சிப்பார்கள்.// ;) உங்களுக்கு எப்படித் தெரியும்! 'விமர்சிப்பார்கள்' என்றிருந்தால் வேறு, 'கேவலமாக விமர்சிப்பார்கள்' என்பது... உங்கள் ஊகம் தானே! ஊகம் = சந்தேகம். வேண்டாம். நல்லதை நினையுங்கள். மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று விவாதிப்பதாக ஊகிக்க முடியாதா?

//கேவலமாக விமர்சனம் செய்த குடும்பத்திடமே பாசமாக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்.// ம்... மனிதர்கள் வினோதமானவர்கள். விமர்சிப்பவர்கள் உதவவும் செய்வார்கள். பாசம் கொள்வார்கள். ஆகாது என்பது இல்லை. நீங்கள் ஊகிக்கிறீர்கள். உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். இந்த எண்ணத்திற்கு நினைவுகளால் நீரூற்றிப் பசளையிட்டு வளர்க்கிறீர்கள். வேறு ஏதாவது வேலைக்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.

தனிப்பட ஒவ்வொரு வீடாக உங்கள் குடும்பத்தோடு விசிட் பண்ணுங்கள். அரை மணிக்கு மேல் செலவளிக்க வேண்டாம். அயலவர் பேச்சு வராமல் பொது விடயங்களைப் பேசுங்கள், நலம் விசாரியுங்கள். அந்த வீட்டார் பிறந்த நாட்களை பேச்சுவாக்கில் அறிந்து சர்ப்ரைஸாக ஒரு கார்ட் போடுங்கள் அல்லது சின்னதாக ஒரு பரிசு கொடுங்கள். நிலமை மாறும்.

//பிரச்சனை என்று வந்தால்// என்ன பிரச்சினை?

//அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நான் தனித்து நிற்கிறேன்.// அவர்கள் உங்களைத் தனிமைப்படுத்தவில்லை. 'நீங்களாக' தனிமையைத் தெரிவு செய்து தனித்து நிற்கிறீர்கள். நீங்கள் தான் அவர்களோடு ஒட்டவில்லை. ஒற்றுமை நல்லது தானே! இல்லையா!

//தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்கி என்னிடம் பிரச்சனை செய்வார்கள்.// நீங்கள் பேசுவது இல்லை எனும் போது இது எப்படி! அப்போ பேசுகிறீர்கள் என்று கொள்ளலாமா? //கேவலமான வார்த்தைகளை சொல்கிறார்கள்.// என்ன வார்த்தைகள்?

//அவர்கள் சொல்லும் வார்த்தை எனக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.// என் அனுமானம்... என் வார்த்தைகளும் உங்களுக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கும், என்பது. இது கல்யாணி; இதுதான் கல்யாணி. தவறு இல்லை. வெளியே வாருங்கள். பிடிக்காதவற்றை நினைப்பதைத் தவிருங்கள்.

//என்கணவரே அவர்களிடம் பேச தவிர்ப்பார்.// :-) புரியவில்லை! உங்கள் கணவரும் நீங்களும் மனிதர் தானே! உங்களை விட அவர் எந்தவிததிலும் மேல் என்பது / மாற்றிச் சொன்னால்.... நீங்கள் உங்கள் கணவரை விட எந்த விதத்திலும் குறைவானவர் என்பது கிடையாது. அதே போல் வாடைக்கு இருந்தாலென்ன அல்லது சொந்தக் குடியிருப்பாக இருந்தாலென்ன ஒன்றுதான். எல்லோரும் மனிதர் - எம் வாழ்க்கையை வாழ்கிறோம். எம்மை குறைத்து மதிப்பிடுவதும் நாம் தான்; எம் மதிப்பைக் கூட்டிக் கொள்வதும் நாம் தான்.

//கதவை அடைத்து கொண்டு நாங்கள் அமைதி காப்போம்.// சந்தோஷமாக இல்லை நீங்கள். ஏன் வேறு வீடு பார்த்துப் போகக் கூடாது! மன ஆரோக்கியம் முக்கியம் இல்லையா!

//எதிர்த்து பேசினால் வார்த்தைளோ மிக மோசமாக வரும் என்பதால் தான்.// எதிர்த்துப் பேச வேண்டாம். சாமர்த்தியமாகப் பேசலாமே! சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தலாம். உங்கள் தொனியில் உறுதியும் தெளிவும் அதற்கு மேல் நியாயமும் இருந்தால் சிந்திப்பார்கள்.

//இவர்கள் கூறும் சொற்களை கேட்டால்// பேசுவதில்லை என்கிறீர்கள். பிறகு எப்படி?

//என் மனநிலையை நான் எப்படி மாற்ற முயற்சி செய்தாலும் முடியவில்லை.// மாற்ற வேண்டாம்; மறக்கவும் வேண்டாம் - நினைக்காதிருங்கள் போதும். எந்த நிகழ்வானாலும் அந்த இடைத்திலேயே சிந்தனையை விட்டுவிட்டு எடுக்கும் அடுத்த காரியத்திலும் முழுமையாக மனதை ஈடுபடுத்துங்கள். பெய்ண்டிங் செய்வீர்களா? பென்சில் ஸ்கெட்ச் போதும். வரைய ஆரம்பியுங்கள். மனசு இலகுவாகும். மெதுவே ஒரு பக்குவம் வரும்.

மகிழ்ச்சி எம் உள்ளே தான் இருக்கிறது; அது வெளியே இருந்து வருவது இல்லை.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொல்லும் கருத்துகள் அனைத்தையும் நான் மதிக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் மனம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்கிறேன்.

சந்தேகம் ஏதும் இல்லை அம்மா
அவர்கள் நடந்து கொள்ளும் முறை,
அவர்களின் சைகை பேச்சுக்கள் இவை அனைத்துமே என் மனமாற்றத்திற்கு காரணம்.

ML

நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் எனக்கு மனம் கஷ்டமாக உள்ளது நான் இங்கு வந்து 6மாதம் தான் ஆகிறது நான் தமிழர் இங்கு தமிழர் இருக்கின்றனர் ஆனால் பேசமாட்டார்கள் நான் வசிக்கும் aprtment பக்கத்தில் தமிழர் இருக்கின்றனர் ஆனால் பேசமாட்டார்கள் இப்படிக்கு என் கணவரும் பக்கத்தில் வசிக்கும் அண்ணனும் ஒரே ஆபீஸ்ல work pantraga ingu வந்ததுல இருந்து ஒரு வார்த்தை அவுங்க family பேசவே இல்லை இங்கு வசிக்கும் தெலுங்கு பேசும் family nalla நட்புடன் அவர்கள் தாய் மொழி பேசி மகிழ்வுடன் இருக்கின்றனர் ஆனால் தமிழ் தாய் மொழி கொண்ட தமிழர் குடும்பம் பேசாமல் இருப்பது மனது கஷ்டமாக இருக்கிறது எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் அவளுக்கு விளையாட கூட இங்கு தமிழ் குழந்தைகள் இருந்தாலும் என் குழந்தை தனியாக வீடிற்குள் விளையாடுகிறார் வெளியில் வாக்கிங் போனால் கூட தமிழர் பேசுவது கிடையாது

பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையும் போது நிச்சயம் பேசுவார்கள். பக்கத்து வீட்டாரோடு ஒரு நேரம் புக் செய்து கொண்டு நீங்கள் போய்வரலாமே! உங்கள் கணவர் விருப்பம் எப்படி? பேச வேண்டாம் என்று நினைக்கிறாரா?

நீங்கள் ஒரே கட்டிடத்தில் வசிப்பதால் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும். அப்போது நீங்கள் ஹாய் சொல்கிறீர்களா? அல்லது அவர்கள் முதலில் பேசட்டும் என்று காத்திருக்கிறீர்களா? நீங்கள் முயற்சி செய்தால் நிலமையில் மாற்றம் வரலாம்.

//வாக்கிங் போனால் கூட தமிழர் பேசுவது கிடையாது// ஆங்கிலேயர் ஆனாலும் அதிகம் பேச மாட்டார்கள். இத்தனை நிமிடம் நடை என்று கணிப்பு வைத்துக் கொண்டு கிளம்பும் போது இடையில் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. அதை எதிர்பார்க்க வேண்டாம். நேரம் - வெகு அபூர்வமாகவே ப்ளான் செய்யாதவற்றுக்கு ஒதுக்கக் கிடைக்கும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து காண்போரிடம் புன்சிரிப்போடு ஒரு ஹாய் சொல்லிப் பாருங்கள். மெதுவே நிலமை மாறும். எனக்கும் பாஷை தெரியாத, 'நடை நட்புகள்' நிறைய இருக்கிறார்கள். முகம் மட்டும் தெரியும், சிரிப்பும் ஹாயும் பரிமாறத் தவறுவது இல்லை. அதற்கு மேல் எதுவும் விசாரித்தது கிடையாது.

குழந்தை விளையாட தமிழ்க் குழந்தைகள் தேவையில்லை. நீங்க பார்க்குக்கு அழைத்துப் போங்க, அங்கே எந்தக் குழந்தையும் விளையாட வரும். எங்கள் வட்டத்துக்குள் முடங்கிக் கிடப்பதை விட, வட்டத்தைப் பெரிதாக்கி எல்லோருடனும் பழகுவது ஆரோக்கியமானதாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மிக நன்றி !அம்மா நீங்கள் எனக்கு பதில் அளித்ததற்கு நான் சற்றும் நினைத்து பார்க்கவில்லை அம்மா! நீங்கள் arusuvaiyun மிகப் பெரிய ஜாம்பவான் , தங்கள் சிறப்பு பிழை இல்லா தமிழில் தாங்கள் அளிக்கும் பதில் அம்மா ! மிக நன்றி அம்மா நீங்கள் ஒரு ஆசிரியர் உங்கள் கருத்துக்கள் தாங்கள் கொடுத்த பதில்கள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன் படித்து உள்ளேன் அம்மா எங்கள் போன்ற நபர்களுக்கு உங்கள் பாஸிட்டிவ் பதில்கள் நிறைய வேண்டும் அம்மா! அறுசுவை ஓபன் panninaalea first உங்கள் neyapagam வரும் அம்மா தாங்கள் யாருக்கு பதில் அளித்து உள்ளீர்கள் என்று ஆவல் வரும் அம்மா ! உங்களிடம் பேச எனக்கு இப்ப தான் வாய்ப்பு வந்துள்ளது அம்மா எனக்கு மிகவும் சந்தோஷம் அம்மா!

A

நீங்கள் சொன்னது போல் என் குழந்தையை பார்க் , இங்கு நான் வசிக்கும் இடத்தில் உள்ள ground la அழைத்து சென்றுள்ளேன் அம்மா ! இங்கு தெலுங்கு பேசும் family குழந்தைகள் நன்கு பழகி சிரிப்பார் , நான் ஆங்கிலத்தில் பேசி என் குழந்தை விடுவேன் அம்மா ! எனக்கு தெலுங்கு பேச தெரியாது தெலுங்கு பேசும் family ground la என்னுடைய பெயர் கேட்பாங்க நான் பதில் கொடுத்து அவுங்கள எங்க வீட்டு க்கு வர சொல்வேன் அவுங்க பதில் பேசுவாங்க அவ்வளவு தான் அம்மா ! வாக்கிங் போகும் போது ஸ்மைல் பண்ணுவேன் அம்மா எல்லாரிடமும் ஹாய் சொல்வேன் அம்மா! தமிழ் பேசும் குடும்பம் 5 family இருக்காங்க அதில் ஒரு family my native place amma valiya பேசினாலும் பதிலுக்கு பேசுகிறார் வீட்டிற்க்கு வர சொன்னாள் வர வில்லை அம்மா? நான் வருகிறேன் என்றாலும் evening வாங்க சொல்லுவாங்க time சொன்னதில்லை அம்மா இங்கு வந்து ஒரு Hindi family Birthday party la கலந்து கொண்டு உள்ளேன் அம்மா அவுங்க கொடுக்குற responce kuda இவுங்க கிட்ட இல்ல அம்மா ! எனக்கு வருத்தம் அம்மா மற்ற மொழி பேசும் குடும்பம் மகிழ்ச்சி யாக நண்பர்களாகி பரஸ்பரம் கொள்கின்றனர் தாய் மொழி தமிழ் பேசும் இவுங்க ஏன் பேச நண்பர்களாக பழக முன் வரவில்லை என்று அம்மா?

A

A

நீங்க சரியானதைச் செய்றீங்க. காலத்தோடு மெதுவே எல்லாம் சரியாகும். நீங்கள் உங்கள் முயற்சியை விட்டுவிட வேண்டாம். தொடருங்கள், ஆனால் ஆள் தெரிந்து பேசுங்கள். உங்களை மற்றவர்கள் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது.

//my native place// காரணம் இருக்கும். முன்பு ஏதாவது சரியில்லாத அனுபவங்கள் இருக்கலாம். அதனால்தான் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். //வீட்டிற்க்கு வர சொன்னாள் வர வில்லை// எல்லோரும் உடனே வரமாட்டார்கள். இதைப் பற்றி பெரிதாக யோசிக்க வேண்டாம். ஆட்களை நன்கு தெரிந்துகொள்ள முன் அழைப்பதோ அழைக்கப்படுவதோ, இரண்டுமே தயக்கமான விடயங்கள் தான். //Birthday party// உங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வரும் போது நீங்கள் மற்றவர்களை அழைத்துப் பாருங்கள் - ஆனால் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். வந்தால் சந்தோஷம்; வராவிட்டால் பரவாயில்லை என்று முன்பே முடிவு செய்து கொண்டால் ஏமாற்றம் இராது.

//அவுங்க கொடுக்குற responce kuda இவுங்க கிட்ட இல்ல // :-) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் கண்ணா. ஒருவர் போல இன்னொருவர் இருக்க வேண்டியது கட்டாயம் இல்லையல்லவா?

//மற்ற மொழி பேசும் குடும்பம் மகிழ்ச்சி யாக நண்பர்களாகி பரஸ்பரம் கொள்கின்றனர்// அப்படி நீங்கள் தான் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அவர்களைக் கேட்டால் பலரும் ஆரம்பத்தில் நீங்கள் தற்போது இருக்கும் மனநிலையில் இருந்ததாகத் தான் சொல்லுவார்கள். காலத்தோடு நட்புகள் தோன்றி இணைந்துகொள்வார்கள்.

//தமிழ் பேசும் இவுங்க ஏன் பேச நண்பர்களாக பழக முன் வரவில்லை// :-) உங்கள் மன ஓட்டம் வேறு; என் கருத்து வேறாக இருக்கிறது. நான் மனிதர்களை ஓரவு அறிந்துகொண்ட பின்பே நெருங்க ஆரம்பிப்பேன். அது என் இயல்பு. நீங்கள் நான் தற்போது இருக்கும் ஊரில் இருந்தால் என்னைப் பற்றியும் உங்கள் மனதில் குறை இருந்திருக்கும். :-)

என் அனுபவம் ஒன்று உங்களுக்காக. தமிழர் அல்லாத இந்தியர்கள் நட்பாக இருப்பார்கள் என்றீர்கள் அல்லவா? எனக்கு நேர் அயலில் ஓர் வீட்டில் இளம் இந்தியர்கள் இருக்கிறார்கள். பல சமயம் வேலிக்கு மேல் முகம் தெரியும். ஹாய் சொல்கிற அளவுக்கு அவர்கள் இடம் கொடுத்தது கிடையாது. அது அவர்கள் இயல்பு. நான் தவறாக எடுக்க எதுவும் இல்லை. ஒருவர் சீக்கியர் என்பது தெரிகிறது. மற்றப்படி இரண்டு இந்திய மொழிகள், அவர்கள் உரத்துத் தொலைபேசியில் பேசிக் கொள்வதில் காதில் விழுந்திருக்கிறது. இங்கு லாக்டௌன் என்றதும் நான் முதலில் செய்த வேலை மற்ற அயலவர்களிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, உதவி ஏதாவது தேவைப்பட்டால் பேசச் சொன்னது. எவருக்கும் இந்த இந்தியர்களைப் பற்றி விபரம் தெரிந்திருக்கவில்லை. சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே, 'அவர்கள் யாரிடமும் பேசியது இல்லை. தமக்குள் தனித்து இருப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. எனவே நாம் தொந்தரவு கொடுத்தது இல்லை,' என்றார்கள். எனக்கு மனம் கேட்கவில்லை. சின்னவர்களாயிற்றே! என் பிள்ளைகள் போல் நினைத்து, தொலைபேசிச் சத்தம் கேட்ட சமயம் ஓடிப் போய் ஒருவரைப் பிடித்தேன். வேலிக்கு மேல் தெரிந்த தலையோடு பேசினேன். நலம் விசாரித்து, தேவைப்பட்டால் உதவிக்கு அழைக்கலாம் என்று சொன்னேன். (என் தோற்றம் இங்கு பலரை என்னிடம் வலிய வந்து இந்தியில் அளவளாவ வைத்திருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இதற்காகவே, 'ஹிந்தி நஹி மாலும்,' சொல்லப் பழகினேன்.) எங்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் எல்லாம் எழுதி அவர்கள் தபாற்பெட்டியில் வைப்பதாகச் சொன்னேன்; சொன்னபடி வைத்தும் விட்டேன். அழைப்பு வரவே இல்லை. பிறகு தொலைபேசியில் பேசுவதற்குக் கூட எங்கள் வேலிப் பக்கம் வராமல் விட்டார்கள். :-) (இது சொல்வது என்னவெனில்... இந்தி பேசும் வெளிநாட்டார் எல்லோரும் இந்தி பேசும் மற்றவர்களோடு நட்பாக இருப்பது இல்லை என்பதே.) அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்குத் தேவை வரவில்லை. தேவை இல்லாமல் பேசிப் பழகுவது அவர்கள் இயல்பாக இல்லாதிருக்கலாம்.

இதை ஒரு குறையாக எடுக்காமல் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். வேலை பார்க்கிறீர்களா? இல்லை என்று நினைக்கிறேன். ஏதாவது பொழுதுபோக்கு ஒன்றைப் பிடியுங்கள். எப்பொழுதும் பிஸியாக இருங்கள். குழந்தை வீட்டிலிருக்கும் போது குழந்தையோடு புதிது புதிதாக ஏதாவது செய்யப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்