5மாதம் குழந்தைக்கு இருமல்.சளி . help me frnds

என் குழந்தைக்கு hospital போய் மருந்துகொடுத்து சரி ஆகவே இல்லை. .சளி இருமல் குணமாகவே இல்லை

இதே நிலையில் தான் நானும் உள்ளேன். இரண்டு வாரங்கள் ஆகியும் சளி சரியாகவில்லை..
நல்லெண்ணெய் கொஞ்சம் சூடு செய்து நம் விரலினால் தொட்டு ஒரு
வெற்றிலையில் முழுவதும் தடவி குழந்தை நெஞ்சில் ஒட்டி விடுங்கள்.. தூங்கும் போது செய்ய வேண்டும்..
சளியை வெற்றிலை உறிஞ்சும் என்கிறார்கள்..
வெற்றிலை காய்ந்ததும் கீழே விழுந்து விடும்.. நான் இதை செய்து கொண்டு இருக்கிறேன்.. நீங்களும் செய்து பாருங்கள்..

சின்னவர்களுக்கு இருப்பதற்குக் காரணங்கள் உண்டு என்கிறார்கள். ஆனால் பெரிதாக பயப்படும் அளவு இருக்கிறது என்றால் & மருந்து எடுத்தும் குறையவில்லை என்றால் உங்கள் வீட்டில் பிரச்சினை இருக்கலாம். வீடு ஈரலிப்பாக இருந்தால் காற்றில் ஃபங்கஸ் இருக்கலாம். பெரியவர்கள் வேலை இடங்களிலிருந்து காவி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறதாகவும் இருக்கலாம். கவனித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்