ஸ்வீட் கார்ன்

நான் நேத்து ஸ்வீட் கார்ன் வாங்கினேன். அதை ஸ்னாக்ஸ் / சாலட் / ரைஸ் ல மிக்ஸ் பண்ணி இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடனுமா ?

இல்ல கிரேவி அல்லது பொரியல் மாதிரி ஏதாது பண்ணலாமா? சொல்லுங்களேன்

பெயரிலேயே இனிமை இருக்கிறது. மாப்பொருள் செறிந்திருப்பதால் சாதத்திற்கு ஈடானது. கிழங்கு பிரதான உணவாக இருக்க வேண்டியது. நாம் சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் இன்னொரு மாப்பொருளை கூட்டுச் சேர்க்கிறோம். பயனில்லை. லாபமில்லை என்பதை விட எடையாகச், சேகரமாகும் என்பது கவனத்திற் கொள்ளப்படுவதே இல்லை.

எப்படி நெல்லின் உள்ளீடு சோறு என்பதாக அழைக்கப்படுகிறதோ அதே போல் சோளன் - சோறு. இது தமிழ். கார்ன் ஆங்கிலம்.

ஸ்னாக்ஸ் - எதை வேண்டுமானாலும் கொறிக்கலாம். சாலட் - உண்மையில் சாதம், சப்பாத்தி என்று எதுவும் இல்லாமல் சாலடை மட்டும் ஏதாவது ஒரு புரத வகையோடு சாப்பிடுவதானால் சாலடில் ஸ்வீட் கார்ன் சேர்ப்பது நல்லது. கொஞ்சமாவது மாப்பொருள் கிடைக்கும்.

ரைஸ்ல மிக்ஸ் - ஒரு சர்விங் என்பதைச் சரியாக எடுக்க வேண்டும். இரண்டும் ஒரே வகைதான் - சோறு. ஆக சோளனில் நார்ப்பொருள் இருக்கும் அரிசியில் இராது. நூடுல்ஸில் சேர்க்கலாம். கிழங்குகள், காய்கறிகள் ரோஸ்ட் செய்யும் சமயம் சேர்த்து ரோஸ்ட் செய்யலாம்.

கிரேவி - செய்யலாம். சற்று அதிகமாகவே இனிக்கும்.

பொரியல்!! எங்கள் பக்கத்து சுண்டலைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்யலாம். கடலை தாளிப்பது போல தாளித்துச் சாப்பிட நன்றாக இருக்கும். இது ஸ்னாக் என்பதாக இருக்கலாம். அல்லது வேறு எதுவும் இல்லாமல் காலை அல்லது இரவு உணவாக குறைவான அளவில் சாப்பிடலாம்.

மிக்ஸ்ட் வெஜ்ஜோடு சேர்த்து பஜ்ஜி போல் செய்யலாம். பேக்ட் பொட்டேட்டோவில் (குறிப்பு தேடிக் கொடுக்கிறேன்.) சேர்க்கலாம். நன்றாக இருக்கும்.

எதுவுமே சேர்க்காமல் வெறுமனே சிறிது உப்பு சேர்த்து அவித்து (மைக்ரோவேவ் செய்யலாம்.) பட்டர் / மாஜரின் பூசி மிளகு தூவிச் சாப்பிடலாம். அவித்த பின் வெண்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து உரலில் குற்றி விட்டும் சாப்பிடலாம்.

‍- இமா க்றிஸ்

ஆன்று குறிப்பு தேடிக் கொடுப்பதாகச் சொன்னேன். பிறகு மறந்து போய் விட்டது. நீங்களே தேடிப் பிடித்து இருப்பீர்கள்.
ஸ்வீட் கார்ன் பாஸ்தா - www.arusuvai.com/tamil/node/28821
ஸ்வீட் கார்ன் சாட் - www.arusuvai.com/tamil/node/31908
ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் - www.arusuvai.com/tamil/node/29155
ஸ்வீட் கார்ன் சூப் - www.arusuvai.com/tamil/node/7448
ஸ்வீட் கார்ன் வித் சீஸ் - www.arusuvai.com/tamil/node/5305
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் - www.arusuvai.com/tamil/node/219
ஸ்வீட் கார்ன் சூப் - www.arusuvai.com/tamil/node/22526
ஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப் - www.arusuvai.com/tamil/node/26435
ஸ்வீட் கார்ன் சூப் - www.arusuvai.com/tamil/node/27762

எனக்குப் பிடித்தது ஸ்வீட் கார்ன் ஜாக்கட் பொட்டேட்டோ. http://www.arusuvai.com/tamil/node/3953 குறிப்பைப் பாருங்க.
உருளைக்கிழங்கு - நான்கு (எந்த வகைக் கிழங்கு என்றாலும் பரவாயில்லை.)
நறுக்கிய வெங்காயத்தாள் - இரண்டு மேசைக்கரண்டி ( பதிலாக சைவ்ஸ் அல்லது பொரியாக அரிந்த வெண்காயத்தைப் பச்சையாகவோ அல்லது சிறிது எண்ணெயில் வதக்கியோ சேர்க்கலாம்.)
வெண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி (குறைவாகப் போடலாம்.)
புளித்த க்ரீம் - (ரெடிமேடாக விற்கும் சவர் க்ரீமைத் தான் சொல்றாங்க. அதோடு கூட பன்னீர் உதிர்த்துப் போடலாம்.)
பால் - கால் கோப்பை (நான் சேர்ப்பது இல்லை.)
துருவிய பார்மஜியானோ சீஸ் - இரண்டு மேசைக்கரண்டி (கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் இன்ன சீஸ் என்று பார்ப்பது இல்லை. துருவிக் கொண்டால் போதும்.)
வெள்ளை மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி (கறுப்பு மிளகு / நருவல் மிளகாய்த் தூள் / பொரியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்.)
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி (சுவை பார்த்துக் கொள்ளுங்கள்.)
இதற்கு மேல் ஸ்வீட் கார்ன், பொரியாக அரிந்த பார்ஸ்லி, கறிவேப்பிலை, கொத்துமல்லி, ரோஸ்மெரி எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். நான்வெஜ் வேண்டுமானால் அவித்த மீனை உதிர்த்துச் சேர்க்கலாம். அல்லது அவித்த மாமிசத்தை உதிர்த்துச் சேர்க்கலாம். முதலில் கிழங்கை மைக்ரோவேவில் தான் வைத்து எடுப்பேன். பேக் செய்வது இல்லை. எல்லாவற்றையும் குழைத்து வெட்டிக் குடைந்து வைத்துள்ள பாதிகளில் ஸ்டஃப் செய்த பின் (கிழங்கின் பாதியை விட மேடு தட்டியது போல வைக்க வேண்டும். அல்லாவிட்டால் மீதம் வரும். [கிடைக்கும் மீதத்தை வெண்காயத்தைப் பாதியாக வெட்டி உதிர்த்தால் கிடைக்கும் துண்டங்களில், கிண்ணம் போல வைத்துக் கொள்ளுங்கள்.]) (இதற்குள் அவணை முழு வெப்பத்தில் சூடாக விட்டிருக்க வேண்டும்.) மேலதிகமாக எடுத்து வைத்துள்ள துருவிய சீஸை நிரப்பிய கிழங்கின் மேலே தூவி மேல் தட்டில் வைத்து அவணைச் சற்றுத் திறந்தபடி வைத்து க்ரில் செய்ய வேண்டும். எல்லாம் ஏற்கனவே சமைத்த பொருட்கள், அல்லது சமைக்கத் தேவையில்லாத பொருட்களாக இருப்பதால் சட்டென்று (அண்ணளவாக 10 நிமிடங்கள்) வெந்துவிடும். மேலே போட்ட சீஸ் பொன்னிறமாக வந்தது இறக்கலாம். உள்ளே கொதிக்கும் சூட்டில் இருக்கும். கையில் எடுக்க வேண்டாம். ஒரு தட்டில் வைத்து கரண்டி வைத்துச் சாப்பிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்