Karpapaiel neer Kumili

enaku marriage agi 1 year aguthu enum kulainthai ellai maruthuvamanaiku pona ugaluku karpaapiel neer kumili eruku endu sonargal etherku enna saivathu ethu varai 4 motham matherai marndu eduthu ulan but enum kulanthai ellai ena saivathu endru puriyavillai enaku uthavi saiugal plz plz

ஒரு வருஷம் தான் ஆகுது. நீங்க ட்ரீட்மன்ட் ஆரம்பிச்சு இருக்கிறதால பொறுமையாகத் தொடருங்க. யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி

ஹாய் என் பெயர் பானு எனக்கு திருமணமாகி 1 1/2 வருடம் ஆகுது. எனக்கு என்னும் குழந்தை இல்லை நகல் மருத்துவமனைக்கு சென்றோம் அவர்கள் டெஸ்ட் சாய்த்து விட்டு உங்களுக்கு கர்ப்பப்பை நன்றாக உள்ளது என்று சொன்னார்கள். ஆனால் கர்ப்பப்பையில் நீர் குமிழிகள் உள்ளது என்று சொன்னார்கள் அதெற்கென மருந்துகளும் மாத்திரைகளும் சாப்பிட்டு வந்தோம் 4 மாதங்களாக ஆனால் எந்த பயனும் இல்லை. வேறுஒரு மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு உங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று சொன்னார்கள் உங்களது உடல் எடை அதிகமாக உள்ளது எடை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள் கருமுட்டை வளர ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து ஊசி போட சொன்னார்கள் நானும் போட்டுக்குட்டு வந்தோம் 5 ஊசி போட்டோம் கருமுட்டை நன்றாக வளைந்து இருக்கிறது சொல்லி அந்த கருமுட்டை உடைய ஊசி போட்டார்கள் பின்பு இருவரும் இந்த நாள் வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னாரகள் அதிபோலவே செய்தோம் ஆனால் எந்த பலனும் இல்லை பணம் 7000 நஷ்டமானதுதான் மிச்சம். மீண்டும் இதேபோல் பண்ணனும் சொன்னாரகள் என்னால் மாதம் மாதம் இப்படி செலவு செய்ய முடியாது எங்களது வருமானம் குறைவு. நான் சென்னையில் வசித்து வருகிறோம் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை சகோதரிகள் எனக்கு உதவி செய்வீர்களா நான் வணிகவரி துறையில் டிபிஸ்ட் வேலை பார்த்து வருகிறேன் எனது சொந்த ஊர் சேலம் ஆகும். எனக்கு ஒரு நல்ல ஆலோசானை சொல்லுங்க தோழி வீட்டில் இருந்த படி என்ன செய்வது உடல் எடை வேகமாக குறைய என்ன செயலாம் எனக்கும் எனது கணவருக்கும் உடல் சூடு இயற்கையாகவே அதிகமாக உள்ளது அதனால் குழந்தை தள்ளிபோகுமா எனக்கு 32 வயது எனது கணவருக்கு 33 வயது நடக்கிறது வயது அதிகமாக இருப்பதால் தள்ளிபோகிறதா இதனால் நான் அதிக மன அழுத்தும் ஏற்படுகிறது இந்த இணையதளம் பார்த்தேன் படித்தேன் பிடித்திருந்தது பலரின் ஆலோசனை மனதிற்கு ஆறுதலாக இருந்தது நாமும் நம்முடைய வேதனை சொன்னால் நமக்கும் ஒரு தீர்வு கடைக்கும் என்று நம்புகிறேன். தற்போது கழற்சி காய் சாப்பிட்டு வருகிறேன் சூடு தனியா இரவில் வெந்தயம் சீரகம் இரண்டியும் சுடு தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெதுவெதுப்பாக சூடு பன்னி குடித்துவருகிறன் பின்பு கொண்டைக்கடலை ஊறவைத்து சாப்பிட்டு வருகிறேன் மற்றும் கற்றாழை சாப்பிட்டு வருகிறேன் இவை அனைத்தும் சாப்பிடலாமா உடலுக்கு நல்லதா இதுவே போதுமா வேறு ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள் தோழி உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன். இதுமட்டும் அல்ல நான் போகாத கோவில் அல்ல வீட்டில் செய்யாத வழிபாடு இல்லை இதற்குமேல் என்ன செய்வது தோழி தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

Kavalappadateenga.yenna enakkum neer Katti eruntussu.neer Katti eruppatala kulantai nikkama erukkatu.tideernnu nikkum.nama expect pannata masam tideernnu nikkum.appadi tan enakkum.so relax sa erunga.neer kumili enpatu Periya problem ellai.

ரொம்ப நன்றி நநீங்க சொன்னது எனக்கு மனதைரியமாக உள்ளது நன்றி

முதலில்... ஒன்றரை வாருடங்கள் என்பது யோசிக்க வேண்டிய காலம் அல்ல. கடந்த 18 மாதங்களில் நீங்களும் உங்கள் கணவருமாகத் தவற விட்ட சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். கர்ப்பமாகாததற்குக் காரணமாக உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

எடை குறைக்கச் சொன்னால் கண்டிப்பாக அதைக் கவனியுங்கள். உணவில் மாச்சத்தைக் குறையுங்கள். கிழங்குகளைத் தவிருங்கள். காப்பி தேநீருக்குச் சீனி / சர்க்கரை அறவே வேண்டாம். (காப்பி, தேநீர் மட்டும் என் எடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.) எண்ணெய் & ஸ்வீட்ஸ் அறவே வேண்டாம். நொருக்குத் தீனிகளை முற்றாகத் தவிருங்கள். பழங்கள் சாப்பிடுவதானால் முடிந்தவரை முழுதாகச் சாப்பிடுங்கள். ஜூஸ் போட வேண்டாம். டீவீ பார்ப்பதைக் குறையுங்கள். (ஏற்கனவே வேலையில் நிறைய உட்கார்ந்து இருப்பீர்கள்.) வீட்டிற்கு வந்த பின் நடந்து / நின்று செய்யும் வேலைகளைப் பாருங்கள். கட்டாயம் தினமும் அதற்கு மேல் ஒரு வேக நடை அவசியம். ஆரம்பிக்கும் போது 30 நிமிடம் என்று ஆரம்பித்து மெதுவாக நேரத்தைக் கூட்டலாம். விடாமல் நடப்பது சின்னச் சின்ன நடைகளை விட நல்லது. மற்றப்படி அளவாகச் சாப்பிட்டால் போதும். பசிக்காவிட்டால் உண்பதைப் பின் போடலாம். வேகமாகக் குறைப்பது என்று உடலைப் பட்டினி போட வேண்டாம். அதுவும் நல்லதல்ல.

பணம் நஷ்டமானது என்கிறீர்கள். உண்மையில் அப்படி இல்லை. அது ஒரு முயற்சி. சிகிச்சைக்குப் போகும் முன்பான உங்கள் இருவரது தாம்பத்தியமும் நஷ்டம் என்பீர்களா? இல்லை அல்லவா? ஒவ்வொரு மாதமும் எல்லாப் பெண்களும் கர்ப்பம் தரிப்பது சாத்தியம் என்றால் இன்று உலகம் சனத் தொகைப் பெருக்கத்தாலேயே அழிந்து போயிருக்கும். ஆகும் போது ஆகும். ஆனால் உங்கள் வயது உங்களை யோசிக்க வைக்கிறது. உங்கள் தற்போதைய வயது பிரச்சினையாக இருக்கவே இருக்காது. உங்கள் கணவரைப் பரிசோதித்தார்களா என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை நீங்கள். உங்கள் மன அழுத்தமும் பின்போக ஒரு காரணமாக இருக்கலாம். ரிலாக்ஸ்டாக இருக்கப் பாருங்கள். தினமும் உங்களைச் சந்தோஷப்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு சிறிய விடயத்தை மறவாமல் செய்யுங்கள்.

உடல் சூடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மனிதருக்கு சாதாரண வெப்பநிலை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு மேல் போனால் அது காய்ச்சல். தர்மாமீட்டர் வைத்துப் பாருங்கள். சூட்டு உடல் என்பவர்களுக்கும் மற்றவர்கள் போல்தான் உடல்வெப்பநிலை இருக்கும். சூடுதான் என்று உறுதியாக நம்பினால் நிறையத் தண்ணீர் குடித்தால் / குளித்தால் குறையுமே!

நீங்கள் சாப்பிடும் பொருட்களைப் பற்றி எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் தேவையிராது என்று தோன்றுகிறது. தெரியாத சூட்டை விட்டுவிட்டு உங்களுக்கு இருப்பதாகத் தெரிந்துகொண்ட நீர்க்கட்டிக்கு வேண்டுமானால் எதையாவது முயற்சி செய்து பார்க்கலாம்.

அமைதியாக சந்தோஷமாக இருங்க. நீங்கள் போகாத கோவில் இருக்கலாம். கோவில் கூட உங்கள் மனக் குழப்பத்தை விடாது யோசிக்க வைக்கும் இடமாக மாறிப் போயிருக்கும். வழிபாடுகள் - ஆறுதலைக் கொடுப்பதை விட மனப் பாரத்தை அதிகரிக்கிறதாக அமையலாம். போகாத உல்லாசத்தலம் ஏதாவது இருக்கிறதா! ஒரு விடுமுறை எடுத்துக் கொண்டு இருவருமாகப் போய் வாருங்கள். ஆஃபீஸ், சமையல் என்று கவலைகள் இல்லாமல் ஒரு வாரம் இருக்கலாம். வித்தியாசமான சூழல் மனதை இலகுவாக்கும். பிறகு இடைக்கிடை பீச், பார்க் என்று போய் வாருங்கள். குழந்தை என்கிற நினைவைச் சற்று ஒதுக்கி வையுங்கள்.

உங்களுக்கு விரைவில் எல்லாம் நலமாக என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொல்லுவதும் ஒருவித்ததில் உண்மைதான் ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன பதில் மனசுக்கு ஒரு தெம்பா இருக்கு மேடம் மிக்க நன்றி

மேலும் சில பதிவுகள்