தெரியாத தேவையான பொருட்கள்.

அட்மின் ஐயா அவர்களுக்கு,சமையலறை சந்தேகங்களுக்கென்று மன்றத்தில் ஒரு பிரிவு இருப்பதுப் போல், சந்தேகமான தெரியாத பொருட்களுக்கென்று ஒரு தனி பிரிவு இருந்தால் ரம்பை இலை போன்ற பொருட்களைப் பற்றி கேட்கவும், தெரிந்தவர்கள் விடையளிக்கவும், முடிந்தால் புகைப் படம் அனுப்பி விளக்கம் கொடுக்கவும், வசதியாய் இருக்கும்.ஏற்கனவே ரம்பை இலை என்றால் என்ன, என்ற கேள்விக்கு புகைப் படம் எடுத்து அனுப்பி என்னைப் போன்ற பல நேயர்களின் சந்தேகத்திற்க்கு விடையளித்திருந்தீர்கள்.ஆனால் அதை பற்றிய கேள்வி மீண்டுன் பதிவாயிருக்கின்றது. ஆகவே இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் நேயர்களுக்கும் உடனே அதில் தேடிப் பார்த்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வசதியாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஆகவே அவைகளுக்கென்று ஒரு தனிப் பிரிவு பற்றிய இந்த யோசனையைப் குறித்து தங்களின் கருத்தை கூறவும்.நன்றி.

திருமதி. மனோகரி அம்மா அவர்களுக்கு,

உண்மையில் நானும் இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். உணவுப்பொருட்களுக்கென்றே ஒரு தனிப்பகுதி (மன்றத்தில் அல்ல) கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் அனைத்து உணவுப்பொருட்களைப் பற்றின முழுமையான தகவல்களைக் கொடுக்க முயற்சி செய்கின்றோம். தகவல்கள் திரட்டுவதற்கு நேரம் எடுக்கின்றது.

அதற்கு முன்பு, உங்களின் ஆலோசனைப்படி மன்றத்தில் ஒரு தனிப்பிரிவு கொண்டு வந்துவிடலாம். இருக்கும் சிலப் பிரிவுகளில் எந்த கேள்வியுமே பதிவாகவில்லை. அவற்றில் ஒன்றினை மாற்றிவிடலாம் என்று எண்ணுகின்றேன். உதாரணம், உணவு அலங்காரம்.

தங்களின் பயனுள்ள இந்த ஆலோசனைக்கு மிக்க நன்றி.

அன்பு அட்மின் அவர்களுக்கு, தங்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கும், தங்களின் கடின உழைப்பிற்க்கும் தலைவணங்குகின்றேன். மிக்க நன்றி.

தனிப் பிரிவைக் குறித்து மேலும் ஒரு சந்தேகம் இதற்க்கு முன்பு நேயர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்த புகைப்படங்கள் அடங்கிய பதிவுகள் நிறைய்ய இங்கும் அங்கும் சிதறி உள்ளன. உதாரணமாக அன்னாசிப்பூ, சேப்பங்கிழங்கு, கிடாரங்காய் போன்ற புகைப்படங்கள் அடங்கிய பதிவுகள் மட்டுமாவது இந்த தெரியாத உணவுப் பொருட்களின் பிரிவில் சேர்க்க முடியுமா? அல்லது இனி புதியதாக வரும் பதிவுகளை மட்டும் தான் சேர்க்க முடியுமா?

மேலும் தங்களின் கவனத்திற்க்கு: புதியதாக சேர்த்துள்ள பிரிவில் உணவு அலங்காரத்திற்க்கான பழைய விளக்கத்தையும் நீக்கிவிடவும். நன்றி.

பாராட்டுகளுக்கு (எனக்கு தகுதி உள்ளதா என்பது சந்தேகமே) நன்றி.

தெரியாத உணவுப் பொருட்கள் பிரிவினை இப்போதுதான் சேர்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கான படத்தினை தயார் செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் தாமதம். விளக்கத்தினையும் மாற்றிவிடுகின்றேன்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவுகளை அப்படியே இதில் இணைக்க முடியுமா என்பதை முயற்சிக்கின்றேன். இயலாத பட்சத்தில், மீண்டும் அந்த கேள்விகளை பதிவு செய்து, நானே அந்த படங்களையும் சேர்த்துவிடுகின்றேன்.

என்ன அட்மின், இப்படி கூறி விட்டீர்கள்! தங்களுக்கு எங்களிடமிருந்து கிடைக்கின்ற, இன்னும் கிடைக்கப் போகின்ற பாராட்டுக்களுக்கும் தகுதி இருக்கின்றதா, இல்லையா, என்பதற்க்கு இந்த அறுசுவை இணயத்தளமே ஒரு மாபெறும் சாட்சியாக விளங்கப்போகின்றது என்பதில் சந்தேகமே படவேண்டாம்.
இந்த புதிய பிரிவு நான் நினைத்ததை விட அநியாயத்திற்க்கு அருமையாக இருக்கின்றது.அதைச் செயல் வடிவம் கொடுத்த அட்மின் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

மேலும் சில பதிவுகள்