உதவிடுங்கள் தோழிகளே

ஹாய் தோழிகளே,.. எப்படி இருக்கீங்க, நான் இந்த மாதம் 12 ம் தேதி பீரியட்ஸ் ஆனேன், அடுத்த மாதம் 12 ம் தேதி என் கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருகிறார், நாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என் கணவருக்கு ஆறுமாதத்திற்கு பிறகு தான் லீவ் கொடுப்பார்கள், அதனால் இந்த முறையாவது நான் கன்சீவ்வா ஆக வேண்டும் என விரும்புகிறோம், என்னுடைய பீரியட்ஸ் நாள் 12 ம் தேதி, ஏப்ரல் 12 ம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பீரியட்ஸ் வர வழைக்க ஏதேனும் வழி இருக்கிறதா தோழிகளே, அப்படி என் பீரியட்ஸ் டேட் க்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாதவிலக்கை வரவழைக்க நான் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே அப்றம் இதுபோல் மாதவிலக்கை முன்கூட்டியே வர வைப்பதால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமா என்பதையும் சொல்லுங்கள் தோழிகளே

எதற்காக யாரும் எனக்கு பதில் தர மாட்டீன்கிறீங்க பிரண்ட்ஸ்

பதில் சொல்லாமலிருக்கக் காரணம்... நீங்கள் கேள்வியை வைத்த சமயம் இங்கு யாரும் இருந்திராமல் இருக்கலாம் அல்லது பதில் சொல்லும் அளவு நேரம் கைவசம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் உங்கள் கேள்விக்கான பதில் பலருக்குத் தெரிந்திராது. இங்கு வந்து வரிசையாக, 'எனக்குப் பதில் தெரியாது,' என்று சொல்ல முடியாது அல்லவா? ;-) சொல்லவும் கூடாது. அமைதியாக இருப்பது தான் சரி. உங்கள் மேல் யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை; உங்களை யாரும் தவிர்க்கவில்லை. கேள்வியை வைத்துவிட்டு தூண்டிலைப் போட்டுவிட்டு மீனுக்குக் காத்திருக்கிற மாதிரி காத்திருக்க வேண்டும். மீன் கிடைப்பது உங்கள் அதிஷ்டம். ;-)

பின்போடப் பயன்படுத்தும் மாத்திரைகள் முன்னே கொண்டுவரவும் உதவும் என்று நினைக்கிறேன். சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்க விரும்பவில்லை. நீங்கள் நினைப்பது போல் சுழற்சியைக் குழப்பலாம்; நீங்கள் செய்ய விரும்புவதுவும் அதைத்தான். ஆனால் வேண்டாம் என்பேன். டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருங்க. கணவர் வீட்டில் இருக்கும் சமயம் சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

பின் போட பயன்படும் மாத்திரை பயன்படும் இமா அவர்கள் சொல்வது போல்..
என் குழந்தகுழந்தைக்கு கோவிலில் பெயர் வைக்க இருந்தது.. ஆனால் மாதவிடாய் அறிகுறிகள் இருந்ததால் அந்த மாத்திரை உபயோகிக்க நேர்ந்தது.. அந்த மாத்திமுடிந்ததமுடிந்ததும் மாதவிடாய் வந்து விட்டது.
எனக்கு இன்னொரு சூழ்நிலை காரணமாக மாதவிடாய் வரவைக்க நினைத்தேன்.. அதனால் கணவரை மெடிக்கலில் வாங்கி வர சொன்னேன்.. ஆனால் மெடிக்கலில் கொடுக்க வில்லை..

கர்ப்பப்பையில் கட்டிகள் வந்து விடும்.. நாம் முன்கூகூட்டி வருவதற்கு மட்டும் முயற்சி செய்ய கூடாது என்று தெளிவாக கூறி விட்டார்..

யோசித்து முடிவு எடுங்கள்..

ஓகே பா, உங்க பதிலுக்கு நன்றி

Enakku kulanthai piranthu 21 matham agirathu Operation panni eduthargal ippo ennana vayitril mel sathaiyil katti irukkirathu engirar doctor vayitril adi pattu irukkum athanal raththa kasivu agi athu katti agiyirukkum engirar ipdi natakkuma sister please uthavunga please.

Please enakku uthavunga doctor tablet kuduthanga ithala karayalana chinnadha operation pannithan aganumnu solranga pa enakku payama irukku uthavunga pa please

மருத்துவர் விளக்கம் கொடுத்து உள்ளார்.. இனி நீங்கள் மாத்திரை சரியாக எடுத்து அதிகம் தண்ணீர் குடியுங்கள்..
கரைந்து விடும்.. பயப்பட வேண்டாம்..

உங்கள் வயிற்றில் அடி ஏதாவது பட்டதா? அல்லது வெயிட் அதிகமாக தூக்கியதால் தையல் பிரிந்து வலிக்கிறதா என்று பாருங்கள். டாக்டர் தான் மாத்திரை கொடுத்திருக்கிறார் அல்லவா தவறாமல் மாத்திரை எடுத்துக்கொள்வதுடன் நீராகாரம் அதிகமாக உட்கொள்ளுங்கள். சரியாகிவிடும். தேவைப்படும் பட்சத்தில் சின்ன ஆப்ரேஷன் செய்ய வேண்டியது வந்தால் செய்து விடுங்கள். பிரசவ நிலையையே கடந்து விட்டோம். இதையும் தாங்கி கொண்டு செய்து விட்டால் பயமில்லாமல் இருக்கலாம்.

மாத்திரையிலே சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கடவுளை வேண்டுங்கள்

- பிரேமா

தோழிகளே எனக்கு தோன்றியது சொல்கிறேன்.. சர்ஜரி என்றால் அனைவரும் பயப்பட தான் செயசெய்கிறார்கள்.. ஆனால் சிசேரியன் டெலிவரி ஆன பின் மிகவும் பயந்து விடுகிறார்கள்.. ஆனால் டெலிவரி சர்ஜரியை மற்ற சர்ஜரியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்..
ஏனென்றால் ஒரு பெண் அந்த சிசேரியன் செய்த பிறகு ஓய்வு ஒருபக்கம் இருந்தாலுகுழந்தையை கவனிக்க, பால் கொடுக்க, அடிக்கடி எழுவது போன்ற சிரமங்களால் அதிகம் அவதிபட வேண்டிய சூழ்நிலை வரும்..
ஆனால் குழந்தை வளர்ந்த பிறகு ஒரு பெண்ணிற்கு நடக்கும் சர்ஜரி மிகவும் எளியது.. நன்றாக ஓய்வு எடுத்து விரைவில் சரியாகி விடும்.. ஒரு வாரம் தான் வலி இருக்கும்..
எதையும் நினைத்து பயப்படாமல் நிம்மதியாக இருங்கள்..

Rompa nanri tholi enakku marupadiyum operation enral rest edukka vendum kulanthaiya kavanikka mudiyathu velai seyya mudiyathu athan payamaga irukkirathu tholi.

மேலும் சில பதிவுகள்