கல்யாணம்

எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது, கல்யாணம் ஆகி உடனே குழந்தையைத் தள்ளிப் போடலாமா,
சரியா தவறா எனக்கு குழப்பமாக உள்ளது
நான் 6 மாதம் &1 வருடம் தள்ளி போடலாம்னு நினைக்கிறேன்,
Pls help me

தவறில்லை, தாராளமாக தள்ளிப் போடலாம். கர்ப்பமானதன் பின் கலைக்க யோசிக்காமல் முன்கூட்டியே சிந்திக்கிறீர்கள். மிக்க நல்லது. மாத்திரைகள் எடுக்க யோசித்திருந்தால் இப்போதே உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். திருமணத்திற்கு முன்பிருந்தே எடுக்க ஆரம்பிக்க வேண்டி இருக்கும். ஒரு வருடம் பிரச்சினை இல்லை. உங்களுக்குக் கணவராக வரப் போகிறவரிடம் இப்போதே இது பற்றிப் பேசத் தயக்கமாக இருந்தால் திருமணம் வரை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இருவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.

திருமணத்தின் பின், 'விசேடம் எதுவும் இல்லையா?' என்று வரும் கேள்விகளுக்குத் தைரியமாகப் பதில் கொடுங்கள். இது உங்கள் வாழ்க்கை. ரசித்து வாழ உங்களுக்கு உரிமை இருக்கிறது.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்