நான்கு மாத குழந்தைக்கு உணவு

நாளை முதல் 4 மாதம் தொடங்குகிறது. 50- 50 biscuits kudukka aarampikalama..

நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.. பிஸ்கட் ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்க வேண்டும்.. அதிலும் 50-50பிஸ்கட் கூடவே கூடாது..
ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுத்து வந்தால் நமக்கு எந்த சிரமமும் இருக்காது.. உதாரணமாக தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தை மோஷன் ஆடிக்கடி போகாமல் இருக்கும்..

வேறு எந்த உணவு கொடுத்து வந்தாலும் குழந்தை எடை கூடாது.. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.. முடிந்த வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது..
பால் சுரக்கவில்லை என்று யோசிக்காமல் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் லேகியம் வாங்கி பாலில் கலந்து இருவேளை குடியுங்கள்.. மகிழ்ச்சியாக இருங்கள்..

இந்துஷா சொல்வது போல பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவே குழந்தைக்கு பிரதான உணவாக இருக்க வேண்டும். அது தான் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இன்னும் அவர்களின் செரிமான மண்டலங்கள் முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்காது. இப்போது நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் திட உணவு அவர்களுக்கு செரிமானம் ஆகாது. அதனால் நிறைய பிரச்சனைகள் வரலாம். பிஸ்கட் மாவுப்பொருள் அது செரிப்பதற்கு அதிக நேரம் ஆகும். தேவையில்லாத வயிற்று உபாதைகளை உண்டு பண்ணும். நீங்கள் வேலைக்கு செல்பவராயின் 5 மாத இறுதியில் இட்லி கொடுக்கலாம். அது சிறந்த உணவாகும். அரிசி கஞ்சி, ராகிக்கூழ், கோதுமை கூழ் முதலில் சிறிய அளவில் கொடுத்து பிறகு அதிகப்படுத்த வேண்டும். மேலும் ஒரு புது உணவை ஏற்கனவே கொடுத்த புதிய உணவின் அடுத்த 3 நாட்கள் கழித்தே வேறு புதிய உணவை கொடுக்க வேண்டும். முதலில் காய்கறி சூப், வேகவைத்து மசித்த கேரட், ஆப்பிள், வாழைப்பழம் கொடுக்கலாம். (எதுவுமே சிறிய அளவில் இருக்கட்டும்)

- பிரேமா

மேலும் சில பதிவுகள்