வயதிற்கு வரவில்லை (பூப்பெய்தவில்லை)

இன்று கோவிலில் ஒரு குடும்பத்தை பார்த்தேன். அம்மா, அப்பா , இரு பெண் பிள்ளைகள். அந்த அம்மா மிகவும் அழுது வேண்டிக் கொண்டிருந்தார். என்னவென்று கேட்டேன். முதல் பெண்ணிற்கு 18 வயது முடிய போகிறது. (பார்ப்பதற்கு 13 வயது போல தான் இருந்தாள் ) இன்னும் வயதிற்கு வரவில்லை என்று கூறி அழுதார். கேட்டதில் இருந்து மனது கஷ்டமாக உள்ளது.
இதற்கு மருத்துவம் உள்ளதா? இயற்கையாக தான் நடைபெறுமா?
வீட்டு மருத்துவம் உண்டா?

இயற்கையாக நடைபெற வேண்டும். பதின்மூன்று வயதில் பூப்பெய்தாவிட்டால் மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் விட்டுப் பார்க்கலாம். அதற்கு மேல் காத்திருப்பதை விட மருத்துவை அணுகுவது நல்லது.

மருத்துவரை அணுகியிருந்தால் - ஹோமோன் பிரச்சினை என்றால் சிகிச்சை கொடுப்பார்கள். வீட்டு மருத்துவம் இருந்தாலும் அது ஹோமோன் பிரச்சினை இருந்தால் மட்டும் தான் பலனளிக்கும்.

எப்படி சிலர் இரட்டைக் கருப்பையோடு பிறக்கிறார்களோ அது போல் கருப்பை இல்லாமல் பிறப்பவர்களும் உள்ளனர். கருப்பை இருந்தும் - சூலகம், இல்லாமலோ அல்லது முட்டைகளை உருவாக்க முடியாததாக இருந்தாலோ கூட மாதவிலக்கு வராமலிருக்கலாம். இதைத் தவிர வேறு பிரச்சினையாகக் கூட இருக்கலாம். பிறப்பு உறுப்பு பூரணமாக அமையாதவர்களுக்கும் இப்படி இருக்கும். மருத்துவர்கள் பரிசோதித்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து பிரச்சினையைச் சரிசெய்வது சாத்தியமா, எந்த அளவு சாத்தியம் என்பதைச் சொல்வார்கள்.

நோயாளி (குடும்பத்தார்) ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் விளைவு எதிர்பார்த்த விதமாக வராவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிகிச்சை முடிவுகள் சாதகமாக இருந்தாலும் பலன் தெரிய பல மாதங்கள் ஆகலாம். சிகிச்சைக்கான செலவு பெரிதாக இருக்கும்.

எங்கள் ஊரில் பூப்பெய்தாமலே முதிர்ச்சி அடைந்த பெண் என்று ஒருவரைப் பற்றிப் பேசுவார்கள். இப்போது மருத்துவம் முன்னேறி இருக்கிறது. கருப்பை மாற்றுச் சிகிச்சை கூட சாத்தியம் எனும் காலம் இது.

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு நன்றி மா... இதுவரை இதுபோன்ற ஒரு குறைபாடு நான் கேள்வி பட்டதில்லை. அவர்கள் குடும்பத்தினர் கோயில்களுக்கு சென்று வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள். அவர்கள் நல்ல மருத்துவரை சந்தித்து நல்லதே நடந்திட வேண்டும்.

M Esakki

ஒரு மருத்துவருக்கே இப்படி ஒரு மகள் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. முன்பு சிகிச்சை செய்ய இயலாதிருந்த பலதிற்கும் இப்போது சிகிச்சைகள் வந்துவிட்டன.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்