தயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே

என்னுடைய பையனுக்கு நான்கு வயதாகிறது, காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றோம், அவர் மருந்து தந்தார், இரண்டு நாளில் குணமாகிவிட்டது என்று சந்தோசம் அடைந்த்தோம், மறுபடியும் காய்ச்சல் வந்தது, மருத்துவரிடம் சென்ற போது பிளட் டெஸ்ட் எடுத்து பார்க்க சொன்னார், அந்த ரிப்போர்டில் கிருமி உள்ளது என வந்திருக்கு என டாக்டர் சொன்னார் (19200 cells/cu.mm)காய்ச்சல் ஒரு நாளில் குறைந்து விடும் என்று கூறி, காய்ச்சல் மருந்தும், கிருமி அழியுறதுகான மருந்தும் தந்தார்,.. கிருமி மாத்திரை பத்து தந்தார், அதில் இன்னும் நான்கு இருக்கிறது, இப்பொழுது மூன்று நாள் ஆகியும் காச்சல் விட்டு விட்டு வருகிறது, கிருமி காச்சலினால் பயம் எதுவம் இருக்கா தோழிகளே, எனக்கு ரொம்ப பயமா இருக்கு இது வரைக்கும் என் பையனுக்கு கிருமி காய்ச்சல் எல்லாம் வந்தத்தில்லை, ரொம்ப கவலையா இருக்கு, காய்ச்சல் குறைந்து விடும் என்று மருத்துவர் சொல்லியதால் நான் என் பையனுடன் ஹாலிடேஸ் க்கு இந்தியாவிலிருந்து, ஸ்ரீலங்கா வந்திருக்கிறேன், அவசரப்பட்டு வந்துவிட்டானோனு பயமா இருக்கு,தயவு செய்து பதில் தாருங்கள் தோழிகளே

தயவு செய்து பதில் தாருங்கள் தோழிகளே மிகுந்த வேதனையில் உள்ளேன்

கிருமி என்றால் என்ன கிருமி! கேள்வி பதிவிட்டு 3 நாட்களும் சும்மாவா இருந்தீர்கள்? கவலை என்கிறீர்கள், ஆனால் எதுவுமே செய்யாமல் எப்படி இருந்தீர்கள்! இப்படி எல்லாம் கேள்வியை பதிவிட்டுவிட்டால் மட்டும் குழந்தைக்குக் குணம் ஆகும் என்று நம்பினீர்களா! இலங்கையிலும் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். யோசிக்காமல் ஒரு முறை காட்டிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

இன்று காட்டினோம் சிஸ், மீண்டும் பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு கிருமி இருக்கிறதா சொன்னார்கள், (pus cells 80-90) யூரின் கல்சர் டெஸ்ட் எடுக்க சொன்னார்கள், கொடுத்து விட்டு வந்திருக்கோம் மூன்று நாள் பிறகு தான் ரிசல்ட் வருமாம், ரிப்போர்ட்ஸ் வரும் வரை ஆண்ட்டிபயோடிக் சிரப் (Augmentin 156mg) தந்திருகிறார்கள், இந்த சிரப் கொடுத்தும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் அட்மிட் ஆகணும் என்று சொன்னார்கள், paracetamol சிரப் கொடுத்தும் காய்ச்சல் நிற்கவில்லை, 102 டிகிரி 103 டிகிரி குறையாமல் காய்ச்சல் இருக்கிறது, சாப்பிடவும் மாட்டேன்கிறான், சாப்பிட்டதும் வாமிட் பணிட்ரான், அவனை இந்த நிலமையில் என்னால் பார்க்க முடியவில்லை, காய்ச்சலை குறைக்க வேறு ஏதாவது வழி இருக்கா சிஸ், மருத்துவரிடம் சொன்ன போது ஆன்டி பயோடிக் கொடுங்க, பரசேடமோல் கொடுங்க என்றார், ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை paracetamol கொடுக்க சொன்னாங்க, கொடுத்தும் எந்த பயனும் இல்லை, ரிசல்ட் வரும் வரை இந்த மூன்று நாட்களும் என்ன செய்வது என்று புரியவில்லை, உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் சிஸ்டர்

யூரின் கலசர் டெஸ்ட் வந்த பிறகு தான், என்ன கிருமி அதற்கான மருந்து என்ன என்று மருத்துவர் சொல்வார்களாம், காச்சல் சிரப் அடிக்கடி கொடுக்கலாமா சிஸ்,ஆறு மணி நேரத்துக்கு ஓரு முறை கொடுக்க சொன்னார்கள், இனனும் நேரத்தை குறைத்து மருந்து தரலாமா,

மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள். கூட்டிக் குறைப்பது எல்லாம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மருந்து கொடுத்தும் காய்ச்சல் குறையாவிட்டால் அட்மிட் பண்ணச் சொன்னதாகச் சொல்கிறீர்கள். இதற்கு மேல் நான் சொல்லும் ஒவ்வொன்றைப் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'எனக்குத் தெரிந்ததை' எல்லாம் சொல்லக் கூடாது. உங்கள் பக்கமிருந்து எனக்குத் தெரியவராதவை இருக்குமே!

அது குழந்தை; 'உங்கள்' குழந்தை.

நான் உங்கள் இடத்தில் இருந்தால், 'இமா தூங்கி எழுந்து பதில் சொல்வாங்க, அந்தப் பதில் சரியாக இருக்கும்,' என்று நம்பிக் கொண்டு இருக்க மாட்டேன். எப்பவோ அட்மிட் பண்ணி இருப்பேன்.

‍- இமா க்றிஸ்

ஓகே சிஸ் நாங்க அட்மிட் பண்ணலானு தான் இருக்கோம் சிஸ், ஹாசப்பிடலுக்கு சென்றாலே பையன் ரொம்ப பயப்படுறான், ஒரு மாசத்துக்கு முன்ன தான் ஆண்குறியில் அடைப்பு ஏற்பட்டு லேசர் மூலமா ஆப்பரேஷன் செய்தாங்க, அதிலிருந்து ஹாசப்பிட்டல் னாலே ரொம்ப பயப்படுறான், நடுங்குறான், அதனால் தான் வீட்டில் வைத்தே சரி செய்ய முடியுமா என்று முயற்சி செய்ய பார்த்தோம், உங்க பதிலுக்கு நன்றி சகோதரி

தொற்று நோய்கள் நெருப்பைப் போல. பெரிதாவதற்கு நாட்கள் தேவையில்லை; நிமிடங்கள் போதும். மனித உடல் வலு குறையக் குறைய, தாக்குதலின் தீவிரம் அதிகமாக இருக்கும். எத்தனை தாமதிக்கிறீர்களோ அத்தனை தாமதமாகத் தான் குணமாகும். //வீட்டில் வைத்தே சரி செய்ய முடியுமா என்று முயற்சி செய்ய பார்த்தோம்,// இனிமேல் இப்படி முயற்சி செய்ய நினைக்க வேண்டாம். அட்மிட் பண்ணச் சொல்லியிருக்க, வீட்டில் வைத்தே சரி செய்ய முயற்சி செய்ய நினைப்பது... ரிஸ்க் இல்லையா! பிழையாகிப் போனால்!! எது வேண்டுமானாலும் ஆகலாம். உங்கள் குழந்தையின் நலன் உங்கள் பொறுப்பு இல்லையா! ஆஸ்பத்திரி, ஊசி எல்லாம் பெரியவர்களுக்கே பயம்தான். அதற்காக தாமதிப்பது தப்பு.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொல்வது ரொம்ப சரி சிஸ், நேற்று நைட் பையனை அட்மிட் செய்துவிட்டோம், நன்றி சிஸ்

மேலும் சில பதிவுகள்