தாய்ப்பால் சுரப்பை நிறுத்த...

என் மகனுக்கு 1 வயது 7 மாதம். தாய்ப்பால் குடிக்கிறான். நான் இன்று 40 நாள் கர்ப்பம் உறுதி செய்துள்ளேன்.
நேற்று முழுவதும் தாய்ப்பால் கொடுக்கவில்லை. ஆனால் பால் அதிகம் சுரக்கிறது. வீட்டு வைத்தியம் செய்தால் (மல்லி பூ வைத்து கட்டுவது, துவரம் பருப்பு பூசுதல்) செய்தால் அடுத்த குழந்தைக்கு பால் இருக்காதா? மருத்துவரிடம் சென்று மருந்து எடுத்து கொண்டாலும் அடுத்த குழந்தைக்கு பால் இருக்காதோ என்று பயமாக உள்ள்து.
தயவு செய்து அனுபவம் உள்ளவர்கள் பதில் கூறுங்கள்.

நீங்கள் கொடுக்காமல் விடவே மெதுவே குறையும். நீங்கள் சொன்ன வீட்டு வைத்தியங்கள் பிரச்சினை இல்லாதவை. இதனால் அடுத்த குழந்தைக்குப் பால் குறையப் போவது இல்லை. மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் வராது. தானாகவே குறைந்து விடும்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் கொடுக்க வில்லை என்றாலே குறைந்து விடும்.. இரண்டு மூன்று நாட்கள் பால் கட்டி கொண்டு இருப்பது போல உணர்வு இருக்கும்.. பயப்பட தேவையில்லை.. மருத்துவரிடம் சென்று மருந்து உண்ண வேண்டாம்..

பதிலுக்கு நன்றி...இன்னும் பால் ஊறுவது போல தான் உள்ளது. 4 - 5 நாட்கள் கழித்து பார்க்கிறேன்.

M Esakki

மேலும் சில பதிவுகள்