வீட்டில் நாற்றம் உதவுங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு பையனுக்கு கிருமி காய்ச்சல் என மருத்துவமனைக்கு போட்டதை போட்டபடியே போட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டோம், இன்று வீட்டிற்கு திரும்பினால் வீடு முழுவதும் ஒரே நாற்றம், என்ன நாற்றம் என்று பார்த்தால் இரண்டு நாட்கள் சமைத்து விட்டு வைத்து போன, தேங்காய் சோறு, சிக்கன் கிரேவி, முட்டைகோஸ் பொரியல் அனைத்தையும் கீழே போடாமல் அப்படியே வைத்து விட்டு போனதால், புழு உண்டாகி வீணாகி போயிருக்கு, பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்த பிறகும் வீட்டில் அந்த நாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது, பாத்திரங்களிலும் தான், இப்பொழுது இந்த நாற்றத்தை போக்க நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு எதுவும் புரியவில்லை, பையனுக்கு இதனால் மீண்டும் கிருமி ஏறிவிடுமோ என பயமாக இருக்கிறது, இதற்கு என்ன செய்தால் நாற்றத்தை போக்கலாம் என சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ், அப்றம் அந்த பாத்திரங்களை நான் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அப்டிங்கிரத்தையும் சொல்லுங்க தோழிகளே

முதல்ல பையன் எப்பிடி இருக்கார்னு சொல்லுங்க. வீட்டுக்கு கூட்டிவந்தாச்சா?

கூடுமானவரை ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்க. கேட்டின்கள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் எல்லாவற்றையும் கழுவி எடுங்க. அலமாரியில் இல்லாமல் வெளியே இருந்த துணிகளையும் கழுவிருங்க. எயா ஃப்ரெஷ்னர் / ஊதுபத்தி வாடையைக் குறைக்கலாம். ஆனால் அவையே ஆரோக்கியத்துக்குக் கேடுதான். சிலசமயம் ஏற்கனவே உள்ள வாடையோடு சேர்ந்து புதிதாக இன்னொரு வாடையாக மாறிவிடும். வெங்காயத்தை குறுக்காக வெட்டி அறைகளில் ஆங்காங்கே வைத்துப் பாருங்கள். பாத்திரங்கள் என்ன விதமான பாத்திரங்கள்? அவற்றுக்கும் வெங்காயத்தைத் தேய்த்துவிட்டு பிறகு வழக்கம் போல கழுவிப் பாருங்கள். வாடையுள்ள பாத்திரங்களில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு மேல் சமையலின் சுவையையும் கெடுக்குமே! பையனைப் பார்க்கிறதுதான் இப்போது உங்கள் முக்கிய வேலையாக இருக்கும். இருந்தாலும் இதைக் கவனிக்காமல் விடாதீங்க. சமையலுக்கு வேறு பாத்திரங்களைப் பயன்படுத்துங்க. வாடை இல்லாது போனாலும், அலுமினியப் பாத்திரங்களில் அரித்துப் போன மாதிரி அடையாளம் தெரிந்தால் வீசி விடுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

உங்களிடம் நானும் ஒரு உதவி கேட்கப் போகிறேன். இழைக்கான அந்தத் தலைப்பு மிகமிக நீளமாக இருக்கிறது. என்ன பிரச்சினை என்று குறிக்கும் இரண்டு சொற்கள் மட்டும் இருந்தால் போதும். தயவு செய்து மீதியை டிலீட் பண்ணிவிட்டுருறீங்களா?

‍- இமா க்றிஸ்

வெங்காயம் ஆங்காங்கே வெட்டி வைப்பது பெஸ்ட்.. அது பாக்டீரியா போன்ற தொற்று வராமல் தடுக்கும்..
கொஞ்சம் சாம்பிராணி புகை போடலாம்.. அதில் காய்ந்த வேப்பிலை சேர்த்து போடலாம்..
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு வைத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து விளக்கி எடுங்கள்..
ரூம் ஸ்ப்ரே இருந்தால் கொஞ்சம் போட்டு விட்டு ஜன்னல் கதவை திறந்து வையுங்கள்..

பையன் நல்லா இருக்கான் சிஸ், ஆன்டிபயாடிக் டோஸ் நரம்பு வழியாக ஏற்றுனார்கள் இரண்டு நாட்களும், இன்று காலை பிளட் டெஸ்ட் மறுபடியும் எடுத்து பார்த்ததில் கிருமி குறைந்து விட்டது என வந்தது, பிளட் டெஸ்ட் வந்த பிறகு தான் நிம்மதியே வந்தது சிஸ், அல்லாஹ்வின் அருளால் இப்போ பையன் நல்லா இருக்கான்,

ஜன்னல் அனைத்தையும் வந்ததுமே திறந்து விட்டாச்சு சிஸ், இப்போ நாற்றம் குறைந்து விட்டது, பாத்திரங்கள் அரித்து போக வில்லை என்றாலும், அதில் சமைத்தால் எங்கே மறுபடியம் ப்ராப்ளம் வப்பித்துவிடுமோ என பயமா இருக்கு, வந்ததுமே நன்கு கழுவி, இப்போ வரைக்கும் ஊர வச்சிருக்கேன், அலுமினிய பாத்திரம் இல்லை சிஸ், நான்ஸ்டிக் பாத்திரங்கள் தான், நாற்றம் இல்லாவிட்டால் யூஸ் பண்ணலாமா சிஸ், அப்படி யூஸ் செய்வதினால் கெடுதல் எதுவும் வராது தானே

ஓகே சிஸ், டெலிட் பண்ணிவிட்டேன்

வெங்காயம் வெட்டி வைக்கிறேன் சிஸ், கிச்சனில் மட்டும் வைத்தால் போதுமா, இல்லை வீடு முழுவதும் வைக்கணுமா சிஸ், சாம்பிராணி என்னிடம் இல்லை சிஸ், வெங்காயம் மட்டும் வைத்தால் போதுமா

சிஸ் வேண்டாம். இமா என்றே கூப்பிடுங்க. ;-)

வெங்காயம் - எந்தெந்த அறைகளில் வாசனை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் வைக்கலாம்.
இதனால் பையனுக்கு இருந்த அதே பிரச்சினை திரும்ப வராது.

பாத்திரங்களைக் கழுவி நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து எடுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்க பெரியவங்க இல்லையா, நான் சின்ன பொண்ணு தான், உங்களை பெயர் சொல்லி கூப்பிட்டா சரியா வராது, நான் மேம் னு சொல்லடா, அப்றம் இன்னும் ஒரேயொரு டவுட், அது என்னன்னா இரண்டு நாட்கள் முன்னாடி இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து விட்டு அதையும் சரியாக கவனிக்காமல் மிக்சி ஜாருடனே பிரிட்ஜில் எடுத்து வைத்து விட்டு போய்விட்டேன், இன்று அதை திறந்து பார்த்தால் லைட் கிரீன் கலரில் மாறி போயிருக்கு, ஆனால் வாசம் அதே தான் இருக்கிறது, எதனால் கலர் மாறி போனது மேம், அதனை நான் உபயோகபடுத்தலாமா

பாத்திரங்களை விம் லிக்விட் போட்டு விளக்கி விட்டு வெயிலில் காயவைத்து விடுங்கள். எடுத்து வெந்நீரில் ஊற வையுங்கள். வெந்நீரில் வைப்பதால் கிருமிகள் அழிந்துவிடும். வாடைக்கு, ரூம் ஸ்ப்ரே சிறந்தது. இந்துஷா, இமா அம்மா சொன்னமாதிரி வெங்காயம், சாம்பிராணி பயன்படுத்துங்கள். டெட்டால் கொண்டு வீட்டை துடைத்து விடுங்கள். பயம் வேண்டாம்.

- பிரேமா

ஓகே சிஸ், அண்ட் இஞ்சி பூண்டு பேஸ்ட் வீட்டில் அரைத்தது மிக்சி ஜாருடன் வைத்துவிட்டேன், இப்போ அது கிரீன் கலராக மாறி இருக்கு, எதனால் அப்படி மாறியது சிஸ், அதை நான் உபயோகிக்கலாமா

மேலும் சில பதிவுகள்