பட்டாம் பூச்சி பட..பட.. (1)

முயல் குட்டி போல அப்பப்ப எட்டி பார்த்தாலும் எப்போதாவது தான் பதிவுகள் வெளியே எட்டி பார்க்குது.

இப்போதெல்லாம் பக்கம் பக்கமாய் எழுத முடிவதும் இல்லை, முயற்சி செய்யவும் முடிவதில்லை. ஆனாலும் எழுதாமல் இருக்கவும் முடிவதில்லை.
ஆசைக்காய் நாலு வரியாச்சும் கிறுக்கி கொண்டு தான் இருக்கிறேன். அதை யாச்சும் பகிர்வோமே என்று தான் இந்த பதிவு.

தலைப்பை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் வலையின் பெயரையே தலைப்பாய் கொடுத்து விட்டேன்.
நல்ல தலைப்பின் பெயர் கிடைத்தால் சொல்லி போங்க.

இங்கே சிதறிகிடக்கும்
எழுத்துகளில்
என்னை தேடாதீர்கள்!!!!
இவை அனைத்தும்
பார்த்தது, ரசித்தது
சிரித்தது, சிந்தித்தது
கேட்டது, கேள்விப்பட்டது
அழுதது, அனுபவித்தது
அனுமானித்தது என
பலரின் உரக்க சொல்ல
முடியாத உணர்வுகள்....

*அது அப்படியல்ல
ஆனாலும் அப்படிதான்* (1)
**************************

மனித நேயம் மிக்க மனிதர்களை உருவாக்க தவறுகிறோம் என்பதை எப்பொழுது உணர்வோம்?

* கற்றதும் மறந்ததும்* (2)
****************************

செய்யும் தான தர்மங்கள்
நாம் செய்யும் பாவங்களுக்கான
பிராயசித்தமாக இல்லாமல்
இருக்கட்டும்!!

*வாழ்க்கை என்பதுயாதெனில்* (3)
**********************************

படபடக்கும்....

3
Average: 2.5 (2 votes)

Comments

பட்டாம் பூச்சி யின் பட பட தொடரவேண்டும்.. இன்னும்

Be simple be sample

கவிதைகள் அழகு. தொடர்ந்து எழுதுங்கள்.

‍- இமா க்றிஸ்