எனக்கு உதவி வேண்டும் தோழிகளே

நான்62 வயது பெண்மணி. என் மனதை திட படுத்தி கொண்டு எழுதுகிறேன் .எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள். பெண்கள் மூவரும் திருமணம் முடிந்து நல்ல நிலையில் உள்ளனர். இரண்டு மகன்களும் திருமணம் ஆகிவிட்டது .என் பேச்சு மூத்த மகன் சம்மந்தப்பட்டது. என் மகனுக்கு 26 வயதிலும் என் மருமகளுக்கு19 வயதிலும் திருமணம் ஆனது. தற்போது என் மகனுக்கு31 வயதும் மருமகளுக்கு 23 வயதும் ஆகிறது .திருமணம் ஆகி 6 வருடம் வருகிறது .என் மகன் BCA படித்தான் .மருமகள் என்ஜினீயரிங் படிக்கும் போது (3வது வருடம்) திருமணம் ஆனது. இரு வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் தான். திருமணம் ஆன சில மாதங்களில் மருமகள் கருவுற்றால் .ஆனாலும் கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர்ந்தால். என் மருமகள்8 மாதம் கருவுற்றிருக்கும் போது ஒரு பெண்மணி எங்கள் வீட்டில் வந்து உங்கள் மகனை கண்டித்து வைங்கள் என் மருமாகளுடன் பலகுகிறான் இது சரி இல்லை என்று கூறினார் .மேலும் அன்று என் மகன் வெளி ஊரில் வேலை என்றும்3 நாட்கள் வரமாட்டேன் என்று கூறி சென்றான் .எங்கள் பெண்ணை காணவில்லை உங்கள் பையன் கூட்டி போய் விட்டான் என்றும் எங்கள் தலையில் இடி இறக்கினார். மகன் போன் ஆஃப் செய்து இருந்தது.3 நாட்கள் கழித்து வந்த மகன் வந்தான் .கண்டிப்பான விசாரணைக்கு பின் உண்மை தெரிய வந்தது. அவள் எங்கள் உறவினர் வீட்டுக்கு அருகில் வாசித்த பெண் என்றும் .அவள் திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலிதாகவும் அவள் வீட்டில் ஏற்காமல் வேறு திருமணம் செய்து வைதாகவும் .இருந்தும் இவனை மறக்காமல் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்து பின் மீண்டும் என் மகனுடன் பழக்கம் ஏற்பட்டது. என் மகன் தனக்கு திருமணம் ஆனால் அவள் விலகி விடுவாள் என்ற எண்ணத்தில் என் மருமகளை திருமணம் செய்ய ஒப்பு கொண்டதாகவும் கூறினான் .என் மகன் திருமணம் பின் என் மகன் விலக அவள் தற்கொலை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தகவும் கூறினான். இந்த அதிர்ச்சியில் என் மருமகளுக்கு 8 மாதம் பிரசவம் ஆனது. பேரன் பிறந்தான். என் மகன் கோப சுபாவம் கொண்டவன் .திருமணம் செய்து2 மாதத்தில் என் மருமகள் வீட்டில் சண்டை போட்டான் இதனால் என் சம்பந்தி வீட்டார் யாரும் பேசுவதில்லை என் மருமாகளிடம் கூட. என் மருமகள் தன் பட்ட படிப்பை முடித்தால் .நல்ல திறமை சாலி .நல்ல அனுசரணை உள்ள பெண் .இப்போது என் கவலை என்ன என்றால். என் மகன் செய்த தப்புக்காக என் மருமகள் என் மகனிடம் ஓட்டுவதில்லை .ஐந்து ஆண்டுகளில் தாம்பத்ய உறவு என்பது ஒன்று இல்லவே இல்லை இது என் மகன் சொல்லி தான் தெரியும் .என் மகனிடம் பிரச்சினை நடந்த ஆரம்ப கட்டத்தில் பேசாமல் இருந்தால் அப்போது குழந்தை சின்ன தாக இருந்தான் .அப்புறம் ஓரிரண்டு வருடங்களில் பட்டும் படாமல் பேசினால் .என் மகன் போதையில் தான் வருவான் .வந்ததும் தூங்கி விடுவான் .நித்தமும் அவனுக்கு தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன் .தற்போது ஒரு வருடம் என் மகன் திருந்தி வாழ்கிறான் .குடிப்பதில்லை ஒழுங்காக தொழில் கவனிக்கிறார் .தற்போது இரண்டு வாரமாக என் நெஞ்சில் பாரமாக நிற்கும் கேள்வி இது தான் .என் மகன் என் மருமாகளிடம் தாம்பத்தியம் எதிர் பார்த்து நெருக்கமாக போகயில் என் மருமகள் விலகிவிடுகிறாள் .எதார்த்தமாக பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் சட் என விலகுகிறாள்.நான்கு ஆண்டுகளாக என் மகன் கட்டிலும் மருமகள் கீழையும் உறங்கி உள்ளனர்.என் பேரன் தற்போது அப்பா உடன் பேசு அம்மா என்றும் தனக்கு தம்பி பாப்பா வேண்டும் என்றும் அப்பா உடன் வெயில் போலாம் என்றும் கூறினான் .அவன் பிறந்து மூன்று ஆண்டுகள் தந்தை பாசம் என்ன என்று தெரியாத குழந்தை அவன் .குடி போதையில் இருப்பவனே .அப்பா தூங்கிட்டார் என்றால் சமாதானம் அடைவான் .அப்படி இருக்கையில் இப்போது குழந்தை அவன் அப்பா சொல் பேச்சு கேட்டு அம்மா விடம் சொல்கிறது என்றாலும் .என் மகன் மேல் தான் தவறு உள்ளது அவன் செய்தது எந்த மனைவி யலும்6ஏற்று கொள்ள முடியாது, என்றாலும் .என் மகன் திருந்தி விட்டான் என்பதை விட என் மருமகள் அந்த சிறு வயதில் தன்னை பக்குவப்படுத்தி அனைத்தையும் தியாகம் செய்து விட்டால் .என் மருமகள் எந்த விழா வுக்கும் வந்தது இல்லை .முக்கிய விரத தினத்தில் மட்டும் கோவில் செல்வாள் .சொந்த பந்தம் எந்த விழாவுக்கு வர மாட்டாள் .வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள் .வீட்டுக்கு உள்ளையே சுறுசுறுப்பாக இருப்பாள் .வீட்டை சுத்தமாக வைப்பது .வீட்டை அழகு படுத்துவது .ஓவியம் ,தையல் ,என தனக்கு தானே எங்கஜ் செய்து கொள்வாள் .என் மகன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தன் வாழ்க்கை வீணாகி விட்டதாவும் தனக்கு போக்கிடம் ஏதும் இல்லை என்பதாலும் தன் மகன் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு இங்கே இருப்பதாகவும் கூறினால் .அவளும் சிறு வயது பெண் .என் மகனும் சிறு வயது தர்போது என் மகன் திருந்தி விட்டான் .ஒரே வீட்டில் இருவரும் பிரிந்து வாழ்வது கொடுமையான விஷயம் .மேலும் என் மகன் அவள் மேல் உயிரே வைத்துருக்கிறேன் அவள் இல்லை என்றால் நான் இல்லை என்கிறான் .தன்னுடன் சேர்ந்து வாழும் படி வற்புறுத்துகிறேன் .பலவந்தமாக உறவு கொள்கிறான் .இதை எல்லாம் பார்க்கும் போது என் மனம் துடிக்கிறது .என் மருமகளை மகளாக நினைத்து எழுதுகிறேன் எனக்குஒரு விடை வேண்டும் தோழிகளே

வசதி வாய்ப்பிருக்கு குறை இல்லை .இரண்டாவது பையன் மருமகள் ஓரே ஊரில் தனி குடித்தனம் .இரண்டாவது மருமகள் அனுசரணை கிடையாது .எடுத்தெரிந்து பேசுவாள் .அவளை பார்க்கையில் என் மூத்த மறு மகளின் வாழ்க்கை ஆரம்பத்தில் சரி செய்யாமல் விட்டு விட்டேன் என குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். என் மகன் திருந்தினால் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது என் மருமகள் தன் கணவன் செய்த துரோகம் மறக்க கால அவகாசம் கேட்கிறாள் அவனோ இனிமேல் பொறுக்க முடியாது என்கிறான் .மீன்டும் அவன் தவறான பாதையில் சென்று விடுவான் என்ற பயத்தில் என் மருமாகளிடம் கூச்சம் விடுத்து அவனுடன் சேர்ந்து வாழ வேண்டினேன் .அவளும் என் பேச்சுக்கு மரியாதையாக அவனுடன் பேசுகிறார் .தன் கணவன் தன்னை நெருங்குவதால் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறாள் .என் மனம் கடந்த ஒரு வாரமாக தூக்கம் வரவில்லை. ஒரு அடிமை போல் என் மருமகள் இருக்கிறாள் என்றும் அவள் பாவம் சும்மா விடாது என்றும் உறவினர்கள் சொல்கினரர் .காலம் தாழ்ந்த ஒரு முடிவு வேண்டும் உதவிகள் தோழிகளே

அவள் பெற்றோரிடம் பேசினேன் மன்னிப்பு கேட்டேன் .அவர்களுக்கு இந்த விஷயம் ஒர் அளவு தெரிந்து உள்ளன .இருந்தாலும் என் மகனை பார்க்க விருப்பம் இல்லாததால் எங்கள் வீட்டுக்கு வரவில்லை எனவும் .தான் மகள் பேரனை அழைத்து செல்கிறோம் பிறகுபார்த்து பேசி கொள்ளலாம் என்றார்கள் .நானோ என் மகன் மீண்டும் தகராறு செய்வான் என்றும் மேலும் அவன் தற்கொலை செய்து கொள்வனோ என்ற பயத்தில் ஆறுதல் மட்டும் கூறு மாரு தவிர்த்தேன் .இதனாலோ என்னவோ என் மகன் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்கிறான். தன் சொந்த அக்கா, தம்பி யாரிடமும் பேசுவது இல்லை .அவன் நன்கு படிப்பான் நல்ல திறமை சாலி .அவர்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துகிறேன் .என் சின்ன மருமகள் பெரியவளிடம்.நம் அத்தை தான் செல்லம் கொடுத்து கெடு கிறாள் என்றும் மகனை கண்டிக்காமல் உன்னை மிரட்டுகிறார் உன் நிலமையில் நான் இருந்தால் எப்போதோ போயிருப்பேன் என்று கூறினால் .ஆனால் பெரியவள் அதனைபெரிதாக பொருட்படுதவில்ல. இருந்தாலும் என் மறு மகள் என் மகனை ஏற்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது

//என் மகன் திருந்தினால் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.// என்கிறீர்கள். அப்படியானால் மருமகளைச் சரி செய்யாமல் விட்டதான குற்ற உணர்ச்சி வேண்டாம்.

வளர்ந்தவர்களை யாரும் திருத்த முடியாது; அவரவர் தாமாகவே தன் பிழைகளைத் திருத்திக் கொள்வார்கள் - பிழை செய்வதாக உணரும் பட்சத்தில். இன்னொருவர் சொல்லிக் காட்டினால், பெரும்பாலானோர்க்கு தான் செய்தது சரியேதான் என்னும் எண்ணம் இன்னும் அதிகமாகும். அதை நிறுவ காரணங்களைச் சொல்லிக் காட்டுவார்கள்.

உங்கள் மருமகள் உங்கள் பேச்சுக்கு செவிசாய்த்ததையிட்டு சந்தோஷப்படுங்கள். அவர் அடிமையாக இருக்க மாட்டார். பேசத் தெரிந்தவர்கள் சமாளித்துக் கொள்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டீர்கள். அதோடு விட்டுவிடுங்கள். உங்களால் உங்கள் மகனிடம் எதுவும் பேச முடியாது என ஊகிக்கிறேன்.

உறவினர்கள்.... அவர்கள் கருத்தைக் கேட்கலாம், ஒரு வரையறைக்குள் மட்டும். //ஒரு அடிமை போல் என் மருமகள் இருக்கிறாள்// இதை உங்கள் மருமகள் சொல்லவில்லை அல்லவா? யோசிப்பதை விட்டுவிடுங்கள். //அவள் பாவம் சும்மா விடாது என்றும் உறவினர்கள் சொல்கினர// நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? புரியவில்லை. உண்மையில் இப்படி எல்லாம் எதுவும் இல்லை. மனிதர் பிழையான பாதையில் போகாது இருக்க முன்னோர் சொல்லி வைக்க, நாம் கண்ணை மூடிக் கொண்டு தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறோம். நீங்கள் கடவுள் தண்டிப்பதற்கான எந்தத் தவறும் செய்யவில்லை. நிம்மதியாகத் தூங்குங்கள்.

மகன், மருமகள் விடயத்தில் நுழைய வேண்டாம். அவர்கள் குடும்பப் பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள், சின்ன மகன், மருமகள், மகள், மருமகன் எவரானாலும் மணம் செய்து வைத்தீர்களானால் பிறகு அவர்கள் பிரச்சினைகளை அவர்கள் பார்க்கும்படி விடுவது நல்லது. அவர்கள் குழந்தைகள் அல்ல. மணமாகாவிட்டாலும் கூட வளர்ந்த பிள்ளைகள் விடயத்தில் ஒரு அளவுக்கு மேல் நுழைவது சரியாக இராது என்பது என் அபிப்பிராயம்.

(இது காலையில் உங்கள் பதிவைப் பார்த்ததும் தட்டியது. திடீர்ப் பயணம் ஒன்று. பதிவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டேன்.)

‍- இமா க்றிஸ்

எதற்காக மன்னிப்புக் கேட்டீர்கள்? ஒன்று நீங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்லவில்லை அல்லது நீங்களாகவே குற்ற உணர்ச்சியை உருவாக்கிக்கொண்டு இல்லாத பிரச்சினையை உருவாக்குகிறீர்கள். உங்கள் மகனின் வாழ்க்கை; அவரது பிரச்சினை. நீங்கள் அவருக்காக சம்பந்தி வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியது இல்லை. ஒருவேளை உங்களால் தான் முதலில் பிரச்சினை ஆரம்பித்ததோ?

//இதனாலோ என்னவோ என் மகன் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்கிறான். //ம்... ஏன் பயப்பட வேண்டும்!! எந்த ஒரு மனிதனும் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. சுதந்திரமாக வாழ அவருக்கு உரிமை இருக்கிறது இல்லையா!

//அவர்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துகிறேன்// அக்கறை இருந்தால் நீங்கள் இனி அவர்கள் நடுவே நுழையாமல் இருப்பீர்கள்.

உங்கள் பெரிய மருமகள் மற்றவர்கள் சொல்லுக்கு ஆடுபவர் இல்லை; சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர் என்று புரிகிறது. உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கிறார். நீங்கள் உங்கள் மகனிடம் பேச முடியாமல் மருமகளிடம் பேசினால் சரியாகும் என்று பார்க்கிறீர்கள்.

//இருந்தாலும் என் மறு மகள் என் மகனை ஏற்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது// :-) அப்படியே இருந்தாலும் அவர் கொஞ்சம் கால அவகாசம் கேட்கிறாரே தவிர மாட்டேன் எனவில்லை அல்லவா? அவசரப்படுத்தாமல் நிம்மதியாக விட்டுவிடுங்கள். அவ,ர் தான் சரியானதும் தன் வாழ்க்கையைச் சரி செய்து கொள்வார்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிவுக்கு நன்றி .என் மருமகள் ஏதும் சொல்ல வில்லை .என் உறவினர் ஒரு சிலர் உன் மகன் செய்த தவறுக்கு அவளாக இருக்கவும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டால் இல்லை என்றால் இந்நேரம் அவன் கதை முடிந்தது இருக்கும் என்கிறார்கள். அவள் ஒரு புதுமை பெண் .என் கடைசி காலம் வரையில் அவளுடன் இருக்க ஆசை .என் மகன் என் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை .அவன் என் செல்ல மகன் அவனுக்காக தான் நான் அத்தனை அவன் செய்த தவறுகளை மன்னித்துவிட்டேன் .பெற்றவள் நான் ஏற்று கொண்டது போல என் மருமகளை ஏற்று கொள்ள வைத்தேன் அது தான் என் மனசு பாரமாக உள்ளது.

அவர்கள் இருவரும் ஒன்றாக இன்னும் பல வருடம் வாழப் போகிறவர்கள். மருமகள் மகனிடம் பேசிக் கொள்ளட்டும். ஏற்கனவே நடந்ததையிட்டு இனி யோசிக்க வேண்டாம். ஒரு தாயாக அந்த விடயத்தைச் செய்தீர்களே தவிர மருமகளுக்குத் தீமை நேர வேண்டும் என்னும் எண்ணத்தில் செய்யவில்லை அல்லவா? உங்களை நீங்கள் வருத்திக் கொள்ள வேண்டாம். அமைதியாக இருங்கள். இனிமேல் மருமகள் பார்த்துக்கொள்ளட்டும். விட்டுவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்