தீர்வு சொல்லுங்க

தோழிகளே எனக்கு 4மாத குழந்தை உள்ளது ஆனால் அவன் 24மணி நேரமும் என்னோட இருக்கின்றான் தூங்கும் போது கூட நான் இல்லாம தூங்கிறான் இல்ல . அவன் 3மணி நேரம் தூங்கினால் குறைந்து 6 தடவை பாலுக்கு சிணுங்கின்றான் பால் குடிக்காட்டி எழும்பிடுவான் இது தான் இரவிலும் நடக்குது . இதனால் என்னால் தூங்க முடியல அத்துடன் வீட்ல வேலையும் செய்ய முடியல. இவன் தனியா இருக்கிறான் இல்ல . எல்லாரும் பால நல்ல குடிச்சிட்டு படுத்தா எழும்ப மாட்டான் என்று சென்னாங்க இல்ல அவன் அப்பவும் இப்படி தான் இருக்கான். எனக்கு ஒவ்வொரு மாசத்தை கடக்கிறதும் நரகமா இருக்கு please எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க இது ஏதும் பிரச்சனையா ? எப்படி சரி செய்யலாம் ?

//அவன் 24மணி நேரமும் என்னோட இருக்கின்றான் / ;))) பிழையாச் சொல்லுறீங்க வசு. குழந்தை உங்களோட இல்ல; நீங்கதான் 24 மணி நேரமும் அவரோட இருக்கிறீங்க. நீங்க நினைச்சா விலகலாம்.

//நான் இல்லாம தூங்கிறான் இல்ல// நீங்க விட்டுப் பார்க்கேல்ல எண்டு நினைக்கிறன். கொஞ்ச நேரம் அழுகை நடக்கும். நீங்க கவனிக்காட்டி நித்திரை ஆகீருவார். நீங்கள்தான் பழக்கி விட்டிருக்கிறீங்க / பழக்கி விடேல்ல. :-)

//அவன் 3மணி நேரம் தூங்கினால் குறைந்து 6 தடவை பாலுக்கு சிணுங்கின்றான்// ஒரு நாளைக்கு இத்தனை தரம் இத்தனை மில்லிலீட்டர் பால் என்று ஒரு கணக்கு இருக்கு. சில பிள்ளைகள் கொஞ்சம் முன்பின்னாக இருப்பார்கள். நித்திரை சின்னனாக இருக்கிறது பிரச்சினை இல்லை. அப்பிடித்தான் இருப்பாங்க. //இது தான் இரவிலும் நடக்குது .// அப்பிடித்தான் இருப்பாங்க. நீங்க கவனிச்சீங்க எண்டா இந்த இடைவெளி குறையுறது தெரியும்.

//என்னால் தூங்க முடியல// நீங்க நித்திரையைக் குழப்பி எழும்ப வேணும் எண்டது இல்ல. விட்டுருங்க. அழுதிட்டு நித்திரையாகுவாங்க. முதல் ரெண்டு மூண்டு நாள் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்துபாருங்க. நாலாம் நாள் எல்லாம் சரியாகிரும்.

//அத்துடன் வீட்ல வேலையும் செய்ய முடியல.// நீங்க இப்ப செய்ய வேண்டியது குழந்தையைப் பார்க்கிறதும் உங்களைப் பார்க்கிறதும் தான். சாப்பாடு சமைக்கக் கிடைக்கேக்க ரெண்டு நாளைக்கு வரக்கூடிய மாதிரி சமைச்சு வைங்க. நிச்சயம் வீட்டில ஃப்ரிஜ் இருக்கும். மிச்சம் முக்கியமான வேலைகளைத் தவிர மிச்சம் எல்லாம் செய்ய வேண்டும் எண்டு இல்ல. உங்கட வீடு குப்பையா இருக்கு எண்டு ஒருவரும் சொல்ல ஏலாது. ஏலுமானதை மட்டும் செய்யுங்க. ஓய்வு முக்கியம்.

//இவன் தனியா இருக்கிறான் இல்ல .// நீங்க விட்டுப் பழக்க இல்ல. அவ்வளவுதான். //எல்லாரும் பால நல்ல குடிச்சிட்டு படுத்தா எழும்ப மாட்டான் என்று சென்னாங்க// பிள்ளைகள் முழிச்சு இருக்கவே வேணாமா? அவங்களும் மனுஷர் தான். முழிச்சு இருக்கிறது தான் நியாயம்.

//எனக்கு ஒவ்வொரு மாசத்தை கடக்கிறதும் நரகமா இருக்கு// குழந்தை இருக்கும் வீடு மோட்சமாக மட்டுமே இருக்க வேணும். இப்பிடிச் சொல்லுறது சரியில்லை வசு. நீங்கள் நினைச்சால் எல்லாம் மாறும். நீங்க எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேணும் எண்டுறதை முதல் முடிவு செய்யுங்க. முதல் இடம் பிள்ளைக்கு, அடுத்தது உங்களுக்கு. பிறகு தான் வீடு, உறவு எல்லாம்.

//இது ஏதும் பிரச்சனையா ?// எது!! குழந்தையா? இல்லை. அவர் அழுவதும் நித்திரை இல்லாமல் இருப்பதுமா? அதுவும் பிரச்சினை இல்லை.

//எப்படி சரி செய்யலாம் ?// குழந்தை அழும் போது யோசியுங்க. காரணம் என்னவாக இருக்கும்? பசியா? பால் குடுங்க. இல்லாட்டி விட்டுருங்க. நீங்க தூக்கிப் பழக்கி இருந்தால் படுக்கப் போட்டால் குழந்தை அழத்தான் செய்யும். நிறைய நேரம் தூக்கி வைத்திருக்கும் குழந்தையும் அழும். ஏன் அழுறார் எண்டதை யோசிச்சுப் பாருங்க. தேவை எதுவும் இல்லை எண்டால் தனிய விட்டுருங்க. அமைதியான அறையில் தனிய விடுங்க நித்திரை ஆகிருவார். நீங்க குழம்பாமலிருந்தால் போதும். சின்னவர் நித்திரையாக இருக்கும் போது நீங்க வேலை செய்யுறதை விட நீங்கள் தனியாக ஒரு அறையில் நித்திரை கொள்ளுறது நல்லது. உங்களுக்கு முதலில் ஓய்வு அவசியம் அது குறைஞ்சால் மிச்சம் எல்லாம் பிரச்சினையாக இருக்கிற மாதிரித்தான் இருக்கும். ஓய்வு தேவையான அளவு கிடைத்தால், மிச்சம் கிடைக்கிற நேரத்தில முக்கியமான வேலைகளை லேசாக முடிக்கலாம். மிச்ச வேலைகள் நடக்காட்டி யோசிக்க வேணாம், விட்டுவிடலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி , குழந்தை அழுவதைஎன்னால் பார்க்க முடிவதில்லை அதான் உடனே சென்றுவிடுவேன். முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி

:-) அதுதான் பெரும்பாலான தாய்மார் பிரச்சினை. விட்டுப் பாருங்க. கையில் எவ்வளவு நேரம் மீதமாகுகிறது, வாழ்க்கை எத்தனை சுலபம் என்பது புரியும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்