சமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை

தோழிகளே

எனக்கு ஒரு தீர்வு வேண்டும். எங்கள் வீட்டு சமையலறையில் சிறிய பூச்சி அதாவது சிறிய ஈ அல்லது சிறிய கொசு மாதிரி நிறைய வருகிறது. சமையலறை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் இந்த பூச்சிகள் நிறைய வருகிறது கூட்டமாக உட்காருகிறது. அருவெறுப்பாக இருக்கிறது. புதிதாக கட்டிய வீட்டிற்கே மாறியிருக்கிறோம். இதற்கு என்ன வழி? யாரேனும் தெரிந்தால் உதவவும். சமையலறை காற்றோட்டமாகவே இருக்கிறது. இப்போதே நன்றிகள்

பழஈக்கள் / கொசு (இலங்கையில்) என்று நினைக்கிறேன். நியூசிலாந்தில் உள்ளவை வெள்ளையாக இருக்கின்றன. சீசனுக்கு வரும். வீட்டிற்கு அருகில் உள்ள பழமரங்கள் அழைத்து வரலாம்.

பழங்களை வாங்கி அதிக நாள் வைத்திருக்க வேண்டாம். அளவுக்கு வாங்கி ஓரிரண்டு நாட்களில் சாப்பிட்டு முடித்துவிடுங்கள். தோல் கழிவுகளை ஒரு பையில் போட்டுக் கட்டி குப்பைத் தொட்டியில் போடுங்கள். உடனே புதைப்பது இன்னும் சிறந்தது. தோட்டத்தில் பழமரங்கள் இருந்தால் கொட்டும் காய்களை அடிக்கடி பார்த்துப் புதைத்துவிடுங்கள். பழங்கள் மட்டும் அல்ல, தேயிலைச் சக்கையும் காய்கறிக் கழிவுகளும் கூட புளிக்க ஆரம்பிக்கும் போது கொசுக்களை ஈர்க்கும். உடனுக்குடன் நீக்கிவிடுங்கள். வெளியே கூட திறந்து போட வேண்டாம். சில பழங்கள் வாங்கும் போது நன்றாக இருந்தாலும் உள்ளே குடம்பி இருந்தால் அது முதிர்ந்ததும் வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கும்.

வீட்டிற்கு, 'ஸ்ப்ரே ட்ரீட்மண்ட்' செய்யலாம். எந்த அறையில் கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ அந்த அறைக்கு. 'மோர்டீன்' / 'ஹிட்' அடித்து கொஞ்ச நேரம் மூடிவிடலாம். எந்த அறை யன்னல் வழியாக வருகிறது என்று கவனித்து அந்த யன்னலை பிரச்சினை தீரும் வரை திறக்காமல் விடலாம்.

இங்கே ஒரு சுருள் கிடைக்கும். அதை நீளமாக தொங்க விட்டால் கொசுக்கள், ஈ எல்லாம் ஒட்டிக் கொள்ளும். அங்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. டபுள் சைடட் டேப்பை நீளமாக வெட்டி (இரண்டாவது பக்கம் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும்.) அங்கங்கே தொங்க விட்டுப் பாருங்கள். ஒட்டிக் கொள்வார்கள். பிறகு நீங்கள் தான் அதை நீக்கியாக வேண்டும். அருவருப்பாகத் தான் இருக்கும். ஜன்னல்களுக்கு வெளியே ஒட்டிக் கொள்ளும் ஒரு வகை ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. அழகாக பூக்கள் படம் போட்டிருக்கும். அதை பாக்கட்டில் சொல்லியுள்ளபடி ஜன்னலின் வெளியே ஒட்டிவிட்டால் உள்ளே வரும் முன்பே அங்கு ஈக்கள் மாட்டிக் கொள்ளும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி கொசுக்கள் வரும்போது விசிறினால் எண்ணெயில் ஒட்டிக் கொள்ளும்.

‍- இமா க்றிஸ்

கூட்டமாக உட்காருகிறது என்றீர்கள். எங்கே! விளக்குகளில் அல்லது மேலே இருது தொங்கும் பொருட்களில் தான் பெரும்பாலும் பழஈக்கள் கூட்டமாக அமரும். பெரும்பாலும் பறந்துகொண்டே தான் இருக்கும். நீங்கள் சொல்வது சிறிய வகை ஈக்களோ!

உங்களுக்காக பழஈக்கள் பற்றித் தேடி சில குறிப்புகள் கொடுக்கிறேன். :-) மேசைகளில் பால், பழச்சாறு வடிந்தால் உடனே துடையுங்கள். (துடைத்த துணியில் வாசம் இருக்கும். உடனடியாகக் கழுவுங்கள்.) ஜூஸ் குடிக்கப் பயன்படுத்தும் கிண்ணங்களைக் கழுவிவிடுங்கள். சிங்கில் ஜூஸ் வாசனை தங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு வெற்றுப் போத்தலில் ஜூஸ் / வினாகிரி ஏதாவது விட்டு, சின்னதாகத் துளைகள் போட்டு கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் வைத்துவிடுங்கள். உள்ளே போன கொசுக்கள் வெளியேறத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும். தினமும் மாற்றிப் புதிதாக ஜூஸ் விட வேண்டும்.

‍- இமா க்றிஸ்

என்னுடைய பதிவிற்கு பிறகு வீட்டிற்கு சென்று நன்றாக உற்று பார்த்தேன். கொசு போல் தெரியவில்லை சிறியவகை பூச்சி அல்லது ஈ போன்று உள்ளது. வீட்டில் எங்கும் இல்லை சமையல் அறையில் மட்டுமே உள்ளது சிங்க் அருகில் மற்றும் ஷெல்ப்களில் ஒரு சில டப்பாக்களின் மேல் அமர்ந்து கொண்டு இருக்கிறது. இருக்குமிடம் தெரியாது அந்த டப்பாக்களை எடுக்க முற்படும் பொது பறக்கிறது. (புது வீட்டிற்கு மாறியுள்ளோம் டப்பாக்கள் அனைத்தும் புதியதே) ரூம் ஸ்பிரே மற்றும் எண்ணெய் தாள் முயற்சி தான் மீதம். அதையும் செய்து பார்க்கிறேன். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் வந்து விடுகிறது. இந்த பூச்சி பழங்கள் மற்றும் டீத்தூள் (பயன்படுத்தியது) ஆகியவற்றில் அமர்வது உண்மை தான். வேலைக்கு செல்வதால் காலையில் மட்டும் அப்புறப்படுத்துவது சிரமமாக உள்ளது. மாலையில் பயன்படுத்தியதை சுத்தம் செய்து விடுவேன்.

உங்கள் ஆலோசனைகளை பின்பற்றுகிறேன். தங்கள் பதிவிற்கு நன்றி மா. லவ் யூ ஆல்வேஸ் !!!

- பிரேமா

மேலும் சில பதிவுகள்