Scar endometriosis

Scar endometriosis எதனால் ஏற்படுகிறது? ஒரு வருட காலமாக அவஸ்தை படுகிறேன்.டாக்டர் தற்போது 3மாதம் மாத்திரைகள் எடுத்துக்க சொல்லிருக்காங்க.. மெனோபாஸ் நேரத்தில் வலி ஏற்படும் லெப்ட் சைடு...1செமீ அளவு உள்ளது..இதை உணவு முறையில் சரிபண்ணாலாமா? ப்ளீஷ் உதவுங்கள் தோழிகளே.... எந்த இழையில் கேட்பதென்று தெரியவில்லை.. அதனால் இதில் கேட்கிறேன்..

தழும்புகள் தொடர்பானது என்பது பெயரிலிருந்தே புரியும். //லெப்ட் சைடு...1செமீ அளவு உள்ளது// எந்த இடத்தில் பிரச்சினை என்பதைப் பொறுத்து எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவர்கள் ஊகிக்கலாம். பரிசோதனையில் இன்னதுதான் காரணம் என்பதைக் கண்டுகொள்வார்கள். உங்களைப் பார்த்த மருத்துவரிடம் கேட்கவில்லையா? அடுத்த தடவை போகும் போது கேளுங்கள். பயப்பட வேண்டியது இல்லை.

//உணவு முறையில் சரிபண்ணாலாமா?// நிச்சயம் முடியாது. மருத்துவர்கள் சொற்படி கேட்பது தான் வேதனை தீர ஒரே வழி.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி ம்மா.பிளிடிங் ஆகாப்போகுதுன்னா இந்த வலி வந்து தான் பிளிடிங் ஆகுதும்மா.. இந்த வலி சரியாக 13நாள் ஆயிடுதும்மா.. லெப்ட் சைடு ஒரு இடத்தில்(புள்ளி வைத்தாற்போல்) மட்டுமே வலி...கால் மற்றும் இடுப்பு பகுதி ஜாய்ன்ட் கிட்ட தான் வலிம்மா.... இந்த ப்ராப்ளம் சிசேரியன் பண்ணவங்களுக்கு 100க்கு 35பேருக்கு வரும் சொன்னாங்கம்மா... எனக்கு இதெல்லாம் புதுசாயிருக்கும்மா...பிளீடிங் நிறைய போனால் இந்த ப்ராப்ளம் இல்லைம்மா.. குறைந்தால் தான் இந்த வலி வந்துடுதும்மா... உட்கார்ந்து படிக்க முடியலை வலியால்ம்மா.எல்லா தோழிகளும் எதாவது வலி வந்தால் டாக்டரிடம் பாருங்கள்... நான் உடனே பார்த்ததால்...3மாதம் மாத்திரைகள் உட்கொண்டால் சரியாகும் சொன்னாங்கம்மா.... இருந்தாலும் பயமாக உள்ளதும்மா.. ஆபரேஷன் எதுவும் மறுபடியும் பண்ணுவாங்களோன்னு.,....பிளீடிங் கரெக்டா ஆவதற்கு எதாவது சப்பிடலாமா???
/// இன்னதுதான் காரணம் என்பதைக் கண்டுகொள்வார்கள்.//ஸ்கேன் பண்ணி சொல்லி நான் தான் சொன்னேன் ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு இதுக்கு போய் பயந்த 1செமீ தான் இருக்குன்னு சொன்னாங்க....

அன்பு தோழி. தேவி

:-) ஆஹா! பதிலைத் தெரிந்து வைத்துக் கொண்டேதான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். :-)

//3மாதம் மாத்திரைகள் உட்கொண்டால் சரியாகும்// சூப்பர், எடுங்க.

//பயமாக உள்ளது// எதற்காக? வலியோடு போராட முடியவில்லை என்பதால் தானே மருத்துவரை நாடினீர்கள். //ஆபரேஷன்// அனேகம் இராது. இருந்தாலும் கூட, அது பிரச்சினைக்குத் தீர்வாக மட்டுமே இருக்கும். //பிளீடிங் கரெக்டா ஆவதற்கு// நீங்கள் ஏற்கனவே சிகிச்சையில் இருப்பதால், மருத்துவர் சொல்வதைத் தவிர வேறு எந்த மாத்திரைகளையும் எடுக்க வேண்டாம். வலி நிவாரணத்திற்காக பாரசெடமோல் போன்றவற்றை எடுப்பதில் பிரச்சினை இல்லை. மருத்துவர்களோடு ஒத்துழையுங்கள்.

//எனக்கு இதெல்லாம் புதுசாயிருக்கு// :-) இது பழைய விஷயம்தான். எனக்கும் முப்பது முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது. அப்போது எங்கள் ஊரில் எனக்குக் கிடைத்த பதில், 'காயம் என்று ஆகிய பின்னால் உடல் முன்பு போல இராதுதானே!' என்பது. புரிந்து கொண்டு அனுபவித்தேன். காலப்போக்கில் அது பழகிப் போனது. ஆனால் இன்றைய காலம் வேறு. இப்போது உங்களுக்குத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இது எத்தனை நல்ல விடயம் தெரியுமா! நீங்கள் அதிஷ்டசாலி. //மாத்திரைகள்// ஆக மூன்றே முன்று மாதங்கள் எனும் போது எடுப்பதில் என்ன இருக்கிறது! மூன்று மாதம் பெரிதா மூன்று ஆண்டுகள் பெரிதா? எதில் சிரமம் அதிக காலம்?

பல சமயங்களில் எனக்குத் தெரிந்ததை, தோன்றுவதை முழுமையாக எழுதுவதில்லை. தேவைக்கு மேல் தகவல் கொடுத்து கேள்வி கேட்பவருக்கு மேலும் வீண் கவலையை உருவாக்கி வைக்கக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்ச்சி அடக்கி வாசிக்க வைக்கும். :-) //மெனோபாஸ் நேரத்தில் வலி// இல்லைங்க, மென்சஸ் நேரத்தில்.

‍- இமா க்றிஸ்

அழகாக சொன்னீர்கள்...மிக்க நன்றிம்மா.. அறுசுவை ஒன்று இருப்பதால் தான் எங்களைப் போன்றோர்களுக்கு கவலை இல்லை...என்றே சொல்லலாம்... நாங்கள் அதிர்ஷ்டசாலி தான்...மிக்க நன்றிம்மா நீங்கள் சொன்னதை கேட்டு நடக்கிறேன்

அன்பு தோழி. தேவி

வணக்கம் தோழிகளே எனக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்து 1 வருடம்ஆகிறது ,8 மாதத்தில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். மாதவிடாய் முதல் 2 மாதங்கள் சரியாக வந்தது கம்மியாக ரத்த போக்கு இருந்தது.அதன் பிறகு 50 நாளுக்கும் மேலாக தள்ளி தள்ளி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலையாக உள்ளது. டாக்டரிடம் செல்லவும் மிகவும் பயமாக உள்ளது ஏதேனும் பெரிய பிரச்னையாக இருக்குமோ என்று அதனால் தான் உங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் தயவு செய்து யாராவது எனக்கு பதில் கூறவும்.

பிரச்சினையாக இராது. மெதுவே ஒழுங்காகும். கவலையாக இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

//டாக்டரிடம் செல்லவும் மிகவும் பயமாக உள்ளது ஏதேனும் பெரிய பிரச்னையாக இருக்குமோ என்று// ;))) அந்த அளவுக்குப் பயமாக இருந்தால், டாக்டரிடம் போகாமல் விட்டால் மட்டும் பிரச்சினை இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறீர்களா? :-) போனால் தானே சரியாகும்; என்ன பிரச்சினை என்பதோ அல்லது பிரச்சினையே இல்லை என்பதோ தெரிய வரும். பயந்து பயந்து இல்லாததை இருப்பதாக எண்ணி... நிம்மதி போய்விடும்; குழந்தையை சந்தோஷமாகக் கவனிக்க முடியாது.

ஒன்றில், 'இது பிரச்சினையான விடயம் இல்லை,' என்று நம்ப வேண்டும். அல்லது, 'பிரச்சினையாக இருக்குமா?' என்று மருத்துவரிடம் போய்க் கேட்டுத் தெளிந்து நிம்மதியாக இருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்