தலை முடி

வணக்கம்
என் மகளுக்கு 1.4 வயது ஆகிறது. அவளுக்கு இன்றுவரை முடி சேரியாக வளரவில்லை. அவள் வயிற்றில் இருந்தபோது நான் சூடாக தான் எல்லாம் சாப்பிட்டேன். பிறக்கும் போது கொஞ்சம் முடியுடன் மொட்டையாக இருந்தாள். அப்புறம் அவ்வளவா வளரவில்லை. 4 மொட்டை அடித்து விட்டோம். இன்னும் அவளுக்கு ஜுட்டி போடுற அளவுக்கு முடி வளரல. பிளீஸ் அறிவுரை கூறுங்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது.
நன்றி.

//வயிற்றில் இருந்தபோது நான் சூடாக தான் எல்லாம் சாப்பிட்டேன்.// இதற்கும் முடி வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. பெற்றோர் பரம்பரைகளைப் பொறுத்த விடயம் இது.

'ஜுட்டி' என்றால் என்ன? எனக்கு அறிமுகம் இல்லாத சொல். தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். headband!!

மொட்டை அடிப்பதால் எல்லோருக்கும் முடி அடர்த்தி அதிகமாகும் என்பது இல்லை. பதினைத்து மாதத்திற்கு நான்கு மொட்டை என்றால் - இப்போது குழந்தையின் வயதுக்கு நீளம் கூட குறைவாகத் தானே தெரியப் போகிறது! யோசிக்க எதுவும் இல்லை. இதைப் பெரிதுபடுத்தாமல் விடுங்க; குழந்தைக்கு ஆரோக்கியமான உணவாகக் கொடுங்க. மெதுவே சரியாக வளர ஆரம்பிக்கும்.

‍- இமா க்றிஸ்

ஜூட்டி என்றால் collecting hairs in center of head and putting a little ponytail.

Induleka bringha hair oil போன்ற ஏதாவது உபயோக்கிலாமா அம்மா??
மற்றொரு சந்தேகம். என் முகம் கல்யாணத்திற்கு பிறகு மிகவும் கறுத்துவிட்டது. என்ன செய்வது என்று கூறுங்கள் பிளீஸ்ஸ்ஸ்ஸ்..

பெஸ்ட் முகம் கழுவ மற்றும் குளியல் பொடியும் சொல்லுங்கள் அம்மா.

ஓ! குடும்பி! :-) ஜுட்டி இந்திச் சொல்லா?

இந்துலேகா பற்றியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லையே! ;( குழந்தை, இன்னும் கொஞ்ச காலம் விட்டுப் பார்க்கலாம். வளராமல் போகாது.

அழகுக் குறிப்பு எதுவும் சொல்லத் தெரியவில்லை கண்ணா. கொஞ்சம் நேரம் எடுத்து தேவாவின் இழைகளைப் படித்துப் பாருங்கள். அவர்தான் இவற்றில் எக்ஸ்பர்ட்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்