குப்புறவிழவில்லை

எனது குழந்தைக்கு 6ம் மாதம் நடக்குது ஆனால் இன்னும் குப்புறவிழவில்லை. இரண்டு கரைக்கும் வேகமாக திரும்புவான். இவ்வாறு செய்து செய்து எல்லா இடமும் நகர்கிறான், துணையுடன் இருக்கிறான், ஆனால் இன்னும் குப்புறவிழவில்லை. இது எதனால் ? என்ன செய்யலாம் ? என கூறுங்கள் ? இதற்கு முன் யாரும் இந்த கேள்வி கேட்டு இருந்தா link தாருங்கள் please?

பிரச்சினை இல்லை கௌரி. உங்கள் குழந்தை சரியாக இருப்பதால் தான் அவரால் திரும்பவும் நகரவும் முடிகிறது. பாலன்ஸ் வந்ததும் திடீரென்று ஒரு நாள் தானாகத் திரும்புவார். நீங்களாக எதுவும் செய்ய வேண்டி இராது. யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

அப்படி எனின் சரி நன்றி தோழி

மேலும் சில பதிவுகள்