அபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா??

எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது திருமணம். ஆன முதல் மாதத்தில் எனக்கு கர்ப்பம். உறுதியானது ஆனால் நான் பயணம் செய்ததில் கரு 42 நாளில் கலைந்து விட்டது அதற்கு பிறகு எனக்கு கரு தங்கவே இல்லை 4 மாதத்திற்கு முன்பு மருத்துவரிடம் சென்றேன் அவர் என்னை பரிசோதித்து விட்டு hormones imbalance சொன்னார் 3 மாதங்கள் கரு தங்க சிகிச்சை எடுத்தேன் ஆனால் கரு தங்கவில்லை பிறகு மருத்துவர் என் கணவரையும் பரிசோதனை செய்து எந்த குறையும் இல்லை என்றார் எனக்கு கருக்குழாய் அடைப்பு பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார். அபார்சன் ஆகினால் அடைப்பு ஏற்படுமா தெரிந்தவர்கள் கூறுங்கள்

//அபார்சன் ஆகினால் அடைப்பு ஏற்படுமா // இல்லை. கரு கலைவதனால் அடைப்பு வராது.

‍- இமா க்றிஸ்

Ella ma.

Jayanthi

நன்றி இமா கிறிஸ்

மேலும் சில பதிவுகள்