குழந்தை நிறம் மாற

தோழிகளே என் பெண் குழந்தை பெயர் தக்சிதா பிறந்து ஆறு மாதம் வரை கலராக இருந்தால் இப்பொழுது 1 வயது ஆகிறது நிறம் குறைந்து விட்டால் teddibar baby soap உபயோகித்தேன் முகம் மட்டும் நிறமாகவும் உடலை கருப்பாகவும் செய்தது அதனால் 1 வாரமாக mama earth soap மாற்றியுள்ளேன் மேலும் துவளை பொடியும் பயன்படுத்துகிறேன் சகோதரிகள் நீங்க தான் இதற்கு ஆலோசனை தர வேண்டும், இமா அம்மா நீங்கள் உதவ வேண்டும்'
அன்புடன்
திவ்யா

:-) நீங்க அன்புடன் கேட்டாலும் அன்பில்லாமல் கேட்டாலும் இதற்கெல்லாம் இமா அம்மாவிடமிருந்து உதவி கிடைக்காது கண்ணா. :-) முதலில் நீங்கள் என்ன கலர், உங்கள் கணவர் என்ன கலர், தாத்தாமார் பாட்டிமார் என்ன கலர், மற்ற உறவினர்கள் கலரென்ன என்பதெல்லாம் சொல்ல வேண்டும். :-) காப்பி கருப்புக் கலர், பால் வெள்ளை. பால்காப்பி! நடுவால ஒரு கலரா இருக்கும். :-)

ஒரேயொரு வயது தானே ஆகி இருக்கிறது. இதைப் பெரிதாக எடுக்க வேண்டாமே! குழந்தைகளின் நிறம் மாறுவது இயல்புதானே! கண்டதையும் போட்டு பிஞ்சுத் தோலைக் கெடுத்து வைக்காதீர்கள். நீங்கள் என்னதான் செய்தாலும் வளர்ந்த பின் வெயிலில் நின்றால் கறுத்துப் போவார்கள். வெயிலுக்குக் காட்டாமல் வளர்த்தால் நிறமாக இருப்பார்கள் - ஆனால் வைட்டமின் டீ குறைவாகக் கிடைக்கும். பிறகு கால்சியம் மாத்திரை கொடுக்கிற வேலை போதாமல் இதையும் சேர்த்துக் கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். இப்போதெல்லாம் வெள்ளைத் தோல் இருக்கிறவர்களே 'டான்' ஆக என்னென்னவோ செய்கிறார்கள். 2035 ஆகும் சமயம் (16 வயது) உங்கள் இடத்தில் வாழ்க்கைமுறையில் என்னென்ன பாற்றங்கள் வந்திருக்குமோ! இப்போ நீங்கள் கலராக்கி வைக்க, தக்சிதா 'எதற்காக இப்படிப் பண்ணினீங்க!' என்று கேள்வி கேட்டாலும் கேட்பார்.

உருவ அமைப்பும் நிறமும் ஒவ்வொருவர் தனித்துவம் & எமக்கான அடையாளம். இயல்பாக விட்டுவிடலாமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்