Hai frnds nan ipo 8th month preganancy endla iruken 9th month start aga poguthu. Two daysah enoda breastla water or mothers milk varuthu nighty ellam wet aguthu ithu ethum pblmah irukuma . Pls any one tell me
Hai frnds nan ipo 8th month preganancy endla iruken 9th month start aga poguthu. Two daysah enoda breastla water or mothers milk varuthu nighty ellam wet aguthu ithu ethum pblmah irukuma . Pls any one tell me
சித்ரா செந்தில்
இது சாதாரணம்தான். பிரச்சினை இல்லை. சிலருக்கு ஐந்தாம் மாதம் கூட இப்படி ஆரம்பிப்பது உண்டு. சங்கடமாக இருந்தால் தூங்கும் போது உள்ளாடை அணிந்துகொண்டு ப்ரெஸ்ட் பாட்ஸ் / நர்ஸிங் பாட்ஸ் பயன்படுத்துங்கள். உடை ஈரமாகாது. இவை ஃபார்மஸில கிடைக்கும். நீங்களே கூட தைத்து எடுக்கலாம்.
- இமா க்றிஸ்
Thanku sis. One more doubt
Enaku already 1 girl baby iruka ipo nan 9th month started.. 3 month scanla heart beat rate 146 5 monthla 144 8 month startigla 135 enna babya irukum..
சித்ரா
:-) அது ஏற்கனவே என்ன பேபியா இருக்கோ அந்த பேபியாவேதான் இருக்கும். இதையெல்லாம் செயற்கைக் கருத்தரிப்பில் கூட இன்னும் நிர்ணயம் செய்வதாகத் தெரியவில்லை.
ஹார்ட் பீட்டும் உடல்வெப்பநிலையும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும்; உடலமைப்பும் ஹோர்மோன்களும் தான் வித்தியாசப்படும். ஹார்ட் பீட் வயசுக்கு ஏற்றபடி கொஞ்சமும் ஜுரம் / நோய்கள் வந்தால் அததுக்கு ஏற்றபடியும் மாறும்.
ஸ்கான்ல தெரியும், ஆனா இந்தியால டாக்டர்கள் சொல்ல மாட்டாங்க இல்ல! சொல்லக் கூடாது. அப்போ எனக்குத் தெரிஞ்சாலும் நான் சொல்றது தப்பு இல்லையா!! :-) இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு. பொறுத்துக்கங்க. உங்களுக்கு இது ஒரு பெரிய இஷ்யூ இல்லைன்னு தெரியுது. சும்மா தெரிஞ்சுக்க கேட்கிறீங்க. சந்தோஷமா இருங்க. ஊகிச்சா மனசு நம்ப ஆரம்பிச்சுரும். பிறகு ஏமாற்றமடைய நேரலாம். இருக்கிறது இரண்டே இரண்டு ஆப்ஷன், ஒன்று இல்லாட்டா இன்னொன்று. அதை மட்டும் நினைக்கணும்.
உண்மையைச் சொல்லப் போனால்... ஹார்ட் பீட் வைச்சு குழந்தையின் பாலினத்தை டாக்டராலயும் சொல்ல முடியாது.
- இமா க்றிஸ்