குழந்தை திக்காமல் பேச

ஹலோ தோழிகளே

என் மகனுக்கு ஏழு வயது. முதல் வகுப்பு படிக்கிறான். அவன் இப்பொழுதெல்லாம் பேசும் பொழுது ரொம்ப திக்கி திக்கி பேசுகிறான் சில எழுத்துக்கள் சொல்ல ரொம்ப கஷ்டப்படுகிறான். இந்த ஒரு வருடமாக தான் இப்படி முன்பல்லாம் திக்கி இருக்கிறான் ஆனால் இப்படி இல்லை அவன் திக்காமல் பேச என்ன செய்ய வேண்டும்

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வி என்பதால், இரண்டு இழைகள் தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள். உதவக் கூடும்.

https://www.arusuvai.com/tamil/node/6567?page=5
https://www.arusuvai.com/tamil/node/22567

‍- இமா க்றிஸ்

அவனுக்கு யூடியூப் வீடியோ பார்த்து நானே speeching therapy கொடுக்கலாமா அல்லது டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டுமா

முன்பை விட இப்போது அதிகரித்து இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். திக்குவாய்ப் பிரச்சினைக்கு ஸ்பீச்தெரபி ஒன்றுதான் தீர்வு என்பது இல்லை. காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும் அல்லவா? மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பதே மேல்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்