தைராய்டு மாத்திரை

ஹலோ தோழிகளே
எனக்கு 3 வருடமாக தைராய்டு இருக்கிறது. 25 M.g மாத்திரை எடுத்து கொள்கிறேன். அதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே போகிறது. நான் தினமும் காலையில் சீரக தண்ணீர் அல்லது இஞ்சி தண்ணீர் குடிக்கலாமா. மாத்திரை அந்த தண்ணீரில் குடிக்கலாமா அல்லது மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு எவ்வளவு நேரத்திற்கு பிறகு அந்த தண்ணீர் குடிக்கலாம்

மாத்திரை எடுப்பதனால் உடை எடை அதிகரிக்கவில்லை. வேறு ஏதோ காரணம் இருக்கிறது. எடை அதிகரிப்பு உங்கள் உணவுப் பழக்கம் காரணமாக அல்லது உடலுக்கு அப்பியாசம் போதாத காரணத்தால் இருக்கலாம். மாத்திரையின் அளவு சரியாக இல்லாதிருக்கலாம். (இது மாறக் கூடியது.) உங்கள் மருத்துவரோடு பேசிப் பார்ப்பதுதான் நல்லது.

//தினமும் காலையில் சீரக தண்ணீர் அல்லது இஞ்சி தண்ணீர்// எதற்காக எடுக்க நினைக்கிறீர்கள்? எடையைக் குறைக்கவா அல்லது தைராயிட் பிரச்சினைக்காகவா? இவற்றின் பலன் பற்றி எனக்குத் தெரியாது. உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

நீங்கள் எதைக் குடித்தாலும் மாத்திரை எடுத்த ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம். அல்லது குடித்த பின் இரண்டு மணி நேரம் கழித்து மாத்திரை எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் மாத்திரை சரிவர வேலை செய்யாது.

//மாத்திரை அந்த தண்ணீரில் குடிக்கலாமா// நிச்சயம் இப்படிச் செய்யக் கூடாது. மாத்திரை எடுப்பதால் பயனில்லாது போய்விடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்