பையனை

ஹலோ தோழிகளே

என் பையனுக்கு 7 வயது. நாங்கள் தனியாகவும் என் மாமனார் தனியாகவும் உள்ளோம். என் மாமனார் இரவு செக்யூரிடி வேலைக்கு சென்றதால் காலையில் பனி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது என் பையனை அழைத்து செல்வார் மாலை வேலைக்கு வரும்போது கூட்டி வருவார். என் மாமனார் வீட்டிற்கும் பஸ் ஸ்டாண்டிற்கும் அரை மணி நேரம் பயண தூரம். இப்பொழுது அவர் இனி வேலைக்கு செல்ல மாட்டேன் என்கிறாராம். நானும் வேலைக்கு வந்து விடுகிறேன். அதனால் பஸ் கண்டக்டரிடம் போன் நம்பர் வாங்கி கொண்டு அவனை பஸ்ஸில் தனியாக அனுப்பி விடுலாம் என்று நானும் என் கணவரும் பேசி கொண்டிருக்கிறோம். கண்டக்டர் தெரிந்தவர் தான் பஸ் ஸ்டாண்டில் என் மாமனாரை நிற்கவைத்து பஸ் வந்ததும் பையனை அழைத்து செல்லுங்கள். என்றும் நாங்கள் என் வீட்டிற்கு அருகிலும் நின்று அவன் வரும்போது அழைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறோம் அனால் எனக்கு இப்போவே மனதில் பயமாக இருக்கிறது வேலையையும் விட முடியாது எனக்கு அம்மா அப்பா இல்லை. என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. இந்த முறை சரியானதாக இருக்குமா அல்லது உங்ககுக்கு தெரிந்த வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்

இது நல்லதாகத் தோன்றவில்லை சகோதரி.

இனிமேல்தான் போன் நம்பர் வாங்கப் போகிறீர்கள் என்றால், கண்டக்டர் தெரிந்தவராக இருக்க முடியாது. அவருக்கும் மற்றவர்கள் மாதிரி குடும்பப்பிரச்சினை, நோய்கள் எல்லாம் இருக்கும். வேலைக்கு லீவு சொல்கிற மாதிரி உங்களுக்கு போன் பண்ணி சொல்ல முடியாது. அவசரத்தில் மறந்து போகலாம். எப்போது எது வேண்டுமானாலும் ஆகலாம்.

ரிஸ்க் எடுக்க வேண்டாம். மாமனாரை உங்களோடு அழைத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது நீங்கள் அங்கு போய் இருக்கலாம். அல்லது குழந்தையை வார நாட்களில் மாமனாரோடு விட்டுவிட்டு வார இறுதிக்கு நீங்கள் போய்க் கூட்டி வந்து வைத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

பஸ்ஸில் விடுவது பற்றி நானும் அதைத் தான் நினைத்தேன் அம்மா அங்க விட்டால் online Class பாடம் சொல்லி தர முடியாது அதை தான் யோசித்தேன் அது மட்டுமில்லாமல் என் மாமனார்க்கு என் பையனை பார்க்க விருப்பமில்லை எதாவது ஒரு வார்த்தை தவறுதலாக சொன்னால் கூட பையனை பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டு போய்க்கிட்டே இருப்பார் இது நிறைய தடவை நடந்து இருக்கிறது நிறைய தடவை என் பையனுக்காக அவர் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறேன் பள்ளி திறந்து விட்டால் பிரச்சனை இருக்காது அதற்காக சகித்து கொள்கிறேன் நான் அங்கு போய் இருந்தால் என்னை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள் உங்கள் அறிவுரை படித்த உடன் என்ன நடந்தாலும் பரவாயில்லை என் மகனுக்காக சகித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் அதனால் அங்கு செல்லாம் என்று இருக்கிறேன்

நேற்றே எழுதத் தோன்றியது. இரவில் கண்விழித்து வேலை பார்க்கும் முதியவரிடம் பகல் முழுவதும் குழந்தையைப் பார்க்கும்படி கேட்பது முறையில்லை. பகலில்தான் அவரும் தூங்கலாம்! அவர் தூங்கும் போது குழந்தை மேற்பார்வை செய்வதற்கு ஆள் இல்லாமல் தன் பாட்டில் இருப்பார். ஏதாவது ஆனால், பாவம் அவர் பொறுப்பாகிவிடுவார்.

குழந்தை தினமும் அரைமணி வீதம் 2 முறை நடக்க வேண்டும். நடப்பாரா! பெரியவர் சற்றுத் தாமதமாகப் புறப்பட்டால் அவரது நடைக்கு ஈடு கொடுத்து குழந்தை ஓட வேண்டும் அல்லது பெரியவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு விரைந்து நடக்க வேண்டும். இருவருமே பாவம் இல்லையா!

//என் மாமனார்க்கு என் பையனை பார்க்க விருப்பமில்லை// என்பது அல்ல. அவரால் முடிந்தாக வேண்டும். தூங்க நினைத்தால் கூட முடியாது. பிறகு திரும்ப இரவு வேலைக்குக் கிளம்பியாக வேண்டாமா! சினந்துவிட்டால் குறையாக நினைக்க வேண்டாம் கீதா. அவர் வயதிற்கு நீங்கள் போகும் சமயம் நான் சொல்வது புரியும்.

உங்கள் காரியம் ஆகவேண்டும் என்றால் நீங்கள்தான் சற்று அனுசரித்துப் போகவேண்டும். கோவிட் பிரச்சினை தீரும் வரை ஓவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிரமமாகவே இருக்கிறது. ;-(

‍- இமா க்றிஸ்

என் மாமனார் வீட்டில் என் மாமியார் மாமனார் நாத்தனார் (திருமணம் ஆகாதவள் 21 வயது) 3 பேர் இருக்கிறார்கள் என் மாமனார் உடன் அழைத்தது செல்வர் மலை கூட்டி வருவார். பகலில் தூங்கி விடுவார். சிறிய பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது பகலில் என் நாத்தனார் கடையை கவனித்து கொள்வாள் மாமியார் வீட்டு வேலைகளை செய்வார். என் கோபம் என்னவென்றால் என் மாமியார் காலையிலேயே வேலைகளை முடித்து விட்டு பகலில் சும்மா தான் இருக்கிறார் அந்த நேரத்த்தில் அனுப்பி விடலாமே என்று தான். இது இப்பொழுது என்றில்லை ஏற்கனவே நிறைய தடவை என் பையனை பார்க்க மாட்டேன் என்று போய் விட்டார் என் கணவர் இரவு பணிக்கு சென்று வந்து பகலில் அவனை பார்த்து கொண்டார் 2 வருடம் அதற்க்கு பிறகு தான் என் மாமனார் பார்த்து கொண்டார்

அவரவர் விரும்பிச் செய்ய வேண்டும். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது இல்லையா! அவர்களால் உண்மையிலேயே இயலவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

கோரோனா இப்போதைக்கு நிற்கிற பாடாகத் தெரியவில்லை. குழந்தையை அலைய வைக்க வேண்டாம். முடிந்த வரை குடும்பத்தினர் ஒரே இடத்தில் இருப்பது நல்லது. வருமானமும் அவசியம்தான். எப்போ வேலை போகும் என்கிற நிலை எலோருக்கும். எது நல்லது என்று சிந்தித்துச் செயற்படுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்