வேலை பற்றிய குழப்பம்

ஹலோ தோழிகளே எனக்கு 2 இடத்தில் வேலை கிடைத்துள்ளது. ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டலில் ரிசப்சனிஸ்ட் சம்பளம் 10,000. இன்னொன்று வீட்டிலிருந்து தூரம் , போக 1 மணி நேரம் வர 1 மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும் சம்பளம் 13,000. நான் ஊட்டியில் இருக்கிறேன் இங்கு மழைக்காலம் தான் அதிகம். தூரம் அதிகம் இருக்கும் வேலைக்கு சென்றால் போகவர மிகவும் கஷ்டம். அதே போல் முதலில் சொன்ன வேலையில் வேலையே இல்லை தினமும் வரும் போனை மட்டும் அட்டன் செய்தால் போதும் வேலை கஷ்டம் இல்லை. என் குழப்பம் என்னவென்றால் எந்த வேலைக்கு செல்வது என்று தான் முதலில் சொன்ன வேலைக்கு சென்றால் knowledge போய் விடுமோ என்று பயமாக உள்ளது இரண்டாவது வேலைக்கு சென்றால் குடும்பத்தை கவனித்து கொள்ள முடியாதோ மழையில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் ஆனால் மாலையில் பஸ்ஸ்டாண்டில் வண்டியில் டிராப் செய்கிறோம் என்கிறார்கள் பஸ்ஸ்டாண்டில் இருந்து 20 நிமிடம் நடக்க வேண்டும் வீட்டிற்கு நான் இந்த 2 வேலையில் எதை செலக்ட் செய்வது என்று குழப்பமாக உள்ளது கொஞ்சம் உதவுங்கள்

உங்களுக்குத்தான் உங்கள் தேவைகள் தெரியும். இப்போது உங்களுக்கு முக்கியமான விடயம் எது? குடும்பம்தான் என்று நினைத்தால் முதலாவது வேலைக்குப் போகலாம். சம்பளத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை. இரண்டாவது தொழிலுக்காகப் பயணம் செய்யும் நேரத்திற்கு, உங்கள் உழைப்புக்கான ஊதியம் அந்த மேலதிக மூன்றாயிரம் என்று கொள்ளலாம் ஆனாலும் ஐந்து நாட்களுக்குப் பத்து மணி நேரம் பயணத்திலேயே செலவளிந்துவிடும். பயணம் களைப்பைத் தரும், முக்கியமாக வேலை முடிந்தபின்பான பயணம். வீட்டிற்குப் போனதும் களைப்பைப் பாராமல் வேலைகளைத் தொடர வேண்டும். உங்களால் முடியுமா அல்லவா என்பதை நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். (ஆரம்பத்தில் சமாளித்து, சம்பளத்தில் கொஞ்சம் ஒதுக்கி வைத்தால் விரைவில் ஒரு வாகனம் வாங்கிக்கொள்ளலாம்.)

அறிவு குறைந்து போகப் போவது இல்லை. உங்களுக்கு முதலாவது வேலையில் கிடைக்கும் நேரத்தைப் படிக்கக் கூட செலவளிக்கலாம். முதலாவது வேலை - சக்தி இழப்பு குறைவான வேலை. உங்கள் ஃபிட்னசையும் எடையையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதில்... ப்ரமோஷன்கள் இருக்குமா! இது ஒரு முக்கியமான விடயம். யோசித்துப் பாருங்கள். நான் உங்கள் இடத்திலிருந்தால் சிரமம் என்றாலும் இரண்டாவது வேலையைத் தெரிவு செய்வேன். வீட்டு வேலைகளை ப்ளான் செய்துகொண்டால் சமாளிக்க முடியாதா? மெதுவே ஒரு வாகனம் வாங்கிக் கொண்டால் பயணத்திற்கான நேரம் குறைந்துவிடும்.

பதில் சொல்லவேண்டும் என்று எனக்குத் தோன்றியதை எழுதினேன். உங்களுக்கு வீட்டில் எந்த அளவு வீட்டுவேலைகளில் சப்போர்ட் கிடைக்கும் என்பது தெரியாது. மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்யும் போது களைப்பு பெரிதாகத் தெரியாது என்பது என் எண்ணம். வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான், அதற்கு மேல் மனத்திருப்தி என்பதும் முக்கியம். நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்