உப்பு வாதம்

ஹாய் அனைவருக்கும் வணக்கம்.உப்பு வாதம் நோய் பற்றி கூறவும்.அது குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்.என் கணவர் 1 மாதகாலமாக அவதி படுகிறார்.காலில் பெருவிரல் ஜாய்ன்ட்டில் பயங்கர வலி

அன்பு பிரியா,

//குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்.// அது இப்போது எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதையும் உங்கள் கணவர் தற்போது எடுக்கும் உணவு, மருந்து என்பவை எல்லாவற்றையும் பொறுத்தது.

//1 மாதகாலமாக அவதி படுகிறார்.// இது சாதாரணம்தான்.

//காலில் பெருவிரல் ஜாய்ன்ட்டில் பயங்கர வலி// வீக்கம், வலி குறையும் வரை நடப்பதைக் குறைப்பது நல்லது. உள்ளிருந்து காயப்படாமல் இருக்கும். மருத்துவர் சொல்பவற்றைப் பின்பற்றுங்கள். உட்காரும் போது காலை உயரத் தூக்கி வைத்திருப்பதும் ஐஸ் பாக் வைப்பதும் வலியைக் குறைக்க எனக்கு உதவியாக இருந்தன. ஒவ்வொருவர் உடலும் ஒவ்வொரு விதம். மற்றவர்களது அபிப்பிராயங்கள் / அனுபவங்கள் ஓரளவே உதவும்.

இந்த இழையைப் படித்துப் பாருங்கள். https://www.arusuvai.com/tamil/node/25129

‍- இமா க்றிஸ்

.மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன்.நான் இந்த பெயரையே இப்போதுதான் கேள்வி படுகிறேன்.அதான் கொஞ்சம் பயம்.இப்போது தெளிவாக புறிகிறது

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்