கோச்சிங் கிளாஸ்

ஹலோ தோழிகளே என் மகன் 8 வயது 3வது படிக்கிறான் அவன் இனி ஒரு கோச்சிங் கிளாஸ் போக போகிறான் பள்ளியில் இருந்து நேராக அங்கே போய் விடுவான் எப்பொழுதும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் எதாவது சாப்பிடுவான் இனி கிளாஸ்க்கு போனால் அங்கு அவனுக்கு பசிக்கும் அதனால் அவன் ஸ்கூல் முடிந்ததும் சாப்பிட என்ன கொடுக்கலாம் நான் ஊட்டியில் உள்ளேன் இங்கெல்லாம் சீக்கிரம் ஆறிவிடும் காலையிலேயே சமைத்து அது மாலை சாப்பிட கஸ்டம் அதனால் என்ன செய்வது என்ன கொடுப்பது என்றே தெரியவில்லை ஏதாவது Idea கொடுங்களேன்

ஹாட்பாக்கில் போட்டுக் கொடுத்து அனுப்பலாம் இல்லயா! அத்தனை நேரம் ஆறாமல் இருக்குமா என்பது பாக்கைப் பொறுத்ததுதான். உண்வை அடைக்கும் முன் கொதி நீர் ஊற்றி சில நிமிடங்களுக்கு மூடி வைத்திருந்து அதைக் கொட்டிவிட்டு ஆவி பறக்கப் பறக்க உணவை வையுங்கள்.

சான்ட்விச் சுலபம். பழங்கள் கொடுத்து விடலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்