கண்ணில் கட்டி

எனது ம்கனுக்கு 2 கண் இமைகளிலும் கட்டி வந்துள்ளது. தற்பொழுது +2 பரீட்சைக்காகப் படித்துக் கொண்டுள்ளார். இரவு வெகு நேரம் கண் விழித்து படிப்பதால் ஏற்படும் உடல் உஷ்ணத்தினால் வருகிறதா என தெரியவில்லை. என்ன மருத்துவம் செய்தும் கண் இமைகளில் உள்ள கட்டி அப்படியே தான் உள்ளது. என்ன செய்வது?

அன்புள்ள செந்தமிழ்செல்வி!

நாமக்கட்டியைக் குழைத்து அந்த விழுதைத் தடவி வந்தால் கண்கட்டி விரைவில் சரியாகி விடும். இது அனுபவ வைத்தியம்.

தாங்கள் சொன்ன நாமக்கட்டி வைத்தியத்தையும் செய்து பார்த்தாயிற்று. சந்தனமும் குழைத்து பூசினேன். ஐ ட்ராப்ஸும் விட்டு பார்த்தேன். எனது ஹோமியோபதி மருத்துவர் முழு ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என்கிறார். ஆனால் அவன் பரீட்சைக்குப் படிப்பதால் மேற்கொண்டு ஓய்வு எடுப்பது முடியாத காரியம். மிகவும் கவலையாகவுள்ளது. இப்பொழுது அந்த கட்டிகள் சற்று சிறிதாகியுள்ளது. இருந்தும் பூர்ண குணமாகவில்லை. எனவே தான் தங்களின் ஆலோசனையை கேட்கிறேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்