தேங்காய் சமோசா

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 30 சமோசாக்கள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1,
மைதா - 200 கிராம்,
சர்க்கரை - 1 கப்,
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்,
எண்ணெய் - பொரிக்க,
நெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.


 

மைதாவை உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து, பிசைந்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயைத் துருவி, நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த தேங்காய் துருவல், சர்க்கரை, கோவா மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
மைதாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அப்பளங்களாக தேய்க்கவும்.
தேங்காய் கலவையை நடுவில் வைத்து, சமோசா போல் மடித்து, சிறிது தண்ணீர் தொட்டு ஓரம் மடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், செய்து வைத்த சமோசாக்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்