மெயில் அனுப்பினால் பதில் கொடுக்க மாட்டீர்களா?

மெயில் அனுப்பினால் பதில் கொடுக்க மாட்டீர்களா?

இப்படி அடிக்காத குறையாக கேள்வி கேட்டு பலரிடம் இருந்து எங்களுக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன. இதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுக்க விரும்புகின்றோம்.

அறுசுவை நேயர்களிடம் இருந்து எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அவற்றின் பொருளைக் கொண்டு கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

1. விமர்சனங்கள்
2. ஆலோசனைகள்
3. கேள்விகள், சந்தேகங்கள்
4. சமையல் குறிப்புகள்
5. கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்

இதில் முதல் இரண்டு வகை மின்னஞ்சல்களுக்கு, படித்தவுடனே நன்றி தெரிவித்து பதில் கொடுத்துவிடுகின்றோம். மூன்றாவது வகையான கேள்விகளுக்கு, பதில் எங்களிடம் இருப்பின் தெரிவிக்கின்றோம். இல்லையென்றால் கேள்வியை மன்றத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து பதில் கொடுக்கின்றோம். நான்காவது வகையான சமையல் குறிப்புகள் அனுப்புவோருக்கு முதலில் நன்றி தெரிவித்து ஒரு மடல் அனுப்பிவிட்டு பிறகுதான் அந்த குறிப்பினை வெளியிடுவதை பரிசீலிக்கின்றோம். கூட்டாஞ்சோறு பகுதிக்கு விண்ணப்பங்கள் அனுப்புவோருக்கும் அவரது குறிப்பினை பரிசோதித்துவிட்டு உடன் பதில் அளிக்கின்றோம்.

இப்படி எங்களுக்கு வரும் எல்லா மின்னஞ்சல்களுக்கும் (100%) நாங்கள் கண்டிப்பாக பதில் கொடுக்கின்றோம். ஒரு சில மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். உதாரணம், கேள்விகள் சந்தேகங்கள் கேட்டு வரும் மடல்கள். அவற்றிற்கு பதில் தேட கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். சில நேரங்களில் நாங்கள் மின்னஞ்சல்களை படிப்பதில் தாமதம் ஏற்படலாம். சில காரணங்களால், internet access செய்வது சில நேரங்களில் இயலாமல் போய்விடும். அந்த மாதிரி நேரங்களில் எங்கள் பக்கம் தாமதம் இருக்கலாம். ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும், பதில் கண்டிப்பாக கொடுத்துவிடுவோம்.

நேயர்கள் பதில் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட காரணம் என்ன? நாங்கள் அறிந்த காரணங்கள் இவைதான்.

1. நாங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் உங்களின் Bulk mail folder அல்லது Spam mail folder க்கு சென்றிருக்கும். இதுதான் பெரும்பாலும் நடக்கின்றது. நாங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் arusuvai.com என்ற domain ஐ தாங்கி வருவதால், yahoo போன்றவற்றில் bulk mail folder க்கு சென்று விடுகின்றது. இதனைத் தவிர்க்க வழியில்லையா? எங்கள் பக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சில நேரங்களில் subject தமிழில் இருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்களுக்கு தமிழில் subject கொடுத்து வரும் மின்னஞ்சல்களை ஆங்கிலத்தில் மாற்றிதான் பதில் அளிக்கின்றோம். அப்படியும் bulk mail க்கு சென்று விடுகின்றன. எனவே பதில் வரவில்லை என்ற குறையை உரைக்கும் முன்பு, உங்களது bulk mail folder ஐ தயவுசெய்து ஒரு முறை பரிசோதித்துவிடுங்கள்.

2. தவறான மின்னஞ்சல் முகவரி. feedback form மூலம் எங்களைத் தொடர்புகொள்பவர்கள் அங்கு மின்னஞ்சல் முகவரி என்று கேட்கப்பட்டுள்ள இடத்தில் சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும். நாங்கள் பதில் அனுப்பினால் அங்கு குறிப்பிடப்படும் முகவரிக்குதான் பதில் வரும். நிறைய பேர் இங்கு தவறு செய்கின்றனர். சிலர் முகவரியில் www. என்றெல்லாம் கொடுக்கின்றனர். இன்னும் பலருக்கு co.in, com இரண்டும் வேறு வேறு என்பது தெரியவில்லை. காரணம் இதுவாக இருந்தால், எங்கள் பக்கம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

3. நாங்கள் பதில் அனுப்பும் நேரம் எங்களது மெயில் சர்வரில் பிரச்சனை இருந்து, செல்லாமல் இருத்தல். இது சில நேரங்களில் நடந்து உள்ளது. ஆனால், இந்தப் பிரச்சனையில் மின்னஞ்சல்கள் செல்வதில் தாமதம் ஏற்படுமே தவிர செல்லாமல் இருக்காது. சர்வர் சரியானதும் தானாகவே அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கும்.

எனவே, நேயர்களுக்கு நாங்கள் பணிவுடன் தெரிவிப்பது என்னவென்றால், உங்களுடைய அனைத்து மின்னஞ்சல்களுக்கும் நாங்கள் கண்டிப்பாக பதில் கொடுக்கின்றோம். அப்படி பதில் கிடைக்கப்பெறாதவர்கள் bulk mail folder ஐ பரிசோதித்துவிட்டு அங்கும் பதில் இல்லையென்றால், மன்றத்தில் இந்த பதிவில் உங்கள் குறையை பதிவு செய்யவும். உங்களை உடனே தொடர்பு கொள்கின்றோம்.

மேலும் சில பதிவுகள்