காரப் பூந்தி -1

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு


 

அரிசி மாவை, கடலை மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பை போட்டுக் கரைக்கவும்.
கிட்டத்தட்ட பஜ்ஜி போலக் கரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பூந்திக் கரண்டியை எண்ணெய்க்கு நேராக மேலே பிடித்துக் கொண்டு ஒரு கரண்டிமாவை எடுத்துப் பூந்திக்கரண்டி மேல் ஊற்றவும்.
மாவுக் கரண்டியின் அடிப் புறத்தால், பூந்தி கரண்டியின் மேல், மாவை வேகமாக அழுத்தித் தேய்க்கவும்.
மாவு எண்ணெயில் முத்துக்கள் போல் விழும். எண்ணெய் கொள்ளும் வரை விரைந்து தேய்த்து விட்டு அரிக் கரண்டியால் கிண்டி விடவும்.
காராப் பூந்தியும் உடனே வெந்து விடும். எண்ணெயில் நுரை அடங்கி வரும் போது பூந்தியை அரித்து எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். பூந்தியைக் காகிதத்தில் கொட்டி எடுத்தால் எண்ணெய் நன்றாக நீங்கி விடும். இந்தப் பூந்தியில் மிளகாய்த் தூளையும், உப்பையும் கலந்து பிசறி வைக்கவும்.
மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகுத் தூளும் போடலாம். மிளகுத் தூள் போட்டுக் கொஞ்சம் கறிவேப்பிலையை நெய்யில் வறுத்துப் பொடித்துப் பூந்தியின் மேல் போடவும்.
முந்திரிப் பருப்பைச் சின்னதாக ஒடித்து, பூண்டு பல்லை லேசாக நசுக்கி இரண்டையும் நெய்யில் பொரித்துப் போடவும்.


மேலும் சில குறிப்புகள்