வாழ்த்துக்கள் திருமதி செந்தமிழ் செல்வி, மிக குறைந்த காலத்திற்குள் எங்களுக்கு, பல அரிய குறிப்புக்களை கொடுத்து சதம் அடித்துள்ளீர்கள், பாராட்டுக்கள்.இதேப்போல் மேலும் தொடர வேண்டி, மனமார வாழ்த்துகின்றேன்.வாழ்க உங்கள் குறிப்புக்கள்,வளர்க இன்னும் பல நூறு குறிப்புக்கள் நன்றி.
அதிவேகமாக
அதிவேகமாக குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள் மேலும் பலகுறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்
அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!
நன்றி, திருமதி. ஜுலைஹா,
மிக்க நன்றி, சகோதரி. உங்களின் அன்பும், ஆதரவும் தான் இவ்வளவு குறிப்புகள் கொடுக்க எனக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது. 100 குறிப்புகள் கொடுத்துள்ளேன், அசத்தி விட்டேனா என்பது தெரியவில்லை. நன்றி.
அன்புடன்,
செல்வி.
நன்றி திருமதி.மனோகரி
தங்களின் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி. 100 குறிப்புகள் கொடுத்து விட்டேன் என்பதே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய குறிப்புகளை நீங்கள் அந்த அளவுக்கு கவனித்து வருகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் அன்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்பின் செந்தமிழ்ச்செல்விக்கு,
அன்பின் செந்தமிழ்ச்செல்விக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி
சகோதரி அவர்களுக்கு நலமாஇருக்கிறீர்களா.வேகமாக 100 குறிப்புகள் கொடுத்து இருக்கிறீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லாம் நல்ல குறிப்புகள் மேலும் நல்ல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி அவர்களுக்கு
அன்புள்ள செந்தமிழ் செல்வி,
வாழ்த்துக்கள்...அதிவேகமாக சதம் அடித்துவிட்டீர்கள்...அதுவும், எல்லா குறிப்புகளும் வித்தியாசமாக கொடுத்து அசத்திடீங்க.......இதேபோல் இரண்டாம் சதத்தையும் சூப்பர் ஃபாஸ்டாக கொடுக்க வாழ்த்துக்கள்......
நன்றி...
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி மேடம்
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி மேடம்.
உங்களது குறிப்புகள் அனைத்தும் மிகவும் சுலபமாகவும் எளிமையாகவும் உள்ளது. மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி மேடம். மேலும் பலநூறு குறிப்புகள் எங்களுக்கு தர வேண்டும்.
செந்தமிழ் செல்வி
வாழ்த்துக்கள் செந்தமிழ் செல்வி மேடம்.
செந்தமிழே வாழ்த்துக்கள்
செந்தமிழே வாழ்த்துக்கள்.....
தமிழே நீ தந்த குறிப்புகள்
வாய்க்கு இதமாய் இருக்கிறது
வாசனையும் துளைக்கிறது!
வாயதுவும் ஒரு கணம்
உன்னை வாழ்த்த நினைக்கிறது
இன்னுமின்னும் குறிப்புகள் தந்து
நீ மென்மேலும் வளர்ந்திடுவாய்......
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!