Tamil names for some fishes

Could someone give me tamil names for King fish, Sardines,Tilapia,Smelts,catfish, Salmon and also for other fishes available in Canada. Also which fish tastes better for traditional south Indian cooking.

I have tried sardines for frying... they tasted allright but has got to be careful due to lot of bones ???
Catfish also tastes good.
Salmon will have a strong smell.. I think manoharai madam can help us on how to cook salmon as she is here for a long time... Madame... please help us...
I heard from my friends that tilapia also tastes good.. but haven't tried it yet.

Yeah.. you are correct, it would be of great help if someone could help us with the tamil names for the fishes...

Thanks
Mythili

டியர் சுபாஷினி எப்படி இருக்கின்றீர்கள்? மீனின் சுவையை தெரிந்து வைத்துள்ள அளவிற்க்கு அதன் பெயர்களை நானும் தெரிந்துவைத்துக் கொள்ளவிலை. காரணம் நமது நாட்டில் இருந்தவரையில் சமையல் செய்ததை விட சாப்பிட்டதில் தான் காலத்தை ஓட்டியுள்ளேன். ஆகவே இங்கு கிடைக்கும் ஒரு சில மீன்களை சமைத்து பார்த்து, அதன் ருசியை வைத்து நான் தெரிந்துக்கொண்ட பெயர்களை கூறுகின்றேன். பெயர்கள் சரியாக இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால் சுவையில் ஒத்துவரும்.
pomfret-வெளவ்வால் மீன்
macarel-மத்தி மீன்
belt or ribbon fish -வாள மீன்
catfisn -கெளுத்தி
sardine- கேரளத்து சால மீன்.
white fish,blue fish,king fish-கட்லா மீன் என்று கேரளாவில் அழைப்பார்கள்
Tilapia-கறி மீன் அல்லது நெய்மீன் போன்றது
snapper-ஸங்கரா அல்லது கிளிமீன்
Tuna fish-வஞ்சர மீன் போன்ற ருசியுள்ளது.
salmon -இவற்றுக்கு தமிழ் பெயர் கிடையாது.
மேற்கூறியுள்ள எல்லா வகைகளையும் செய்துப் பார்த்திருக்கின்றேன். எனக்கு பிடிக்காத மீன் வகை smelts என்ற நெத்திலியை விட சற்று பெரியதாக இருக்கும்.
மேலும் அடுத்த முறை கடைக்கு செல்லும் பொழுது வேறு ஏதாவது நம்மூரின் மீன்வகைகள் உள்ளதாவென்று பார்க்கின்றேன்.
குழம்பிற்க்கு முட்கள் நிறைந்த எந்த மீனும் குழம்பின் ருசியைக் கூட்டும்.ஆகவே குழம்பிற்க்கு முட்கள் அதிகமுள்ள மீனைக் பயன்படுத்தவும், முட்கள் அதிகமில்லாத மீனை வறுக்கவும்.
குழந்தைகள் உள்ள வீட்டில் இதை மாற்றி செய்யவும்.நன்றி

டியர் மைதிலி எப்படி இருக்கின்றீர்கள்? மீனைப் பொருத்தவரையில் என்னத்தான் சுவையைக் கூட்ட பல மேஜிக்குகளைச் செய்தாலும், நம்மூர் மீன் குழம்பிற்க்கு உள்ள சுவையைப் பெறமுடியாது அல்லவா! என்னச் செய்வது ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெறமுடியும்,ஆகவே இருப்பதை கொண்டு மனதிருப்பதி கொள்வோம்.
நீங்கள் கூறியுள்ள சால்மன் என்ற வகை மீனிற்க்கு ஒரு வித வாடை இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வாடையை சற்று குறைக்கலாம். மீனை துண்டுகள் போட்டு, நன்றாக கழுவி நீரைத் துடைத்து விட்டு உப்பையும், எலுமிச்சை சாற்றையும் ஊற்றி கலந்து வைத்து விடவும்.மசாலா தயாராகும் வரையில் ஊறினால் போதும்.அதன் பிறகு அதை குழம்பில் போடவோ அல்லது வறுக்கவோ பயன் படுத்துஙள். மேலும் வழக்கத்தைவிட உப்பு,புளி
காரத்தை சற்று அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ருசியாக இருக்கும்.
திலாப்பியா என்ற வகை மீன், குழம்பிற்க்கும், வறுக்கவும் மிகவும் ஏற்றது. குழம்பிற்க்கு அபார சுவையைக் கொடுக்கும். ஆனால் அதை சுத்தம் செய்வது தான் கடினம் மற்றபடி சுவை மிக மிக நன்றாக இருக்கும்.இன்னும் வேறேதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கவும். நன்றி.

ஹலோ சுபாஷினி, உங்களின் கேள்விக்கு மற்றுமோரு விடை. pomfrets என்ற மீன் வகையில் செய்த குழம்பு கிட்ட தட்ட நம்மூரின் குழம்பைப் போல் இருக்கும். மாங்காய் சீசனில் உங்கள் பகுதியில் இந்தியன் அங்காடி இருந்தால் பச்சை மாங்காய் கிடைக்கும். அதை வாங்கி வந்து முக்கியமாக இந்த வகை மீன் குழம்பில் போட்டு செய்துப் பார்த்த பிறகு,அதன் சுவையை மறக்காமல் கூறுங்கள், நன்றி.

எனக்கு US மீன்களின் பெயர் தெரியாது இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

எனக்கு US மீன்களின் பெயர் தெரியாது இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

எப்போதோ ஒரு சமயம் <a href="http://forumhub.com/southfood/20045.10.02.15.html" target="_blank">forumhub </a>ல் மீன்கள் பெயர்கள் குறித்த உரையாடலில் பங்கேற்றேன். அந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

<a href="http://www.arusuvai.com/fooditems/seafoods/index.html" target="_blank"> அறுசுவை பழையத்தளத்திலும் </a> மீன்களைப்பற்றி குறிப்புகள் உள்ளது. பார்வையிடவும்.

மிக்க நன்றி. அந்த குறிப்புகளுடன் படங்களும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மனோகரி அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னும் வேறு பெயர்கள் தெரிந்தால் தெரிவிக்கவும். மீன் எனக்கு பிடித்தமான உணவு.

மிக்க நன்றி மேடம்.... நான் நலமே.. நீங்கள் சொன்னவாறு செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்