ஈசி மேக்கப்

நம் முகம் பார்க்க எப்போதும் பளிச்சென்று இருக்க எந்த உடை உடுத்தினாலும் அழகாக தெரிய லேசான மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும்.

மேக்கப் போடுவது என்பது,10 நிமிடத்தில் முடியும் விஷயமாக இருக்க வேண்டும். எல்லோரும் போட்டுக் கொள்கிறார்களே என்பதற்காக நாமும் பின்பற்ற கூடாது.நமது நிறத்துக்கு தகுந்த மேக்கப் அவசியம்.சிம்பிளான மேக்கப்புக்கு அடிப்படை பொருட்கள்.
மாய்ஸ்சுரைஸிங் லோஷன் அல்லது fair & Lovely கூட போதும்.
ப்வுண்டேஷன் - சரும நிறத்துக்கு ஏற்ப
பேஸ் காம்பாக்ட் பவுடர் -
ஐ ஷேடோ
மஸ்காரா
லிப் பென்சில் மற்றும் லிப்ஸ்டிக்

மேக்கப் போடும் முறைக்கு செல்வதற்கு முன்பு சில அடிப்படை விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.மேக்கப் என்பது நமது முகத்தை பளிச்சென்று காட்ட மட்டுமே அவசியம்.அதைவிட்டுவிட்டு இல்லாத ஒன்றை மேக்கப் மூலமாக வரவழைக்க வேண்டும் என்று போட்டால் அது நன்றாக இருக்காது.சில திருமணங்களில் மணப்பெண்ணை அதிக மேக்கப் அழகாக காட்டுவதற்கு பதில் அசிங்கமாக காட்டிவிடும்.அதிக நிறமாக தெரிவதற்காக மேக்கப் போட்டால் அது நன்றாக இருக்காது.வெள்ளையாக தனியே தெரியும்.

நிறைய பேர் டால்கம் பவுடரை முகத்திற்கு போடுகின்றனர்.(சிறு வயதில் எனக்கும் அம்மா அதைதான் போட்டு விடுவார்கள்.).முகத்திற்கு முக்கியமாக பெண்கள் face Powder தான் உபயோகப்படுத்தணும்.இந்திய நிறங்களுக்கு ஏற்ற ஷேடுகள் வெளிநாடுகளில் கிடைக்கும் பிரபல பிராண்டுகளில் இருப்பதில்லை.ஒன்று அவர்கள் நிறத்திற்கு அல்லது மிகவும் கருமையான மற்றும் Tan ஷேடுகளில் தான் கிடைக்கிறது.அப்படியே சில ஷேடுகள் கிடைத்தாலும் அது முகத்தோடு சேர்ந்து இருப்பதில்லை.நம்ம ஊர் Lakme' வில் இந்திய நிறங்களுக்கு ஏற்ற ஷேடுகள் கிடைக்கும்.அடுத்ததாக Revlon.வெளிநாடுகளில் கிடைப்பதில் L'Oreal o.k.

முகத்தை கழுவி விட்டுதான் மேக்கப் போடனும்.க்ளென்சிங் மில்க் உபயோகித்த பிறகு மேக்கப் போட்டால் சிறிது நேரத்தில் எண்ணெய் வழிந்தது போன்று தெரியும்.Moisturising Lotion உபயோகித்துதான் மேக்கப் போடனும்னு அவசியம் இல்லை.இப்போது வரும் பவுண்டேஷன்கள் Moisturising Lotion சேர்ந்துதான் வருகிறது.ஏனென்றால் சில Moisturising Lotion முகத்தை எண்ணெய் பசையை உண்டு பண்ணிவிடும்.Fair&Lovely கூட போடலாம்.

வயதானவர்கள் ஐ லைனர்,மை போட வெட்கப்படுவார்கள்.அவர்கள் மஸ்காரா மட்டும் போட்டுக் கொண்டால் யாருக்கும் தெரியாது.அதே சமயம் கண்கள் அழகாக பெரிதாக தெரியும்.ஐ ஷேடோ வும் பிங்க் நிறத்தில் போடாமல் Light Brown நிறத்தில் போட்டால் யாருக்கும் நீங்கள் மேக்கப் போட்டிருப்பதே தெரியாது ஆனால் கண்களை அழகாகக் காட்டும்.மேக்கப்பின் ரகசியமே நீங்கள் மேக்கப் போட்டிருப்பது யாருக்கும் தெரியக் கூடாது.ஆனால் அழகாக இருக்க வேண்டும்.

அதிகமான மேக்கப்,High lighting மேக்கப் இதெல்லாம் சினிமா,TV யில் நடிப்பவர்களுக்குதான் பொருந்தும்.ஆனால் Party(Night) Makeup,Marriage makeup,விசேஷங்களுக்கு செல்லும் போது போடும் மேக்கப் என்பது வேறு.நேரம் கிடைக்கும் போது அதையும் எழுதுகிறேன்.

கன் இமையில் சிலருக்கு அவ்வளவாக முடி இருக்காது.அவர்கள் பொய் இமையை ஒட்டிக்கொண்டு இருக்க நேரம் இருக்காது.அப்படியே இருந்தாலும் ஆபிஸுக்கு ஒட்டிக்கொண்டு போக முடியாது.இப்போது Revlon ல் Lash Fantasy mascara என்று இருக்கிறது.அதைப் போட்டுக் கொண்டால் இயற்கையாக இருக்கும்.
Foundation தேர்ந்தெடுக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அதை கையில் போட்டுப் பார்த்து தேர்ந்துஎடுக்காமல் முகத்தில் போட்டுப் பார்த்து தேர்ந்தெடுங்கள்.கை நிறம் வேறு.முகத்தின் நிறம் வேறு.மேக்கப் போடும் போது முகம்,கழுத்து இரண்டுக்கும் போடுங்கள்.இல்லாவிடில் முகம் தனியாக தெரியும்.சிகப்பு நிற லிப்ஸ்டிக் இப்போது அவுட் ஆப் பேஷன்.அதேபோல் பிங்க் நிற ஐ ஷேடோ,பிங்க் நிற ரூஜ் போன்றவை.அந்த காலத்தில் மேக்கப் என்றாலே எல்லாரும் ரெட் லிப்ஸ்டிக்,பிங்க் ஐ ஷேடோவுடன் போட்டோக்களில் பார்க்கலாம்.லிப்ஸ்டிக்கிற்கு மெரூன் நிறங்கள் அல்லது Mauve நிறங்கள் நன்றாக இருக்கும்.லிப் பென்சிலும் லிப்ஸ்டிக்கும் ஒரே நிறத்தில் இருதால் நல்லது.வயதானவர்களுக்கும் இந்த நிறங்கள் நன்றாக இருக்கும்.அவர்கள் சிறிது குறைத்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

இப்போது மேக்கப் போடும் முறைக்கு வருவோம்.
1)முதலில் மாய்ஸ்சுரைஸிங் லோஷன் அல்லது பேஸ் கிரீமை முகம்,கழுத்தில் தடவிக் கொள்ளவும்.
2)பவுண்டேஷனை ஒரு விரலால் தொட்டு முகத்தில்,கழுத்தில் புள்ளியாக வைத்து ஒவ்வொரு இடமாக நன்றாக தேய்த்துவிடவும்.பவுண்டேஷன் லைட்டாக போட்டுக் கொண்டால் போதும்.ஒரு 5 நிமிடமாவது காத்திருக்கவேண்டும்.உடனடியாக பவுடர் போட்டால் நன்றாக இருக்காது.பவுண்டேஷன் முகத்தில் பரவ வேண்டும்.அதுவரை தலை வாருவது போன்ற மற்ற விஷயங்களை பார்க்கலாம்.
3)இப்போது பேஸ் பவுடரை பிரஷ்ஷிலோ அல்லது பஃப்பிலோ எடுத்து முகத்தில் போடவும்.
4)ஐ ஷேடோவை பிரஷ்ஷில் எடுத்து புருவத்திற்கு அடியில் உள்ள இடத்தில் ஆரம்பித்து இமை முடி ஆரம்பிக்குமிடம் வரை போடவும்.
5)மஸ்காரா போடவும்.
6)லிப் பென்சிலால் உதடுகளின் வெளிக்கோடுகளின் மேலாக அப்படியே வரையுங்கள்.
7)பிறகு அந்த கோடுகளுக்கு உட்பட்ட பகுதியில் லிப்ஸ்டிக் தடவுங்கள்.

மேக்கப் முடிந்தது.7-10 நிமிடங்கள் தான் ஆகும்.ரூஜ் தடவுவதாக இருந்தால் முக நிறத்திலேயே கன்னத்தின் பக்க வாட்டில் தடவுங்கள்.நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இது காலேஜ்,ஆபிஸ்,சும்மா வெளியே செல்லும் போது போடும் மேக்கப்.அதிக மேக்கப் போட்டால் நன்றாக இருக்காது.இது வயதானவர்களுக்கு ஏற்ற மேக்கப்பும் கூட.நம் ஊரில் வயதானவர்கள் மேக்கப் என்றாலே வெட்கப்படுகிறார்கள்.இந்த மேக்கப் முறையில் சிம்பிளாக போட்டுக் கொண்டால் யாருக்கும் நீங்கள் மேக்கப் போட்டிருப்பது தெரியாது.பளிச்சென்று உங்கள் முகம் இருக்கும்.

வணக்கம் சகோதரி தேவசேனா

உங்கள் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ளீர்கள்.

சரும நிறத்திற்கேற்ப ப்வுண்டேஷனை எவ்வாறு தெரிவு செய்வது? நன்றி

டியர் தேவசேனா
ஐரோப்பாவில் நமக்கு தகுந்த பவுண்டேசன்,பேஸ் காம்பேக்ட் பவுடர்,லிப்ஸ்டிக் அனைத்தும் தேர்வு செய்வது சிரமமாக இருக்கிரது.நீங்கள் சொல்வது போல பிரபலமான பிராண்டுகளில் கிடைப்பது இல்லை.நான் வந்த புதிதில் தெரியாமல் வாங்கி எல்லாம் குப்பைக்கு போனது தான் மிச்சம்.ரெவ்லான் பிராண்டுகளிள் கிடைப்பதாக எலுதியிருந்தீர்கள்.அதில் நிறைய்ய நிரத்தின் பெயர் இருக்கும்.மாநிரமுடைய்ய பென்கள் எதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும்.அதே போல காப்பேக்ட் பவுடரையும் சொல்ல முடியுமா.கடைகலில் அவர்களின் உதவியை நாடினால் ஒரேடியாகா லைட்டாக எடுத்து தருகிரார்கள்.இல்லாவிட்டால் இருக்கும் நிறைத்தை விட மேலும் கருப்பாக தெரியும்படி எடுத்து தருகிரார்கள்.லிப்ஸ்டிக் இப்போதெல்லாம் அடர்தியாகவும் இல்லாமல் லைட்டாகவும் இல்லாமல் உதடின் நிறத்தில் போடுகிரார்கள்.அதையும் தேடிப்பார்த்தால் மிகவும் லைட்டாக தான் கிடைக்கிறது.இப்பொலுதெல்லாம் லிப் கிலாஸ் அடித்துக் கொள்கிறார்கள்.அதைதொடர்ந்து ஒரு வாரம் உபயோகப்படுத்தினால் உதடின் நிறம் கருமை ஆகிவிடுகிரது.( பவுண்டேசன்,காம்பேக்ட் பவுடர் இவை எல்லாம் பூட்ஸ் கடைகளில் நெ 7,பிராண்ட் ,மேக்ஸ் பேக்ட்ர்,இதை எல்லாம் முயர்ச்சித்து இருக்கிரேன்.)முடியும் போது பதில் தாருங்கள் .நன்றி.

sajuna

தற்போது உடனடியாக நான் உபயோகப்படுத்தும் நிறங்களை மட்டும் தான் எழுத முடியும்.ஷேடுகளின் சரியான பெயரை நாளை கண்டிப்பாக எழுதுகிறேன். எனக்கு தெரிந்த வரையில் Max Factor போட்டால் முகத்தில் இயல்பாக இருப்பதில்லை. இந்திய சருமங்களுக்கு Revlon,L'Oreal,Lakme', Maybelline தான் நல்லா இருக்கு.Clinique கூட பொருத்தமாக இருப்பதில்லை.ஆனால் Christion Dior ல் சில ஷேடுகள் கிடைக்கிறது.என் அடுத்த பதிலில் அனைத்து நிறங்களையும் எழுதுகிறேன். Lipstick,Lipgloss,Mascara,Eye Liner colours அத்தனையும் எழுதுகிறேன்.நான் எப்போதும் இந்தியாவிலிருந்து Lakme' வாங்கி வந்து விடுவேன் அல்லது எப்படியாவது யாரிடமாவது அனுப்பி விடுவார்கள்.ஏனென்றால் அவை மிகவும் சரியான ஷேடுகள்.முகத்தில் இருப்பதே தெரியாது.உதட்டு நிறங்களில் கிடைக்கும் லிப்ஸ்டிக்குகள் பெரும்பாலும் மெரூன்,பிரவுன்,டார்க் Mauve நிறங்களை அடிப்படையாக கொண்ட ஷேடுகள்.இந்தியர்கள் கண்டிப்பாக லைட் ஷேட் லிப்ஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்.ஐ லைனர் Black,Brown,Brown Black உபயோகித்தால் நன்றாக இருக்கும்.எனது விழியின் நிறம் பிரவுன் என்பதால் இரண்டு நிறங்களும் ஒத்துப் போகும்.ஆனால் கருப்பு விழிகள் கொண்டவர்களுக்கு Black தான் நன்றாக இருக்கும்.

டியர் தேவா மேடம்,
நான் கொஞ்ச நாட்களாக மேக்கப் போடுகிறேன், ஆனால் அதனால் எனக்கு முகப்பரு வருகிறது. மேக்கப் போடுவதை நிருத்தினால், பரு வருவதில்லை. இதற்கு உங்களுக்கு தீர்வு தெரிந்தால் சொல்லவும். முறையாக ஆபீஸில் இருந்து வந்தவுடன், க்லென்சர் போட்டு முகத்தை சுத்தம் செய்கிறேன், இருந்தும் முகப்பரு வருகிறது. நான், மாய்சரைசர் போட்டு, பிறகு பவுன்டேசன் அப்ளை செய்து, 5 நிமிடம் கழித்து பேஸ் காம்பாக்ட் பவுடர் போடுகிறேன். Avon products நான் உபயோகிக்கிறேன்.

நன்றி,
சுகன்யா

டியர் தேவசேனா
இங்கு உள்ள குளிருக்கு மாஸ்சுரைஸிங் லோஷன் போடனும்ன்னு சொல்றாங்க ஆனால் என் முகம் எண்னை வழியும் சருமம் கொன்டது.மாய்ஸ்சர் போட்டால் பரு வந்துவிட்டது.இந்தியாவில் இருக்கும் போது பருவெல்லாம் வந்ததே கிடையாது.இந்த ஊர் மாய்ஸ்சர் ஒத்துக்கொல்லவில்லை என்று நினைக்கிரேன்.ஸ்கின் டாக்டரிம் காட்டியதர்க்கு சிறு வயதில் பரு வராவிட்டால் 30 வயதிர்க்கு பின்பு ஒரு சிலருக்கு ஒயிட் ஹெட் (பிளாக் ஹெட்,ஒயிட் ஹெட் அதும் பரு வகையை சார்ந்த்துதான் என்று சொல்கிறார்.)வரும்னு சொன்னார்.என் முகத்தில் பரு போல பெரிதாக இல்லை .வேர்குரு போல கண்னுக்கே தெரியாமல் இருகும்.என்னுடைய்ய கேள்வி இங்கு கட்டாயம் சருமத்தை குளிரில் இருந்து காக்க முகத்திர்க்கு மாய்சர் போடனுமா?அப்படி என்றால் இங்கு நம்ம ஊர் பேர் அன்ட் லவ்லி கிடைக்கிரது அது போடலாமா?நிங்கள் சொல்வது போல நம்ம ஊர் கிரிம் நல்லது போல!உங்கலுக்கு நேரம் கிடைக்கும் போது பவுண்டேசன்,காப்பேக்ட் பவ்டரின் நிரத்தின் பெயரையும் எந்த பிராண்டில் கிடைக்கிரது என்று சொல்லுங்கல் மேடம்.உங்கள் உடனடி பதிலுக்கும் எல்லாம் எலுதுவதாக தெரிவித்தமைக்கும் மிகுந்த சந்தோஷம்.நன்றி.

sajuna

dear friends

Blackheads remover கடைகளில் இருக்கும் (Deep cleansing Nose strips)உபயோகிக்கலாமா? பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கும் தெரிந்தால் சொல்லுங்கலேன்.வீட்டிலேயே செய்யும் இயற்க்கை முறை இருந்தாலும் சொல்லுங்கல்

sajuna

dear sajuna
நீங்கள் கூறுவது போல எனக்கும் முகத்தில் இருக்கிறது.நானும் மாஸ்சுரைஸிங் லோஷன் பயன்படுத்தினேன்.குளிர்காலத்தில் முகம் உலர்ந்துவிடும் அப்போழுது facial க்ரீம் போட்டால் சரியாகி விடும். ஆனால் இப்போதெல்லாம் முகம் வறண்டு இருப்பதொடு இல்லாமல் வேர்குரு போல சிகப்பு நிறத்தில் சிறிய புள்ளிகள் இருக்கிறது.
இதை நீக்க வழி இருந்தால் தெரிந்தவர்கள் கூறுங்கள்.நன்றி.

முகம் வறண்டு போகும் போது தான் இந்த சிவப்பு புள்ளிகள் தோன்றும்.இதற்கு நான் vitamin e (at night &indoors/please dont use when you are out in a sunny day) உபயோகித்தேன்.நல்ல பலன் கிடைத்துள்ளது. 2drops of almond oil with 1 drop of vitE oil will also help

hai Hasma,
நீங்கள் கொடுத்த குறிப்பு எனக்கு மிக உபயோகமாக இருக்கும் .மிக்க நன்றி.

இதுவரை எனக்கு பரு வந்ததில்லை.ஏனென்று தெரியவில்லை.ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி முகத்தில் சின்ன சின்னதாக வேர்க்குரு மாதிரி வந்தது. எனக்கு கிளென்சிங் மில்க் உபயோகித்ததால் முகம் ஒரு மாதிரி டல்லாகி,எண்ணெய்ப்பசையுடன் ஆகியது.மேலும் நான் மாய்ஸ்சுரைசிங் லோஷனும் உபயோகப் படுத்த மாட்டேன்.இரவு தூங்கும் போது மட்டும் தான் உபயோகிப்பேன்.அதுவும் பேபி லோஷன் தான்.ஏனென்றால் கிளென்சிங் மில்க் மிகவும் எண்ணெய்ப்பசையை உருவாக்கிவிடுகிறது.ஆனால் நிறைய பேர் கிளென்ஸிங்க் மில்க் தான் உபயோகிக்கிறார்கள்.இது உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் மிகச் சரியானதாக இருக்கும்.

நான் எப்போதும் Eskinol Cleansing solution தான் உபயோகிக்கிறேன்.எனது தோழிகளிடம் சொல்லி அவர்களும் இதை உபயோகிக்க ஆரம்பித்த பிறகு பருத்தொல்லை இல்லை என்கின்றனர்.இது ஒரு பிலிப்பைன்ஸ் தயாரிப்பு.இதில் பல வகை உண்டு.பார்ப்பதற்கு தண்ணீர் போல இருக்கும்.உபயோகிப்படுத்தி பார்த்தால் நிச்சயம் வித்தியாசத்தை உணருவீர்கள்.இதில் Classic Cleansing Solution சாதாரண சருமத்திற்கும் முக அழுக்கை நீக்குவதற்கும்,Acne treatment Solution பருக்களுக்கும்,Cool cucumber- மிகவும் மைல்ட் ஆனது. முதல் முதலாக உபயோகிப்பவர்களுக்கும் ஏற்றது. மேலும் சன் டான் போக்குவதற்காக தனியாகவும் கிடைக்கிறது.Asian அல்லது பிலிப்பைன்ஸ் கடைகளில் கிடைக்கும்.மலேஷியா போன்ற நாடுகளில் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.பஞ்சில் நனைத்து முகம் கழுத்து எல்லா இடங்களிலும் துடைக்கவும்.

இங்கேயும் குளிர் காலங்களில் தூங்கும் போது மட்டும் முகத்திற்கு Baby Moisturising Lotion இரவு நேரங்களில் மட்டும் உபயோகிப்பேன்.குளிப்பதற்கு முன்பு Baby Oil தடவி குளிக்கவும்.உடம்புக்கு மட்டும் தான் Moisturising Lotion எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதுண்டு.Baby Products உபயோகித்தால் அலர்ஜி ஏற்படுவது குறையும்.

மேலும் சில வகை பிராண்டுகள் நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும். கடைக்கு செல்லும்போது சிறிது பஞ்சுத்துண்டுகளை எடுத்து செல்லுங்கள்.ஏனென்றால் எல்லா கடைகளிலும் Testing pad,Buds வைத்திருக்க மாட்டார்கள்.எக்காரணம் கொண்டும் Tester ல் உள்ள பிரஷ்,பஃப் ஐ உபயோகப்படுத்தாதீர்கள்.உங்களுக்கு சரியான நிறமென்று கருதும் பவுண்டேஷன் அல்லது பவுடரை உங்கள் முகத்தில் தடவிப் பாருங்கள்.நன்றாக தேய்த்து விடுங்கள்.உங்கள் ஷாப்பிங்கை முடிக்கும் வரை முகத்தில் விட்டு வையுங்கள்.நீங்கள் நன்றாக தேய்த்து விடுவதால் நிச்சயம் தனியாக தெரியாது.அப்படி தெரிந்தால் அது உங்களுக்கு ஏற்ற நிறமும் இல்லை.எப்போதும் தேர்ந்தெடுக்கும் அன்றே வாங்காதீர்கள்.முகத்தில் விட்டு வைத்து,அலர்ஜி ஏற்படுத்துகிறதா என்று பார்த்து,ஷாப்பிங் செய்யும் போதே அங்கே உள்ள கண்ணாடியில் அவ்வப்போது பார்த்து உங்கள் முகத்தில் நன்றாக பொருந்தி இருக்கிறதா என்று பாருங்கள்.இப்போது எல்லா கடைகளிலும் Tester இருக்கிறது.முகம் முழுவதும் வேண்டுமானாலும் உபயோகித்து பாருங்கள்.முக்கியமாக Makeup சமாச்சாரங்களை வாங்க செல்லும் போது சுத்தமாக முகம் கழுவி விட்டு எந்த Makeup ம் இல்லாமல் செல்லுங்கள்.அப்போதுதான் சரியான நிறங்களை தேர்ந்தெடுக்க முடியும்.இல்லாவிடில் ஒவ்வொரு முறையும் 40$,50$ கொடுத்து வாங்கி பிறகு குப்பையில் தான் போய் சேரும்.
லிப்ஸ்டிக்கிற்கு buds ஐ உபயோகப்படுத்தி போட்டு டெஸ்ட் செய்துக் கொள்ளலாம்.மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் ஐ நோஸ் ஸ்டிரிப் கொண்டு எடுக்கலாம்.ஆனால் அதை விட சிறந்த வழி முகத்தை ஃபேஷியல் செய்யும் போது எடுப்பதுதான்.முகத்தில் ஃபேஸ் க்ரீம் தடவி நன்றாக மசாஜ் செய்து ஆவி(ஸ்டீம்) பிடித்த பிறகு அதற்கு என்று உள்ள கிட் வாங்கி அல்லது ஸ்பூனின் பிடி போல் உள்ள கூர்மையில்லாத தட்டையான முனை கொண்டு கண்ணாடியை பக்கத்தில் நல்ல வெளிச்சத்தில் வைத்து கொண்டு எடுக்கவும்.

மேலும் குளிர் காலத்திற்கு கட்டாயம் Moisturising Lotion உபயோகிக்க வேண்டும்.நான் மேலே சொன்னது போல் இரவில் மற்றும் குளிக்கும் முன் முகத்திற்கும்,எல்லா நேரங்களும் உடம்பிற்கும் உபயோகப்படுத்தி பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்