T-shirts முதல் jackets வரை

அன்பு சகோதரிகளே நாம் விரும்பி அணியும் ஜீன்ஸ்ஸுகளுக்கு, மேச்சிங்காக அணியும் டாப்ஸ்ஸுகளைப் பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
ஜீன்ஸ்ஸுகளுக்கு T- shirts மற்றும் tops என்று பார்த்தோமானால் ஜீன்ஸ் மேல் தனியாக போடுவதற்கென்றும், layers சாகப் போடுவதற்க்கென்றும், jackets போடுவதற்க்கென்றும், பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.இதில் கூட நம்முடைய உடலமைப்பிற்க்கு ஏற்றவாறு வாங்க வேண்டும்.

ஸ்லிம்மாக இருப்பவர்கள் v neck தவீர்க்க வேண்டும். இவற்றால் உடலமைப்பு, மார்பகங்கள் மேலும் குறுகியுள்ளதுப் போல் காட்ச்சியளிக்கும். ஆகவே வட்டமான கழுத்துடைய்ய T-shirts தான் அவர்களுக்கு ஜீன்ஸுடன் பொருத்தமாக இருக்கும்.பிலேயினாக தேர்வுச் செய்யாமல் ஏதாவது டிசைன்கள்,எழுத்துக்கள், ஸ்ட்ரைப்ஸ்,போன்ற டிசைனாக தேர்வுச் செய்யலாம்.
மேலும்.layers போடும் பொழுது முதலில் நீள்வட்டம், அணிந்து அதன் பிறகு பிடித்தமான வடிவங்களை அதன் மீது போட்டுக் கொள்ளலாம்.கலர்ஸ் என்று பார்க்கும் பொழுது எப்பொழுதும் contrast நிறங்களில் blouse அணிந்தால் மிகவும் எடுப்பாக இருக்கும்.
அதேப் போல் jackets இன் நிறம் ஜீன்ஸ்ஸின் நிறத்துக்கு நேர்மாறாக இருந்தால் அழகாக இருக்கும்.
jacket அடியில் அனியும் blouse கள் நல்ல தரமான காட்டனாக இருந்தால் நல்லது.அடியில் இருந்தாலும் வெளியில் தெரியும்பொழுது பார்வைக்கு அழகாக தெரிய வேண்டும்.
இதிலும் கட்டாயம் v neck தவிர்த்து, வட்டம், அல்லது turtle neck அணிந்தால் நல்லது.
ஆனால் கட்டாயமாக டர்டில் நெக்கை தனியாக ஜீன்ஸுகளுடன் அணிவதை தவிர்கலாம்,
jacket போடும் பொழுது ஜீன்ஸ்சுகளுடன் நல்ல பெரிய பெல்டுகளும் அணிந்தால் அழகாக இருக்கும்.
பொதுவாக ஸ்லிம்மானவர்கள் ஜீன்ஸுகளுக்கு பிலவுஸ் அணியும் பொழுது தனியாக blouse மட்டும் அணியாமல் layers ஆகவோ அல்லது jacket டுடன் அணிந்தால் style ஆக இருப்பீர்கள்.

எடைகூடியவர்கள் ஜீன்ஸுகளுடன் போடும் T-shirts களில் v-neck தான் அழகைத் தரும். மேலும் வட்டக்கழுத்து,நீள்வட்ட கழுத்துக்களையும் அணியலாம்.
ஜீன்ஸ்ஸுகளின் கலருக்கு ஏற்றவாறு டார்க் கலர்களை தேர்வுச் செய்தால் நல்லது. கான்ட்ராஸ்ட் கலர்களை தவிர்ப்பது நல்லது.plain னாக இல்லாமல் சிறிய டிசைன்களுடன் இருந்தால் நல்லது. குறுக்காக உள்ள ஸ்டிரைப்ஸ்ஸை தவிர்த்து விட வேண்டும். இது மேலும் கூடுதலாக எடைய்யை எடுத்து காட்டும்.
T-shirts களின் நீளம் பட்டக்ஸ்ஸை மூட வேண்டிய அவசியம் இல்லை. கிராட்ச்சின் அளவிற்க்கு மட்டும் இருந்தால் போதும். அப்பொழுது தான் அழகாக இருப்பீர்கள்.
மேலும் சட்டையின் பக்க வாட்டத்தில் cuts இருக்க வேண்டும். அதனால் இடுப்பை இழுத்துப் பிடிக்காமல் இருக்க உதவும்.
அதேப்போல் jackets களை அணியும் பொழுது மிகவும் மெல்லியதான தரமான காட்டனில் வரும் blouse போடலாம்.close neck காக இருந்தால் நல்லது. turtle neck கை தவிர்த்து விடலாம்.மேலும் லேஸ் வைத்து தைத்த blouse களில் கிளாமராக தெரிவீர்கள்.
கைகளின் நீளத்தைப் பார்த்தோமானால் முழங்கையளவு நீளமாக இருந்தால் மிகவும் நல்லது. இவைகளால் பிளவுஸ்கள் உள்ளுக்கு மேல் நோக்கி இழுத்துக் கொண்டிருக்காமல் இருக்கும்.
Layers களுக்கு பதில் layers மாதிரியான டாப்புகள் கிடைக்கின்றது,அதை ஜீன்ஸுடன் அணிந்தால் மிக மிக அழகாக இருக்கும்.
முக்கியமாக Extra large பக்க மட்டும் போகாதீர்கள். நீங்கள் குறைந்த பட்சம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்கின்றீர்களோ அதே section ன்கு மட்டும் சென்று பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடித்தமான அளவுகளுடன். அமையும்.

மீடியமான body build உடையவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவர்களின் உயரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ரவாறு ஆடைகளை தேர்வுச் செய்யலாம்.
இவர்களுக்கு பெரும் பாலும் சட்டையானாலும், ஜீஸானானும் petite என்ற அளவுகள் சரியாக இருக்கும். ஆகவே இவர்கள் நேரிடையாக அந்தப் பகுதிக்கு சென்று அளவுகளை எளிதாக தேர்வுச் செய்துக் கொள்ளலாம்.

கடைக்கு போகும் போது ஆடைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஓரளவிற்க்கு கற்ப்பனைச் செய்து தான் போக வேண்டும். அதிலும் நம்மிடம் இல்லாத style,colour போன்றவற்றை மட்டும், கருத்தில் கொண்டுச் கடைக்கு சென்றால் ஒரு குழப்பமும் ஏற்ப்படாது.
ஆகவே ஆடை அணிவதில் நாம் காட்டும் ஆர்வத்தைவிட, அதை வாங்குவதில் தான் மிகுந்த கவனம் காட்ட வேண்டும் என்பது என் கருத்து. இதைக் குறித்து எந்த விதமான சந்தேகங்களையும் சகோதரிகள் கேட்கலாம்.நன்றி.

dear manohari மேடம்
உங்கள் கருத்து அனைத்தும் super.மேலும் நீங்கள் எழுதும் விதம் மிகவும் super.நீங்கள் all in all ராணிதான் சந்தேகமே இல்லை.

Hi Manohari,கை, கால் மொத்தமாக உள்ளவர்கள் எப்படியான blouse & jeans போடலாம். எனக்கு 1/2 skirt, three quarter ஒன்றும் போட முடியாமல் உள்ளது. கால் மொத்தமாக இருப்பதால் அசிங்கமாக உள்ளது. Please advise me that which one suit for me.

மேலும் சில பதிவுகள்