பிரெட் பீட் மசாலா

தேதி: March 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பிரெட் பீட் மசாலா
பிரெட் - 6
பட்டாணி - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
வெங்காயம் பெரியது - 250 கிராம்(இதில் 100 கிராம் மட்டும் வட்டமாக நறுக்கி வைக்கவும்)
பச்சை மிளகாய் - 6
எழுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
கசகசா - 1 மேசைக்கரண்டி
ஏலம் - 2
கிராம்பு - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்


 

முதலில் பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தக்காளி,பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கசகசா,ஏலம்,கிராம்பு,இஞ்சி,பூண்டு இவற்றை அரைத்து வைக்கவும்.

பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்,பின் பச்சை மிளகாய்,தக்காளியை போடவும் நன்கு வதங்கியதும் வேகவைத்த பட்டாணியை போட்டு வதக்கி அரைத்த மசாலா விழுதை போட்டு கிளறி உப்பு சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கெட்டியானதும் இறக்கி எழுமிச்சை சாறு ஊற்றி கிளறி வைக்கவும்.

பின் ஒரு பிரெட்டின் மீது இந்த கலவையை வைத்து அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி,பின் வட்டாமாக நறுக்கிய வெங்காயத்தை வைத்து மேலே இன்னொறு பிரெட்டை வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்