1 year baby

my 1 year baby never takes milk. I tried to feed him formula upto 1 year. He never took more than 2 sips. I tried by adding diff. falvours. Result is the same. He didn't take. After he completed his first year, I started trying organic whole milk. He is not taking this too. I am trying constantly.

I am breastfeeding. Atleast he is drinking my milk. He is looking slim. Even for having solid food I am struggling. He is not taking idli, dosai etc.

I tried to give cheese. He is not liking that too. He takes dal-rice in for the lunch.

Can anyone tell me what can I give him.(for breakfast, lunch & dinner)

consulted with his doctor, he says "he is alright. every baby different." But I am worried.

Please, can anyone help me? Please tell me what should a 1 yr baby can eat?

ஹலோ ஸ்ரீதேவி, ஒரு வயது குழந்தைக்கான உணவு முறைகளைக் கேட்டுள்ளீர்கள். உங்கள் பிள்ளை இன்னும் தாய் பால் குடிக்கின்றார் என்று படித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த காலத்தில் கூட உங்களைப் போன்ற தாய்மார்கள் இருக்கின்றீர்கள் என்று அறுசுவையின் மூலமாக காணும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க தாய்குலம். வளர்க உங்கள் செல்வங்கள் என்று வாழ்த்துக்கின்றேன்.

என்னைப் பொருத்தவரையில் குழந்தைகளுக்கு காலை, மத்தியம்,மாலை என்ற வரையரை இல்லை என்று தான் கூறுவேன். காரணம் குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையானது, ஆகவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் உணவு சில நேரங்களில் விரைவில்ஜீரணித்து விடும். சில நேரங்களில் ஜீரணிக்க அதிக நேரமெடுக்கும்.ஆகவே தாய்மார்கள் தங்கள் குழந்தையின் பசியைப் பொருத்து கால வரையின்றி உணவைக் கொடுப்பதால் அவர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நேரம் பார்த்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

மருத்துவர் கூறுவதுப் போல் எல்லாக் குழந்தைகளின் உடல் எடை ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.ஆகவே உங்கள் குழந்தை நல்ல ஆரோகியமாக இருப்பதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துவது தான் நல்லது.இதற்க்காக நீங்கள் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை.

சில குழந்தைகள் தாய்பால் குடிக்கும் பொழுது புட்டி பால் குடிக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் பாலை வேறு விதங்களில் கலந்து கொடுக்கலாம். உதாரணமாக பால் சோறாகவோ, இட்லியை பாலுடன் ஊறவைத்தோ பிசைந்து கொடுக்கலாம். ஒரு வயதில் சீரியல்ஸ் தாராளமாக கொடுக்கலாம். இவ்வாறு சீரியல், பழச்சாறு,காய்கறி சூப் தயாரிக்கவும் சேர்த்துக் கொள்ளலாம். ஆகவே நீங்கள் பாலை குழந்தையின் உணவுடன் சேர்த்துக் கொடுத்து விட்டால் அதன் சக்தி அவருக்கு சென்றடைந்து விடும். இரவில் தினமும் பால் சோறு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள்.பெரியவரானப் பிறகும் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் நல்லது. நன்றி.

திருமதி மனோஹரி அவர்களுக்கு மிகவும் நன்றி. மேலும் ஒரு ச்ந்தேகம். Cheese கொடுக்கலாமா? எந்த வகை கொடுக்கலாம்?

ஹலோ ஸ்ரீதேவி, உங்கள் குழந்தைக்கு தராளமாக சீஸ் கொடுக்கலாம். நீங்கள் சான்வீச்சுக்கு பயன்படுத்தும் எல்லா வகையான சீஸையும் கொடுக்கலாம்.சேதார்(cheedar) சீஸ் பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஆகவே பெரிய கட்டியாக வாங்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுத்தால் சுவை நன்றாக இருக்கும். பொதுவாக சீஸை தனியாக கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிடாது. ஆகவே பழங்களுடன் கலந்தும் கொடுக்கலாம்.முயற்ச்சி செய்துப் பாருங்கள்.நன்றி.

ஹலோ Sridevi, எனக்கும் இதே problem. எனது மகளுக்கு 1 வயது. அவளும் பால், formula எதுவும் குடிக்க மாட்டாள். நான் Breastfeed பண்ணுகிறேன். இட்லி, தோசை சாப்பிடமாட்டாள். கவலையாக உள்ளது.

இப்போது மனோகரி மேடம் சொன்னதுபோல் கடைபிடிக்கின்றேன். நன்றி.

Hi sridevi,

உங்கள் மகன் ஆக்டிவ்வாக இருந்தால் கவலை வேண்டாம் .கேழ்வரகு கூழ் ,flavoured யொகட்,காரட் ஜுஸ் வித் மில்க்,ஓட்ஸ் இன் சூப்,வேகவைத்த முட்டை கொடுக்கலாம்.

வெரும் பருப்பு சாதம் என்று கொடுக்காமல் 4tsp அரிசி,1tsp து.பருப்பு,1tsp பொங்கல் பருப்பு,2 துண்டுகள் பீன்ஸ் ,சிரிய துண்டு காரட் ,கோஸ் 1tsp,சின்ன வெங்காயம் 2, சிரிய துண்டு தக்காளி ஒரு பின்ச் சீரகம்,பெருங்காயத்தூள் செர்த்து நன்கு கொழைய வேகவைத்து உப்பு சேர்த்து கடைந்து நெய் போட்டு கொடுக்கலாம்.

அரிசி,பருப்புடன் காய்கறி செர்காமல்,2 அ 3 பாலக் இலையை செர்த்தும் செய்யலாம்.
என் மகனுக்கு இப்படித்தான் கொடுத்தேன் .நீங்களும் டிரை பண்ணுஙக .
நன்றி

dear Manohari ma,am, thank u very much for all of your suggestion. Sorry for late response. I am not getting time to type in Tamil. Evennow, I am typing in English since I am not getting time.

Thanks for your suggestions. I am giving falovred yogurd, spinach rice etc. Thank u very much for your valuable suggestions.

மேலும் சில பதிவுகள்