காலணிகளை தேர்வுச் செய்யும் முறைகள்.

காலணிகள் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கின்றதா என்று பார்ப்பதற்க்கு பதிலாக நம் பாதங்களுக்கு சரியான அளவாக இருக்கின்றதா என்று பார்த்து வாங்குவது நல்லது.

ஷூ, பூட்ஸ்,ஸ்லிப்பர், ஹீல்ஸ், போன்ற எந்த விதமான காலணிகளை வாங்கப் போகும் பொழுது காலை நேரத்தைத் தவிர்த்து விட்டு, அதற்க்கு பதிலாக மத்தியம் அல்லது மாலை நேரத்தில் சென்று அணிந்துப் பார்த்து வாங்கும் அளவே சரியானதாக இருக்கும். காரணம் காலை நேரத்தை விட மாலையில் நமது பாதங்களின் அளவு சற்று வீக்கமாகவோ அல்லது சற்று பருமனாகவோ இருக்கும்.இந்த நேரத்தில் போட்டு பார்த்து வாங்குவதால் காசையும் கொடுத்து கடியையும் வாங்காமல், தவிர்த்து விடலாம்.

அதுப் போல் நமது பாதங்களின் அளவுகள் பெரும்பாலும் ஒன்ருக்கொன்று மாறுபட்டிருக்கும். அதில் சற்று பெரியாக உள்ளது போல் தோன்றும் பாதத்தில் மட்டும், போட்டு பார்த்து அளவை தேர்வுச் செய்வது நல்லது.
அமர்ந்து பார்த்து அளவை தேர்வுச் செய்யக் கூடாது. நின்று பார்த்து தான் அளவை தேர்வுச் செய்ய வேண்டும்.
பாதத்தின் பெரு விரலுக்கும், காலணியின் முனைக்கும் கிட்ட தட்ட கட்டை விரலின் அகலத்திற்க்கு இடைவெளியிருக்கும் அளவே சரியான அளவாக இருக்கும்.
விலை சற்று கூடியிருந்தாலும் பெரும் பாலான காலணிகள் தோலினாலானதோ, அல்லது அதைப் போன்ற மென்மையான பொருட்களால் தயாரான காலணிகள் அணிவது பாதங்களுக்கு மிகவும் நல்லது.
இருக்கமாக அணியும் காலணிகளை தவிர்த்து விட வேண்டும்.
ஒரே காலணியை வாங்கி பல இடங்களில் பயன் படுத்தக்கூடாது.
பாத்ரூமிலிருந்து, வாக்கிங் வரையில் அதுஅதற்கென்று இருக்கும் காலணிகளைத்தான் அணியவேண்டும்.

அலுவலகங்களுக்கு மிக்கவாறு trousers தான் அணியநேரிடும். ஆகவே அவற்றில் ஒன்றை அணிந்துச் சென்று காலணியை வாங்குதல் நல்லது.
காலணியின் முனையும், ஹீல்ஸும் மட்டும் கண்களுக்கு தெரியும் படியாக இருத்தல் அவசியம்.
அதேப்போல் skirts, மற்றும் jeans போன்ற உடைகளுக்கு பூட்ஸ்தான் பொருத்தமாக இருக்கும். அவைகள் வாங்கப் போகும் பொழுதுக் கூட,அந்தந்த உடைகளை அணிந்துச் சென்று வாங்குவதால் பிறகு குழப்பம் ஏற்ப்படாது.
புடவைகளுக்கு கூட கேன்வாஸ் போன்ற டிசைனர் ஷூக்கள் பட்டுப் புடவைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும்.ஆகவே இதுப் போன்ற ஷூக்கள் கண்ணில் பட்டால் உடனே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.காரணம் நமக்கு தேவைப் படும் பொழுது சில நேரங்களில் கிடைக்காமல் போய்விடும்.
விருந்தினர் வீடுகளுக்கோ, டாக்டர் ஆபீஸ் போன்ற, இடங்களுக்கென்று இடத்திற்கேற்றவாறு காலணிகளை தேர்வுச் செய்து அணிவதால் அசெளகரியம் ஏற்ப்பட வாய்ப்பிருக்காது.
உல்லாசப் பயணங்களின் போது கூட, பூட்ஸ் போன்ற கணமான காலணிகளை தவிர்த்து, எளிதில் அகற்றக் கூடியதான ஷூக்களை அணிந்தால் பயணம் உல்லாசமாக இருக்கும்.
முக்கியமாக வாக்கிங் போகும் பொழுது அணியும் ஸ்னீக்கரையும் நல்ல தரமானதாக, குஷன் போன்ற அமைப்பையுடையதாக பார்த்து தேர்வுச் செய்வதால், இந்த வாக்கிங்கினால் மனத்திற்க்கு மட்டுமல்ல, உடலுக்கும் அலுப்பு தடாமல் இருக்கவும் வய்ப்புள்ளது.

விலை மலிவு என்று நிறைய்ய காலணிகளை வாங்குவதற்க்கு பதிலாக, விலை அதிகமானாலும் நல்ல தரமான காலணிகள் ஒரு சில இருந்தாலும் அதனால் நட்டம் வராது என்பது என் கருத்து.
இவ்வாறு பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலணிகளை அணிவதால்,நாள் முழுவதும் நமது உடலை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பாதங்களினால் கூட பின்னாலில் பிரச்சனை வராமல் தடுக்கலாம். நன்றி.

மேலும் சில பதிவுகள்